பால்மா விலைகள் உயரும் அறிகுறி!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தீர்வை வரவு – செலவுத் திட்டத்தில் கிலோவொன்றுக்கு 135 ரூபாவிலிருந்து 225 ரூபா வரை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து விற்பனை விலைகளை அதற்கேற்ப அதிகரிப்பதற்கான அனுமதி கோரி பால்மா இறக்குமதி நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதற்கமைய இறக்குமதி... Read more »

சிறிய நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்?

வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி காரணமாக சிறிய நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக பதிவு செய்து கொண்டுள்ள அனைத்து நிறுவனங்களும் வருடாந்தம் 60 ஆயிரம் ரூபாவை வரியா செலுத்த வேண்டும் என்று வரவு செலவுத்திட்டத்தில்... Read more »

யாழில் முத்தான வியர்வை வர்த்தகக் கண்காட்சி

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட அலுவலகத்தினால் நடாத்தப்படும் முத்தான வியர்வை வர்த்தகக் கண்காட்சி நாளை (19) மற்றும் நாளை மறுதினம்(20) யாழ் மானிப்பாய் இந்து கல்லூரியில் இடம்பெறவுள்ளது. வாழ்வின் எழுச்சித் திணைக்கள மாவட்ட பணிப்பாளர் க.மகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக... Read more »

பால் மாவின் விலை உயர்வடையக் கூடிய சாத்தியம்?

பால் மாவின் விலை உயர்வடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரிச் சலுகை வழங்கப்படாவிட்டால் பால் மாவின் விலைகளை உயர்த்த நேரிடும் என பால் மா இறக்குமதியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரிச் சலுகை உரிய முறையில் வழங்கப்படாவிட்டால் 400 கிராம் எடையுடைய பால்... Read more »

பாடசாலை மாணவர்கள் சீருடைகளைப் பெற்றுக் கொள்ளும் வர்த்தக நிலையங்களின் விபரங்கள்

யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலை மாணவர்கள் கூப்பன் அடிப்படையிலான சீருடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அபி றேடர்ஸ் – இல-112,கே.கே.எஸ்.வீதி .யாழ்ப்பாணம். சிறி கணேஷ் புடவையகம் – இல-20 ,நவீன சந்தை, யாழ்ப்பாணம் ஆறுமுகம் ரெக்ஸ்ரைல்ஸ் –... Read more »

யாழில் 1 கிலோகிராம் பச்சை மிளகாய் ரூபா 1,000 !!

யாழ்ப்பாணத்துக்கு சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. 1 கிலோகிராம் பச்சை மிளகாய் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மரக்கறிகளில் கறிமிளகாய் 1 கிலோகிராம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், 1 பிடி கீரை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் போதும்,... Read more »

தனியார் துறையினருக்கும் ஓய்வூதியம்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற ஓய்வூதியத் திட்டமொன்றை தனியார்துறை ஊழியர்களுக்கும் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, அரசாங்கம் விரைவில் எடுக்குமென, வெளிநாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். பலர்,... Read more »

யாழ் சர்வதேச வர்த்தக சந்தை ஜனவரியில்!

இலங்கையின் வடபகுதியில் இடம்பெறுகின்ற மிகப்பிரசித்தமான வர்த்தக சந்தையான யாழ் சர்வதேச வர்த்தகக் சந்தை (JITF 2016) எதிர்வரும் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மாநகர மைதானத்தில் நடைபெறவுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு தகுந்த சர்வதேச சந்தை... Read more »

Hutch அறிமுகப்படுத்தும் SmartShare தரவு சேவை

தரவு பாவனை ஒதுக்கீட்டினை ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் நிர்வகிக்கும் சிரமங்களைப் போக்கும் தனித்துவமான வசதி… இலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G வலையமைப்புக்களுள் ஒன்றான Hutch, “Hutch SmartShare” வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. Hutch வாடிக்கையாளர்கள் தாங்கள் உபயோகிக்கும் பல்வேறு வகையான சாதனங்களுக்கு ஒரு... Read more »

உரவகைகளின் நிர்ணய விலை அதிகரிக்கப்படின் அறியத்தரவும்!

