புலிக்கொடி விவகாரத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது

முல்லைத்தீவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த புலிக்கொடி விவகாரத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குறித்த சந்தேகநபர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியபோது, வைத்தியசாலை வளாகத்தில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த இவர், தமிழீழ... Read more »

குடும்பத்தலைவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல்

கொக்குவில் தாவடி தெற்குப் பகுதியில் குடும்பத் தலைவர் ஒருவர், கும்பல் ஒன்றால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டார் என்று சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளானவரே இந்த முறைப்பாட்டை வழங்கியதுடன், அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. “தாக்குதலுக்குள்ளான... Read more »

யாழ்.பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து: இருவர் படுகாயம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இரு மாணவ குழுக்களுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர். காயமடைந்த மாணவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஜயசூரிய (வயது -26) மற்றும் சண்... Read more »

சிறுத்தை கொல்லப்பட்ட விவகாரம்: மேலும் நால்வர் கைது

கிளிநொச்சி, அம்பாள்புரம் பகுதியில் சிறுத்தையொன்றை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில 23,26,22 மற்றும் 24 வயதான சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும்... Read more »

பேருந்தில் மதுபோதையில் பெண் பயணி ஒருவருடன் தகாத முறையில் நடக்க முயன்ற இராணுவச் சிப்பாய்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி சென்ற பேருந்தில் பயணித்த இராணுவச் சிப்பாய் ஒருவர், மதுபோதையில் பெண் பயணி ஒருவருடன் தகாத முறையில் நடக்க முயன்ற குற்றச்சாட்டில் மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மாங்குளத்தில் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் பெண் பயணி முறைப்பாடு வழங்க மறுத்ததால்,... Read more »

கிளைமோர் மீட்பு: 4 சந்தேகநபர்களும் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம்

கிளைமோர், விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக்கொடி என்பவையுடன் முச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டமை மற்றும் அதனைத் தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டமையடுத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வருகை தந்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் பொறுப்பேற்றதுடன்,... Read more »

சிறுத்தை கொலை: வனஜீவராசிகள் திணைக்களத்தால் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை அடித்துக் கொல்லப்பட்டமை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களமே கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. சிறுத்தையை உயிரிடன் மீட்கும் தமது பணிக்கு கிராமத்தைச் சேர்ந்த சிலர் இடையூறு விளைவித்தனர் எனவும் அரியவகை வன விலங்கை சித்திரவதைக்குட்படுத்தி சிலர் அடித்துக்... Read more »

சுமந்திரன் எம்.பியை கொலை செய்ய மீண்டும் முயற்சி?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்யும் நோக்குடன் முன்னாள் போராளிகள் சிலர், புலம்பெயர் தமிழர்கள் சிலரால் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர் என இராணுவ புலனாய்வுப் பிரிவு தகவல் வழங்கி 4 நாள்களுக்குள் கிளைமோர் குண்டு மற்றும் அதனை மறைந்திருந்து இயக்கும் கருவிகள் என்பன... Read more »

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் கொடி, 20 கிலோ கிளைமோர், கிரினைட்டுகளுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் கொடியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை விடுதலைப்புலிகளின் கொடியுடன் மூவர் முச்சக்கர வண்டியொன்றில் பயணம் மேற்கொண்டவேளை அதனை மறித்து பொலிஸார் சோதனையிட்டனர். இதன்போது ஒருவர் கைது... Read more »

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கொழும்பில் கழுத்தறுத்துக் கொலை

யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், கொழும்பு கொட்டாஞ்சேனையில் வீடொன்றில் வைத்து கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவர்களே இந்தக் கொலையை செய்துள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகப் பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம்... Read more »

சுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி? விசாரணைகள் முடிவு!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாத வித்யா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக இனம் காணப்பட்ட சுவிஸ் குமார் தொடர்பிலான வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அந்தவகையில், விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் அறிவிக்கப்ட்டது. இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில்... Read more »

மல்லாகம் துப்பாக்கிச்சூடு: 40 பேரை இலக்குவைத்து தேடுதல் வேட்டை!

மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அப்பகுதியில் பரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்றபோது கலகத்தில் ஈடுபட்ட 40 பேரை இலக்குவைத்தே இத்தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மல்லாகம் சகாயமாதா ஆலயத்தின்... Read more »

யாழில் இருவர் மீது பொலிஸார் சித்திரவதை!! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தடுப்புக்காவல் சித்திரவதை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றப் பிணையில் வெளிவந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சித்திரவதைக்குள்ளாகிய இருவரும் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன், அவர்கள்... Read more »

சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படவில்லை!

மல்லாகம் இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்வதற்கான உத்தரவை நீதிவான் வழங்கவில்லை. அவர் பணியில் ஈடுபடுகின்றார்” இவ்வாறு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் தெல்லிப்பளைப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதியில்... Read more »

மல்லாகம் மோதல் சம்பவம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களையும் வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டது. மல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு அண்மையில் நேற்றிரவு 7 மணியளவில் இரண்டு தரப்புகளுக்கு இடையே... Read more »

மல்லாகம் துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது

மல்லாகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் ஐந்து பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் திருவிழாவில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச்... Read more »

கொக்குவில் வாள்வெட்டு: கைதாகியவர்களே பாதிக்கப்பட்டவர்கள்!! : முறைப்பாட்டாளருக்கு அழைப்பாணை!!

“கொக்குவிலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இருவரும் தாக்குதலுக்குள்ளானவர்கள். முறைப்பாட்டாளர் மற்றும் அவருடன் இணைந்தவர்களே தாக்குதல் நடத்தியிருந்தனர்” இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான... Read more »

மானிப்பாயில் அடாவடி ஈடுபட்ட கும்பலில் மூவர் கைது

மானிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் சம்மந்தப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை (8) பகல் புகுந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்தது. இரண்டு... Read more »

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் – ஒருவர் கைது

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கொக்குவில் பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார்... Read more »

பல்கலை மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: 3 பொலிஸாரை விடுவிக்க பணிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பணிப்புரைவிடுத்துள்ளது. அத்துடன், 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்து சுருக்க... Read more »