வைத்தியர் மீது தாக்குதல்: வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதனை கண்டித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கர்ப்பிணி தாயொருவர் மன்னார் பொது... Read more »

யாழில் வெறிச்செயலில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பல்!

யாழ்.குப்பிளான் வடக்கில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி, பாடபுத்தகங்கள், உள்ளிட்ட பல்கலை கழக மாணவியின் உடமைகளை தீக்கிரையாக்கி , வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளது. குப்பிளான் வடக்கில் நேற்று(புதன் கிழமை... Read more »

கல்வியங்காடு பகுதியில் மூன்று வீடுகளுக்கு புகுந்து வாள்வெட்டு – பெண் உள்பட மூவர் காயம்!!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் 3 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் தந்தை, தனயன் மற்றும் குடும்பப் பெண் என மூவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றது என்று... Read more »

யாழ். குடாநாட்டை அச்சுறுத்திவந்த ஆவாக் குழு உறுப்பினர் கைது!

யாழ். மக்களை மிக நீண்டகாலமாக அச்சுறுத்திவந்த சட்டவிரோத வாள்வெட்டுக் கும்பலாக ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் மானிப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த கைது இடம்பெற்றிருந்த நிலையில், சந்தேகநபர் இன்று யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். கொக்குவில் பகுதியை... Read more »

சுழிபுரம் சிறுமி கொலை வழக்கு – சிறுமியின் நண்பியிடம் சாட்சியப்பதிவு!

யாழ்.சுழிபுரம் பகுதியில் உள்ள காட்டுப்புலம் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக உறவினர்களிடம் வெளிப்படுத்திய சிறுமி மற்றும் சிறுவன் ஒருவனிடமும் நேற்று (செவ்வாய்க்கிழமை) மல்லாகம் நீதிவானின் சமாதான அறையில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வழக்கின் முக்கியமான சாட்சிகள்... Read more »

LTTE முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களால் பன்படுத்தப்பட்ட தற்கொலை குண்டு உட்பட வெடிபொருட்களை வைத்திருந்தமை தொடர்பில் இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில்... Read more »

நித்தியகலாவை ஏன் கொலை செய்தேன்! சந்தேகநபரின் முழுமையான வாக்குமூலம்

கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் வழங்கிய... Read more »

கிளிநொச்சி யுவதி படுகொலை: சந்தேகநபர் கைது

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தொலைபேசியிலிருந்து இறுதியாக குறித்த சந்தேகநபரின்... Read more »

யாழில், பிரதேச சபை தவிசாளரின் வாகனம் விபத்தில், மதுவில் சாரதி, காப்பாறியது காவற்துறை!!

வலி.தெற்கு பிரதேச சபை தவிசாளரின் வாகனம் சுன்னாகம் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காது சுன்னாக காவற்துறையினர் செயற்பட்டதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர். சுன்னாகம் சந்தியில் நேற்று வியாழக்கிழமை (30.08.18) குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டு உள்ளது.... Read more »

கிளிநொச்சி யுவதி படுகொலை: உடற்கூற்று பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பான உடற்கூற்றுப் பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், குறித்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடது புற கண்ணுக்கு மேற்பகுதியில் குத்தப்பட்ட உட்காயம் ஒன்று... Read more »

குற்றவாளிக்கு தண்டப்பணம் 5 ரூபா!! பொலிஸார் மீது மக்களுக்க சந்தேகம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மதுபோதையில் பொது இடத்தில் வைத்து குழப்பம் விளைவித்த மூவருக்கு தலா 5 ரூபா மாத்திரம் தண்டப்பணம் விதித்து யாழ். நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு மதுவரிச் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் 2 ஆயிரம்... Read more »

கிளிநொச்சியில் வெடிமருந்துகளுடன் இருவர் கைது!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் வெடிமருந்துகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பூநகரி சோதனை சாவடியில் சந்தேகத்தின் பேரில் வாகனமொன்றை சோதனையிட்ட போது குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வாகனத்திலிருந்து 1 கிலோ 80 கிராம் வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.... Read more »

பாலியல் தொல்லை வழங்கிய வட்டுக்கோட்டை ஆசிரியரின் மறியல் நீடிப்பு

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் விளக்கமறியலை இன்று வரை நீடித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த வழக்கை... Read more »

தமிழக மீனவர்கள் அபராதத்துடன் விடுதலை: ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த பத்தாம் திகதி கைது செய்யப்பட்டிருந்த 27 மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, தடை செய்யப்பட்ட வலைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஏழு மீனவர்கள் தலா... Read more »

முல்லைத்தீவில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமறியல்!!

உடையார் கட்டில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு உடையார்... Read more »

பெண்களுடன் சேட்டைவிட்ட சிம் விற்பனையாளர்கள் நையப்புடைப்பு!!!

கைபேசி இணைப்பு சிம் அட்டை விற்பனை செய்யும் இருவர், இளம் பெண்களுடன் சேட்டை விட்டதால், அவர்களை பெண் குரலில் கதைத்து அழைத்த இளைஞர்கள் சிலர் நையப்புடைத்து அனுப்பிவைத்தனர். அத்துடன், அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளும் தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை... Read more »

யாழில் பிரபல பெண் அரசியல்வாதியின் செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் ஒருவரும், பிரபல பெண் அரசியல்வாதி ஒருவரின் செயலாளரும் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர் நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய அரசியல்வாதியின் செயலாளர் இன்று... Read more »

ரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு!!

சுழிபுரம் சிறுமி ரெஜினா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு மல்லாகம் நீதிமன்றம் மீண்டும் விளக்கமறியல் நீடித்துள்ளது. சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவநேஸ்வரன் றெஜினா (வயது 6 ) என்ற சிறுமி கடந்த ஜுன“ மாதம் 25... Read more »

அடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்

“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும். தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்” இவ்வாறு யாழ்ப்பாணம்... Read more »

கேக் கடை மூன்றாவது தடவையாகவும் இன்று முற்றுகை!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிவரும் கேக் விற்பனை நிலையம் இன்று (20) திங்கட்கிழமை மூன்றாவது தடவையாக முற்றுகையிடப்பட்டது. அங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 30 பைக்கட்டுக்களாகப் பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில்... Read more »