யாழ் மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் நெற்செய்கைக்கான உரங்களை (யூரியா, சுப்பர் பொசுபரசு (TSP), மியூரேற் பொட்டாசு (MOP), விவசாயிகள் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு கொள்வனவு செய்யும் நிலை ஏற்படின் அது தொடர்பான முறைப்பாட்டினை மாவட்ட செயலகத்திற்கு அறியத்தருமாறு யாழ். மாவட்ட அரசாங்க... Read more »

மோட்டார் வாகன லீசிங் வசதி, 90 வீதம் வரை அதிகரிப்பு

மோட்டார் வாகன லீசிங் சம்பந்தமாக நிதி நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய புதிய முறைமைக்கமைய, வாகனங்களுக்கு வழங்க வேண்டிய லீசிங் வசதி, 90 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு கூறியுள்ளது. Read more »

யாழில் இந்திய வர்த்தகர்கள் பங்குபற்றிய வர்த்தக மாநாடு

யாழ். மாவட்டத்தில் இந்திய வர்த்தகத்தினை மேம்படுத்துவதற்கான விஷேட மாநாடு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், இந்தியாவைச் சேர்ந்த இளம் வர்த்தகர்கள் 44 பேர் கலந்துகொண்டிருந்தனர். ´யாழில் வியாபாரத்தினை மேம்படுத்தல்´... Read more »

சமையல் எண்ணைக்கான வரி அதிகரிப்பு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணைக்கான வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ எண்ணைக்கான விஷேட பாண்ட வரி 90 ருபாவில் இருந்து 110 ரூபாவாக உயர்வடைந்துள்ளது என, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய எண்ணெய்... Read more »

பெரிய வெங்காய இறக்குமதி வரி 20 ரூபாவால் உயர்வு

தேசிய வெங்காய உற்பத்தியாளர்களின் நன்மை கருதி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் இறக்குமதி வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் வெங்காய அறுவடை தற்போது நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more »

30 வீத ஆரம்பக் கொடுப்பனவு கட்டாயம் பெறப்பட வேண்டும் : லீசிங் நிறுவனங்களுக்கு மத்திய வங்கி நிபந்தனை

வாகனங்களைக் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யும் நடவடிக்கைக்கு இலங்கை மத்திய வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி வாகனங்களை முழுமையான குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிதிச்சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றுக்கு அமைய, லீசிங் வசதிகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய... Read more »

யாழ்.வாசியின் ஓட்டோ சந்தை

முச்சக்கர வண்டி ஒன்றினை தனது வியாபார நிலையமாக்கி அதன் மூலம் தனது அன்றாட வருமானத்தினை தேடிக் கொள்ளும் யாழ்.வாசியின் முயற்சியை பலரும் வியப்புடன் பார்த்து அவரை பாராட்டியும் உள்ளனர். தனது மரக்கறிச் சந்தை வியாபாரத்தை விஸ்தரிப்பதற்காக முச்சக்கர வண்டி மூலம் தனது வியாபார பயணத்தை... Read more »

வறுமையால் பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்கள் மீண்டு கல்வியைத் தொடர வணிகர் கழகம் உதவி

யாழ் மாவட்டத்தில் வறுமையால் பாடசாலையை விட்டு இடைவிலகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மற்றும் இடைவிலகிய மாணவர்கள் தமது கல்வியை இடைவிடாது தொடரும் வகையில் யாழ்ப்பாண வணிகர் கழகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. யாழ்.பிரதேச செயலகத்தில் வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை... Read more »

பனம் பொருள் உற்பத்தியாளர்களுக்கான இலகு கடன் திட்டம்!

பனம் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபா வரையிலான இலகு கடன் வசதியும் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான வசதியையும் வழங்குவதற்கு பனை அபிவிருத்திச் சபை முன்வந்துள்ளது. பனம் பொருட்களை மூலப் பொருட்களாகக் கொண்டு பாவனைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை... Read more »

வடக்கின் பிரபல தொழிலதிபர் அண்ணா நடராஜா நேற்றுக் காலமானார்

வடக்கின் பிரபல தொழிலதிபரும், உள்ளூர் உற்பத்தித் துறையில் தடம் பதித்தவருமான அண்ணா கோப்பி நிறுவனர் பொ.நடராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது 69 ஆவது அகவையில் காலமானார். இணுவில் தெற்கினைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் சாதாரண விவசாயக் குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டவராவார். தமது சுய... Read more »

யாழ்ப்பாணத்தில் உதயமாகும் யாழ் வங்கி !

யாழ்ப்பாண வங்கி (Bank Of Jaffna) என்ற பெயரில் வணிக வங்கியொன்றை நிறுவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாங்க் ஒப் ஜப்னா (Bank Of Jaffna) என்னும் பெயரில் இந்த வங்கி இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வர்த்தகர்கள் சிலர் இந்த வங்கியை அமைப்பது குறித்து... Read more »