சுவிஸிலிருந்து தாயகம் திரும்பியவர் மீது சுன்னாகம் பொலிஸார் தாக்குதல்!

சுவிஸ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய ஒருவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத் தாக்கப்பட்டுள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஒருவர் தனது பரம்பரை சொத்தை மீட்பதற்கு நாட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் உடுவில் மகளிர் கல்லூரிக்கு அண்மையிலுள்ள பல கோடி... Read more »

பொலிஸ் வாகனம் கடத்தல்: நால்வர் கைது!

பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் ஆயுதங்களுடன் கொடிகாமம் பொலிஸாரின் வாகனம் கடத்தப்பட்டமை தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் இன்று (புதன்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தொிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கொடிகாமம் பாலாவி பகுதியில் நேற்று திருமண... Read more »

பழுதடைந்த உணவு விநியோகம்: மண்டப முகாமையாளர் பிணையில் விடுதலை!

யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பழுதடைந்த உணவினைப் பரிமாறிய குற்றசாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மண்டபத்தின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார். யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி சி.சதிதரன் மண்டப முகாமையாளரை பிணையில் செல்ல அனுமதித்து வழக்கினை... Read more »

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்ற 88 இலங்கையர்கள் கைது!

படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேரைக் கைது செய்துள்ளதாக நீர்கொழும்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச கடல் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களை கொழும்பு, ரங்கல கடற்படை முகாமிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) பகல் அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர்... Read more »

பொலிஸ் அதிகாரியின் காட்டுமிரண்டித்தனமான தாக்குதல்!! சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில்!!

வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உள்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும்... Read more »

வாள்களுடன் மூன்று இளைஞர்கள் கைது

உடுவில் பகுதியில் வாள்களுடன் பயணித்தார்கள் என்ற குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை சுன்னாக பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் உடுவில் பகுதியைச் சேர்ந்த 21, 23 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் அவர்கள்... Read more »

உதைப்பந்தாட்ட மோதல் விவகாரம்: கைது செய்யப்பட்ட 75 பேரும் எச்சரிக்கையின் பின் விடுதலை

பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து, குழு மோதலில் ஈடுபட சென்றார்கள் எனும் சந்தேகத்தில் பேரில் 75 பேரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து, கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று... Read more »

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் நீதிபதியின் கையடக்க தொலைபேசி திருட்டு: ஒருவர் கைது

நல்லூர், கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வைத்து, மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்க தொலைபேசி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்தத் திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றபோது, அன்றைய தினம்... Read more »

நவாலியில் நான்கு வீடுகளை தீயிட்டு கொளுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது

நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள நான்கு வீடுகள் , ஒரு ஐஸ்கிறீம் விற்பனை செய்யும் வாகனம் ஆகியவற்றுக்கு தீயிட்டு கொளுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட அட்டகிரி எனும் இடத்தில் உள்ள நான்கு வீடுகளுக்குள்... Read more »

கல்வியங்காடு வீடுகளுக்குள் அட்டூழியம் – ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் கைது

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் 4 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதல் மற்றும் மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் நல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்படடார். கோப்பாய், கல்வியங்காடு – ஆடிய... Read more »

வாள்வெட்டு கும்பலிடமிருந்து தப்பிக்க துவிச்சக்கரவண்டியை எறிந்த நகைக்கடை உரிமையாளர்!!

யாழ்.நகரில் இயங்கும் பிரபல நகைக் கடை உரிமையாளர் ஒருவரிடம் வாள் முனையில் கொள்ளையிட முயன்ற சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த கடை உரிமையாளர் கடையைப் பூட்டிவிட்டு வீடு செல்லும்போது வாள் முனையில் கொள்ளையர்கள் அச்சுறுத்தி கொள்ளையிட முயன்ற நிலையில் தனது சாதுரியத்தினால் தப்பித்துள்ளார்.... Read more »

கொள்ளையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் கைது!

வவுனியா நெடுங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நுழைந்து கொள்ளையிட்டார் என்ற குற்றசாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் வவுனியா பொலிசாரினால் கைது செய்யபட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது , வவுனியாவிலுள்ள அரச விடுதியில் தங்கியுள்ள அரச உத்தியோகஸ்தரை குறித்த இராணுவ சிப்பாய் சந்தித்து இலத்திரனியல்... Read more »

வைத்தியர் மீது தாக்குதல்: வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதனை கண்டித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கர்ப்பிணி தாயொருவர் மன்னார் பொது... Read more »

யாழில் வெறிச்செயலில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பல்!

யாழ்.குப்பிளான் வடக்கில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி, பாடபுத்தகங்கள், உள்ளிட்ட பல்கலை கழக மாணவியின் உடமைகளை தீக்கிரையாக்கி , வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளது. குப்பிளான் வடக்கில் நேற்று(புதன் கிழமை... Read more »

கல்வியங்காடு பகுதியில் மூன்று வீடுகளுக்கு புகுந்து வாள்வெட்டு – பெண் உள்பட மூவர் காயம்!!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் 3 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் தந்தை, தனயன் மற்றும் குடும்பப் பெண் என மூவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றது என்று... Read more »

யாழ். குடாநாட்டை அச்சுறுத்திவந்த ஆவாக் குழு உறுப்பினர் கைது!

யாழ். மக்களை மிக நீண்டகாலமாக அச்சுறுத்திவந்த சட்டவிரோத வாள்வெட்டுக் கும்பலாக ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் மானிப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த கைது இடம்பெற்றிருந்த நிலையில், சந்தேகநபர் இன்று யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். கொக்குவில் பகுதியை... Read more »

சுழிபுரம் சிறுமி கொலை வழக்கு – சிறுமியின் நண்பியிடம் சாட்சியப்பதிவு!

யாழ்.சுழிபுரம் பகுதியில் உள்ள காட்டுப்புலம் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக உறவினர்களிடம் வெளிப்படுத்திய சிறுமி மற்றும் சிறுவன் ஒருவனிடமும் நேற்று (செவ்வாய்க்கிழமை) மல்லாகம் நீதிவானின் சமாதான அறையில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வழக்கின் முக்கியமான சாட்சிகள்... Read more »

LTTE முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களால் பன்படுத்தப்பட்ட தற்கொலை குண்டு உட்பட வெடிபொருட்களை வைத்திருந்தமை தொடர்பில் இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில்... Read more »

நித்தியகலாவை ஏன் கொலை செய்தேன்! சந்தேகநபரின் முழுமையான வாக்குமூலம்

கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் வழங்கிய... Read more »

கிளிநொச்சி யுவதி படுகொலை: சந்தேகநபர் கைது

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தொலைபேசியிலிருந்து இறுதியாக குறித்த சந்தேகநபரின்... Read more »