யாழில் மீண்டும் காணாமல் போதல்

யாழ், வேலணை பகுதியைச் சேர்ந்த சதாசிவம் லோகேஸ்வரன் (வயது 35) என்பவர் புதன்கிழமை அதிகாலை முதல் காணாமல் போயுள்ளார் என யாழ் மனித உரிமை ஆணைக்குழுவிலும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் குறித்த நபரின் வீட்டுக்கு மோட்டார்... Read more »

போலிச் சாமியாரை நம்பி தங்க நகைகளை இழந்த குடும்பம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் போலிச் சாமியார் ஒருவரை நம்பி குடும்பமொன்று தங்க நகைகளைப் பறிகொடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் நகரத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கியிருந்த சாமியார் ஒருவர் மக்களின் கஷ்டங்களை நீக்குவதாகக் கூறி சுய விளம்பரம் செய்து வந்துள்ளார். இவ்விளம்பரத்தைப் பார்த்து, இவரை நம்பிய... Read more »

கஞ்சா வைத்திருந்த வயோதிபருக்கு விளக்கமறியல்

கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ். நகரப்பகுதயில் 725 கிராம் கஞ்சாவுடன் ஆட்டோ ஒன்றில் பயணம் செய்த வேளையில், யாழ். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த வயோதிபர்... Read more »

மாணவியை சேஷ்டை செய்த சிங்கள இளைஞர்கள்!- தட்டிக்கேட்டவர்களை அடித்து விரட்டிய பொலிஸ்

தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவியொருவருடைய மேல் ஆடைக்குள்ளே கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை எழுதிப் போட்ட சிங்கள இளைஞர்களைத் தட்டிக்கேட்ட தமிழ் இளைஞர்களைப் சாவகச்சேரிப் பொலிஸார் அடித்து அதட்டியுள்ளனர்.இச்சம்பவம் இன்று 8 மணியளவில் யாழ். கைதடிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. Read more »

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருக்கு எதிராக வழக்கு

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு எதிராக லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.தேசிய சேமிப்பு வங்கி மற்றும் தி பினான்ஸ் கம்பனிக்கும் இடையிலான பங்குக் கொடுக்கல், வாங்கல் விவகாரங்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்தக் கொடுக்கல் வாங்கல்... Read more »

இறைவரி திணைக்களத்தில் ஊழல்!- இரகசிய பொலிஸார் விசாரணை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான விசாரணைகளை இரகசிய காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் பொருட்டு காவற்துறையினரும், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் இணைந்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் கணனிகளை பரிசோதனைக்கு உட்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

இலங்கையர்களை ஏமாற்றிய நைஜீரிய பிரஜைக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

லொத்தர் பரிசு கிடைத்திருப்பதாக கூறி, இலங்கையர்களை ஏமாற்றிய நைஜீரிய பிரஜையொருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  Read more »

ரத்வத்தையின் பெட்டகத்தில் யாழ்.குடாநாட்டு மக்களின் நில ஆவணங்கள்?

முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரான காலம் சென்ற அநுருத்த ரத்வத்தையின் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தலிருந்து இரகசியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட எட்டுக் கோடி ரூபாவையும் குறித்த தனியார் வங்கியிடமே ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ச நேற்று உத்தரவிட்டுள்ளார். Read more »

புதிய பிரதேசசபை கட்டடம் கழிவு ஓயில் ஊற்றி பாழ்! – ஆயுதமுனையில் காட்டுமிராண்டித்தனம்

வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச சபையின் பதிய கட்டித்தின் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி முனையில் காவலர்களை கட்டி பற்றையில் போட்டுவிட்டு கட்டிடத்தின் மீது கழிவு ஒயில் ஊற்றியுள்ளார்கள். இன்று புதன் கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.அதிகாலை... Read more »

டில்ருக்சனது பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்தை சென்றடையும்! நாளை நல்லடக்கம்!

வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருந்த நிலையில் மரணமடைந்த மரியதாஸ் டில்ருக்சனது (வயது 36)பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை  அவரது சொந்த இடமான யாழ். பாஷையூரைச் சென்றடையவுள்ளது. Read more »

தனிமையில் வசித்த வயோதிப பெண் அடித்துக் கொலை நகைகளும் கொள்ளை!-கோப்பாயில் சம்பவம்

யாழ். கோப்பாய் தெற்கில் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவர் இனந்தெரியாதவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதோடு அவரது நகைகளும் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளன.இச்சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. Read more »

யாழ். பல்கலைக்கழக மக்கள் வங்கி கிளையின் ஊழியர் 7 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளுடன் தலைமறைவு

இலங்கை மக்கள் வங்கியின் யாழ். பல்கலைக்கழக கிளையில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர் கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த 7 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் தலைமறைவாகியுள்ளார்.இந்தச் சம்பவம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, Read more »

யாழில். ஆலயக்கொள்ளைகளுடன் சம்பந்தப்பட்ட கும்பல் யாழ். காவற்றுறையினரால் கைது

யாழில் கோயில்களில் அண்மைக்காலமாக சிலைகள், விக்கிரகங்கள், வாகனங்கள் என்பவற்றைக் கொள்ளையிட்ட குழு ஒன்றை காவற்துறையினர் கைதுசெய்துள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களையும் யாழ். காவற்றுறையினர் மீட்டுள்ளனர்.அதனடிப்டையில் அவர்களால் களவாடப்பட்ட பிள்ளையார், அம்மன் சிலைகள் மற்றும் ஒரு தொகுதி கோயில் வாகனங்கள் என்பன யாழ். புகையிரத வீதியை அண்மித்துள்ள... Read more »

புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஜெயக்குமார் வீடு மீது இன்று அதிகாலை தாக்குதல்; தேசத்துரோகியென அட்டையும் கொழுவினர்

யாழ். போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஜெயக்குமாரின் கந்தர்மடம் சந்தி அரசடி வீதியில் உள்ள வீடு இன்று அதிகாலை 1.30 மணிக்கு திடீரென கடும் தாக்குதலுக்கு உள்ளானது. சந்தேக நபர்களால் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதுடன் கழிவு ஒயிலும் யன்னல் வழியாக வீட்டுக்குள் ஊற்றி... Read more »

யாழ். இந்திய துணைத்தூதுவராலய கலாசார உத்தியோகஸ்தரின் மகன் கடத்தப்பட்டு விடுதலை

தனது மகன் நேற்று வெள்ளிக்கிழமை வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து மீட்கப்பட்டதாக யாழ். இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் கலாசார உத்தியோகத்தரான பிரபாகரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.யாழ். பிரபல பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி... Read more »

யாழில் சடலங்கள் மீட்பு

Read more »

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் இரும்புக்கம்பித்தாக்குதல்! மாணவர்கள் முற்றுகைப்போராட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கோண்டிருந்த இவர்... Read more »

திருடப்பட்ட தொலைபேசி, தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் 12 மணித்தியாலயத்திற்குள் கண்டுடிப்பு

யாழ். காரைநகர் பிரதேச செயலரின் தொலைபேசியைத் திருடியதாக கூறப்படும் நபரை யாழ். பொலிஸார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் இன்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளனர் யாழ். நகரப்பகுதியில் வைத்து இன்று செவ்வாய்கிழமை காலை காரைநகர் பிரதேச செயலரின் கைப்பையில் இருந்த சுமார் 66 ஆயிரம்... Read more »

யாழில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பண மோசடி செய்த சுதந்திர கட்சி முக்கியஸ்தர் கைது

யாழ். மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக, இளைஞர் யுவதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியிருந்த சுதந்திரக்கட்சி முக்கியஸ்தரை யாழ்.பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிய போது, தனது அரச கட்சி என்ற பெயரை பாவித்து இளைஞர் யுவதிகளிடம் மோசடி... Read more »

பகிடிவதையால் யாழ். பல்கலைக்கழக மாணவன் வைத்தியாசாலையில் அனுமதி

யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட முதலாம் வருட கலை பீட மாணவன் படுகாயமடைந்த நிலையில் வியாழக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.பல்கலைக்கழகத்திற்குள் வைத்து குறித்த மாணவனை சிரேஸ்ட மாணவர்கள் பலர் தாக்கியுள்ளதாக குறித்த மாணவனின் பெற்றோர்... Read more »