யாழில் கையூட்டல் பெற்ற கிராம சேவகர் இடைநீக்கம்!

யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த கிராம... Read more »

பளை பகுதியில் குழு மோதல் -இருவர் கைது

பளை பகுதியில் குழு மோதலுக்கு தயாராகச் சென்ற இருவரை பளை பொலிஸார் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர். பளை பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் குழு மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் தொடர்சியாக இன்று அதிகாலை ஒரு மணிக்கு மோதலுக்கு தயாராக குழுவொன்று... Read more »

யாழ் நோக்கி போதை கலந்த இனிப்புகள் பண்டங்களை கொண்டுவந்தவர் கைது!

யாழ் நோக்கி கொண்டு வரப்பட்ட போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதியை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்திய வாகன சோதனையின்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு... Read more »

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக தவராசா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

சிங்களத்தில் தண்டப்பத்திரம்(தடகொல) எழுதிக்கொடுத்தமைக்காக வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாடு தொடர்பில் இன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் பிராந்திய பணிப்பாளர் த.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.... Read more »

மூதாட்டியை தாக்கிக் கொள்ளை

நாவற்குழி பகுதியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு அவரின் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருகின்றார். அவரின் வீட்டு கூரையை பிரித்து நேற்று (19) அதிகாலை உட்புகுந்த கொள்ளை கும்பல்... Read more »

கொள்ளை, வன்முறைக் குற்றச்சாட்டில் கைதாகி 11 பேருக்கும் விளக்கமறியல்!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்களையும் வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா உத்தரவிட்டார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பெற்றோல் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அத்துடன்,... Read more »

ஆவாக் குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது!

ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 நபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து ​வேன் உட்பட வாள்களும் பொலிஸா​ரால் மீட்கப்பட்டுள்ளன. வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இன்று அதிகாலை (18) 3 மணியளவில் மானிப்பாய் பிரதேசத்தில் வைத்துக் சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட 11 பேரில்... Read more »

வட்டுக்கோட்டையில் சொந்த வீட்டிலேயே நகைகளை சூறையாடிய யுவதி சிக்கினார்!

வட்டுக்கோட்டை கிழக்கில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என்று வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முறைப்பாட்டாளரின் மகள்தான் நகைகளைத் திருடினார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வட்டுக்கோட்டை கிழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என வீட்டின் குடும்பத்தலைவரால்... Read more »

யாழ்.வைத்திய சாலையில் வைத்தியர்களாக நடித்து திருட்டில் ஈடுபட்ட பெண்கள்!

வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த இரு பெண்களை அடையாளம் கண்டு உள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ்.போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து... Read more »

வவுனியாவில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : வர்த்தகர்கள் தப்பியோட்டம்

வேப்பங்குளம் சிறுவர் இல்லத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகே இரவு 8.20 மணி தொடக்கம் 9.30 மணி வரை சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வாள்வெட்டு குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டது. இவர்களின் நடவடிக்கையின் அச்சத்தில் அவ்விடத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை வர்த்தகர்கள் மூடிவிட்டு... Read more »

சமூர்த்தி வங்கியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்!

யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் உள்ள சமூர்த்தி வங்கியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த வங்கி உத்தியோகஸ்தர் மீதே வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகஸ்தர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கியின் பின் பக்க மதிலால் ஏறி குதித்து வந்த நால்வரே தன் மீது தாக்குதல்... Read more »

15 வயதுடைய மாணவி கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வு!

வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலைக்குச் செல்லும் வழியில் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் சித்திரவதைக்கும் உள்படுத்தப்பட்டுள்ளார். மூன்று பேர் கொண்ட கும்பல் முச்சக்கர வண்டியில் மாணவியைக் கடத்திச் சென்று முல்லைத்தீவில் வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். “இந்தச்... Read more »

வித்தியா கொலை வழக்கு – இந்திர குமாருக்கு விடுதலை

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திர குமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை சட்ட மா அதிபர் திணைக்களம் மீளப் பெற்றுக்கொண்டது. அதனால் சுமார் 14 மாதங்களின் பின்னர் அந்த வழக்கில் இருந்தும் பூபாலசிங்கம் இந்திர குமார்... Read more »

பொலிஸார் படுகொலை – முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர் கைது!

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 ஆவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு, கன்னன்துட பகுதியில் வைத்தே 2 ஆவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்... Read more »

சாவகச்சேரியில் வங்கி ஏரிஎம்மில் திருட முயன்றவர் சிக்கினார்!

சாவகச்சேரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) போலி அட்டையைவ் செலுத்தி பணம் பெற முயன்ற நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த வங்கியின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) நேற்று காலை... Read more »

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது கொடூரத் தாக்குதல்!

யாழில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை இனந்தெரியாத குழுவொன்று கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் உடுவில் பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 72 வயதான பொன்மலர் என்ற மூதாட்டியே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்... Read more »

கோப்பாய் பொலிஸாரின் சித்திரவதையைத் தாங்க முடியாமல் இளைஞன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நடந்த கொடுமைகளை அந்த இளைஞர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். சந்தேகநபரை பொலிஸார் சட்டவிரோதமாகத் தடுத்துவைத்திருந்தமை மற்றும் அவரைத்... Read more »

புளியங்குளத்தில் பச்சிளம் குழந்தை கொலை!!

வவுனியா – புளியங்குளம், ஊஞ்சல்கட்டு பகுதியில், 8 மாத சிசுவொன்று கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குழந்தையை உறங்கச் செய்துவிட்டு தாயார் வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் குழந்தை காணாமற்போயுள்ளமை தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையை உறவினர்கள்... Read more »

யாழில்.பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது!

பெரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த சட்டவிரோதக் குழுவைச் சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 3 அடி நீளமுள்ள 7 வாள்களும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் வடமராட்சி இமயாணன் பகுதியில் வர்த்தக நிலையம்... Read more »

லீசிங் நிறுவன உத்தியோகத்தர்கள் இருவருக்கு கடூழியச் சிறை!

லீசிங் தவணைப் பணத்தை வசூலிப்பதற்காக வாடிக்கையாளரின் வீடு தேடிச் சென்று வீட்டிலிருந்த குடும்பப்பெண்ணை அச்சுறுத்திவிட்டு அவரது தங்க நகைகளை அறுத்துச் சென்றனர் என்ற குற்றத்துக்கு நிதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் இருவருக்கு ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை... Read more »