வாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர்களுக்கு விளக்கமறியல்

நீர்வேலியில் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது. நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் கடந்த திங்கட்கிழமை இளைஞர்கள் இருவர்... Read more »

தமிழ்ப் பெண் ஒருவருடன் தகாதமுறையில் நடந்து கொண்ட புகையிரத உத்தியோகத்தருக்கு பிணை!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்தில் குடும்பப் பெண் ஒருவருடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தொடருந்து உத்தியோகத்தரை பிணையில் விடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகைதந்த பிரிட்டன் வாழ் தமிழ் குடும்ப பெண்ணொருவர்... Read more »

புலனாய்வாளர்களுக்கு கட்டடத்தை வழங்கிய முன்னாள் முதல்வர்? 13 இலட்சத்திற்கு மேல் நஸ்டம்!!

யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான கட்டத்தினை வாடகை அறவிடாமல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குனராஜா வழங்கியமையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ந. லோகதயாளன் ஆதார பூர்வமாக ஆவணங்களுடன் சபையில் குற்ற சாட்டை முன் வைத்தார். யாழ்,மாநகர சபையின்... Read more »

யாழ். யுவதிகள் இருவர் விமான நிலையத்தில் கைது

சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு யுவதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் துணை இயக்குனருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.1... Read more »

யாழ். ரயிலில் அடாவடி செய்த ஊழியர் கைது!

இலங்கை இரயில் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் நடவடிக்கை தொடர்பாக மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் யாழ். இரயில் நிலைய அதிபரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டமையை அடுத்து, குறித்த ஊழியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி ஊழியர் யாழ். ரயிலில் பயணித்த பெண்ணொருவருடன் தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டமை... Read more »

தெல்லிப்பழையில் வாள் வெட்டுக் கும்பல் அட்டகாசம்!!

தெல்லிப்பழை எட்டாம் கட்டைப் பகுதியில் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டால், தெல்லிப்பழை எட்டாம் கட்டைப் பகுதியில் ,வாள்கள், இரும்புக் கம்பிகள் என்பவற்றுடன் சுமார் 20 பேர் , 10 மோட்டார் சைக்கிள்களில் இரவிரவாக... Read more »

புகையிரதத்தில் தமிழ் பெண்ணுடன் இனத்துவேசம் பேசி தகாத முறையில் நடந்த ஊழியரால் பரபரப்பு!!!

சிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் நேற்று (07) யாழ்.நோக்கி வந்த புகையிரதத்தில் பதற்றம் நிலவியிருந்தது. இந்த சம்பவம் நேற்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு யாழ்.நோக்கி வந்த புகையிரத... Read more »

யாழ். நீர்வேலியில் இருவர் மீது வாள் வெட்டு!

யாழ். நீர்வேலிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வாள் வெட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து நேற்று... Read more »

மின்சார சபைக்குள் மோசடிகள் தாராளம் – கபே குற்றச்சாட்டு

இலங்கை மின்சார சபையில் பெருமளவு மோசடிகள் இடம்பெறுகின்றன என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குற்றஞ்சாட்டியுள்ளார். “இலங்கை மின்சார சபைக்கு வரும் ஒவ்வொரு நிலக்கரி கப்பலுக்கும் 120 மில்லியன் ரூபா மோசடி செய்யப்படுகிறது. விநியோகிக்கப்படும் மின்சாரத்தில் ஒவ்வொரு அலகுக்கும் 14 ரூபா... Read more »

எண்ணெய் கப்பலில் ஆஸி. பயணித்த 131 இலங்கையர்கள் கைது!

ஆஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 131 இலங்கையர்கள் மலேசியக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மலேசியாவின், ஜோகோர் மாகாணத்தின், தன்ஜுங் ஜெமுக் துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் பயணித்த எற்ரா ( Etra) என்ற எண்ணெய் தாங்கி கப்பலில்... Read more »

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பியோர் காங்கேசன்துறையில் கைது!

தமிழக ஈழ அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 14 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்தனர். திருகோணமலையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விசாரணைகள் மற்றும் மலேரியா தடுப்பு... Read more »

ஆவாக்குழுவினைச் சேர்ந்த 5 பேர் ஆயுதங்களுடன் கைது!

சுன்னாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் ஆவாக்குழுவினைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்று இரவு (04) கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கைதடி மற்றும் நுணாவில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 4 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சுன்னாகம் பகுதியில் வாள்... Read more »

யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு!

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாரந்தனைப் பகுதியில் வைத்து இன்று முற்பகல் வாள்வெட்டுக்குள்ளானார் என பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது. திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸ் உத்தியோகத்தர்... Read more »

தபாலதிபருக்கு விளக்கமறியல்

45 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தபாலதிபரை வரும் 16ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. அனுராதபுரம் பகுதியில் தபாலதிபராக கடமையாற்றும் சந்தேகநபர், முஸ்லிம் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 45 இலட்சம் ரூபா பணத்தை... Read more »

வௌிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்கள் அவதானம்

சமுக வலைத்தளங்கள் ஊடாக வௌிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று சம்பந்தமாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு என்று பல்வேறு பெயர்களில்... Read more »

நடன ஆசிரியை மீது தாக்குதல்; விசாரணையில் புதிய தகவல் வெளிவந்தது

நடன ஆசிரியையின் சகோதரியின் குடும்ப விடயத்தில் தலையிடக் கூடாது என ஈபிடிபி உறுப்பினர்கள் இருவரை எச்சரித்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இனி எந்தப் பிரச்சினையும் இடம்பெறாது என தெரிவித்திருந்தார் என்ற விடயம் பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் நடன... Read more »

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களை நாடு கடத்த நடவடிக்கை!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களான செஸ்ரியான் ரமேஸ் மற்றும் நடராஜா மதனராஜா ஆகிய இருவரையும் லண்டனிலிருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா திணைக்களத்திடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலங்களில் ஊர்காவற்துறை பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

யாழில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதல்!!!

யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞரொருவரை யாழ். பொலிஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியளவில் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – அரியாலையைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவரே இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.பிரதம தபால் நிலையத்தின் முன்பாக சுமார் நான்கு... Read more »

வெக்கையைத் தணிக்கவே ஆசிரியர் குடித்தார்!!! ; முடாக்குடிகாரர் கிடையாது – நீதிமன்றில் சட்டத்தரணி விளக்கம்

“வெப்பம் அதிகமாக உள்ளதால் குளுமைக்காக ஆசிரியர் மது அருந்தினார். ஆனால் அவர் முடாக் குடிகாரர் இல்லை” இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட ஆசிரியர் சார்பில் மூத்த சட்டத்தரணி ஒருவர் மன்றிடம் உரைத்தார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் வீதிப் போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால்,... Read more »

கொக்குவிலில் ஆவா குழுவினரால் வாள்வெட்டு : ஒருவர் படுகாயம்!!

கொக்குவில் முதலி கோவில் பகுதியில் வைத்து நேற்று மாலை 4 மணியளவில் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். “ஆவாக் குழுவைச் சேர்ந்த மோகன் அசோக் என்பவரே இந்த தாக்குதலை மேற்கொண்டார். அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன” என்றும்... Read more »