11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்ட விவகாரம்: 6 மாதங்களுக்குப் பின் பிணை

தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தி காணாமல் போகச்செய்த விவகார வழக்கில், இலங்கை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி தஸநாயக்க உட்பட 6 சந்தேக நபர்களையும் விடுவித்து கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு... Read more »

தமிழ் பெண் அதிபருக்கு அரசியல்வாதியால் ஏற்பட்ட நிலை!

ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல அரசியல்வாதி ஒருவர், தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரை, காலில் வீழ்ந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக குறிப்பிடப்படுகின்றது. அண்மையில், குறித்த அரசியல்வாதி தனக்கு வேண்டப்பட்டவர் ஒருவரின் புதல்விக்கு... Read more »

வழக்கு விசாரணைகளிலிருந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் விடுவிக்கப்பட்டார்!

தமிழ் தேசிய பேரவை வேட்பாளர்கள் சிலருக்கு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை நடத்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வளாகத்தை வழங்கியமை , தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளை மீறும் செயற்பாடு என அந்த ஆலயத்தின் குருக்களுக்கு மல்லாகம் நீதிமன்றால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை மத வழிபாட்டுத்... Read more »

தலைமுடிக்கு பல நிறங்களில் வர்ணம் பூசியவருக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை!

யாழில் வழக்கு ஒன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு நேற்று சென்றிருந்த போது அவருக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் தலைமுடிக்கு பல நிறங்களில் வர்ணம் பூசி நீதிமன்றை அவமதிக்கும் முகமாக செயற்பட்ட காரணத்திற்காகவே... Read more »

யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல்; மூவர் வைத்தியசாலையில்!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் 3ம் மற்றும்... Read more »

மாவிட்டபுரம் குருக்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தமிழ் அரசுக் கட்சி பொலிசாருக்கு அழுத்தம்

அரசியல் கட்சி ஒன்று ஆலயத்தில் வழிபாடாற்ற அனுமதித்ததாகவும் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதாகவும் கூறி மாவிட்டபுரம் ஆலய குருக்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தமிழ் அரசுக் கட்சி பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்று (11) குருக்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த காங்கேசன்துறைப் பொலிசார்... Read more »

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சாட்சிக்கு 3 மாத சிறை

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவரான இலங்கேஸ்வரன் என்பவருக்குத் தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பறித்துள்ளது. குறித்த நபர் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை வாகன அனுமதிப்பத்திரம், வாகன காப்புறுதிப் பத்திரம், வாகன வரிப்பத்திரம் போன்ற இல்லாமல் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்து ஏற்படுவதை... Read more »

தேர்தல் விதிமீறல்கள்: யாழ்ப்பாணத்தில் 17 முறைப்பாடுகள்

தேர்தல் விதிமீறல் தொடர்பில், யாழ்ப்பாணத்தில் இதுவரை 17 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் இரண்டு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக தனியாருக்குச் சொந்தமான இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியமை, பதாதைகளை வைத்தமை... Read more »

மருந்து உறையில் அரசியல்வாதியின் பெயர்: கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, பருத்தித்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசியல்வாதியொருவரின் பெயர் அச்சிடப்பட்ட மாத்திரை உறைகள் வைத்தியசாலையொன்றுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு, அதில் மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு... Read more »

பிரபாகரனின் படத்துடன் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த இருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினை அடங்கிய 2018 புது வருட வாழ்த்துக்களை முகப் புத்தகம் ஊடாக தயார் செய்து அதனை பகிர்ந்ததாக கூறப்படும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 2007 ஆம் ஆண்டின் 66... Read more »

கூட்டமைப்பு வேட்பாளர் மீது தாக்குதல்!

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஒரு மீது தாக்குதல் நடத்தப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி சிவன் கோயில் பகுதியில் இன்று காலை 10.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் கா.சற்குணதேவன்... Read more »

எழிலன் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை... Read more »

விபத்துக்குகாரணமான லொறி சாரதியை விடுவிக்க பொலிஸார் முயற்சி!! பொதுமக்கள் பொலிஸார் இடையே அமைதியின்மை!!

கிளிநொச்சி- செல்லையாதீவு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில், பொலிஸார் மற்றும் உயிரிழந்தவரின் உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை சீரடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த வியாழக்கிழமை மாலை பூநகரி நோக்கி மோட்டார் சைக்கிளில்... Read more »

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணை, இன்று (வெள்ளிக்கிழமை) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,... Read more »

ஆயுதங்கள் வீட்டுக்குள் எப்படி வந்தன என்று புளொட்டின் முன்னாள் உறுப்பினருக்கு தெரியாது!

“புளொட்டின் முன்னாள் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை உண்மைதான். ஆனால் அவை எவ்வாறு அவரது வீட்டுக்குள் வந்தன என சந்தேகநபருக்கு அறவே தெரியாது. அது தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை நீதிமன்று பெறவேண்டும்” இவ்வாறு சந்தேகநபர் சார்பில் முன்னணிலையான ஜனாதிபதி சட்டத்தரணி... Read more »

தப்பிச் சென்றிருந்த பாலியல் துஷ்பிரயோக குற்றவாளி மூன்றாண்டுகளின் பின் சிக்கினார்

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2014 ஆம் ஆண்டு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் 3 ஆண்டுகளின் பின் கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கான தண்டனைத் தீர்ப்பு வரும் 9ம் திகதி வழங்கப்படும் எனவும் அன்றுவரை குற்றவாளியை யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து... Read more »

யாழ். மேல் நீதிமன்றில் 3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு மரண தண்டனை!!

யாழ். மேல் நீதிமன்றில் கடந்த 13 வருடங்களில் 3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல்... Read more »

யாழில் கத்தி முனையில் கப்பம் கோரியவர் கைது!

யாழ்ப்பாணத்தில் வீட்டில் தனியாகவிருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி கப்பம் கோரியவர் ஒருவரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அச்சுவேலிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிறுப்பிட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுப்பிட்டிப் பகுதியில் வீட்டில் இந்த பெண்ணின் தனியாக... Read more »

வட்டுக்கோட்டையில் வாளுடன் வந்த கொள்ளையர்களில் ஒருவர் சிக்கினார்!! மேலும் நால்வர் தப்பியோட்டம்!!

வட்டுக்கோட்டை, சங்கானைப் பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளைக் கும்பலைச் சேரந்த ஒருவர் வாளுடன் சிக்கினார். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (28) 12.30 மணியளவில் வட்டுக்கோட்டை கள்ளி வீதியில் இடம்பெற்றது. வட்டுக்கோட்டை கள்ளி வீதியில் நள்ளிரவுவேளை வாள்களுடன் நடமாடிய கும்பலைத்... Read more »

கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர் மானிப்பாயில் கைது

மானிப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையகுற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டனர் என்று மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாலக்க ஜெயவீர தெரிவித்தார். “சந்தேகநபர்கள் 18,20 வயதினர். சங்கானை, கட்டுடையைச் சோ்ந்தவர்கள். சங்கானை – சேச் வீதி கொள்ளை,... Read more »