இலங்கைத்தயாரிப்பு முச்சக்கரவண்டி விரைவில் சந்தைக்கு!

மிக விரைவில் இலங்கை தயாரிப்பு முச்சக்கர வண்டி சந்தைக்கு வரவுள்ளதாக இலங்கை முச்சக்கர வண்டி உற்பத்தி நிறுவனமான மார்க்ரோ அறிவித்துள்ளது. இந்திய பஜாஜ் நிறுவன முச்சக்கர வண்டிக்கு ஒப்பானதாக இந்த தயாரிப்பும் அமைந்துள்ள போதும் இதன் சந்தை விலை 475000 என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

எதிர்க்கட்சித் தலைவர் அளித்த வாக்குறுதி இன்று நிறைவேறுகிறது!

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்திலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த காலங்களில் மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்த நிலையில், அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அளித்த வாக்குறுதியின் பிரகாரம் இன்று (புதன்கிழமை) ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர்... Read more »

புதன்கிழமை வர்த்தக நிலையங்களுக்கும் விடுமுறை

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு சகல வர்த்தக நிலையங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு யாழ்.வணிகர் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக யாழ். வணிகர் கழகசெயலாளர் இ. ஜனக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் நேற்று முன்தினம் 27 ஆம் திகதி நடைபெற்ற நிர்வாக... Read more »

யாழில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதலீட்டாளர்கள் மாநாடு

யாழ்ப்பாணத்தில் இம் மாதம் 22 ஆம் திகதி முதலீட்டாளர்களின் மாநாடானது நடைபெறவுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் இந்த மாநாடு காலை 10 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 03 மணி வரை நடைபெறவுள்ளது. வடக்கு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு உள்ளூர் முதலீட்டாளர்களின் முதலீடுகளை... Read more »

வான்களின் விலைகள் பத்து இலட்ஷத்தால் குறைவடைகின்றது !!

வரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களினால், வேன்களின் விலை சுமார் 10 இலட்சத்தினால் வீழ்ச்சியடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. வாகன இறக்குமதியின் போது காணப்பட்ட 5 வரிகளுக்கு பதிலாக இம் முறை வரவு செலவுத்திட்டத்தில் உற்பத்தி வரி ஒன்று மாத்திரமே... Read more »

மாற்றுத்திறனாளிகளால் யாழ்ப்பாணத்தில் புதியதொரு முயற்சி!

சுயதொழிலை அடிப்படையாக கொண்டு தாமே யாழ்ப்பாணத்தில் ஒரு தொழிற்சாலையை நிறுவி, ஓர் உற்பத்திப்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளனர். நாம் பாவிக்கும் சன்லைட் (sunlight) சவர்க்காரம், Surfexel அல்லது சம்போ(shampo)க்கு பதிலாக புதிதாக ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். மேலும் இதில் வாசனைக்காக compfort போன்ற ஒரு கலவையயையும் சேர்த்துள்ளனர்.... Read more »

நிர்ணய விலையை மீறுவோருக்கு அரசு எச்சரிக்கை

வர்த்தகர்கள் பொருட்களை அதிக விலைக்கு விநியோகிப்பதால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறாத நிலை ஏற்படுவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச குறிப்பிட்டார். இதனால், கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை நுகர்வோர் விவகார அதிகார சபையின்... Read more »

கைத் தொலைபேசி விற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கை!

கைத் தொலைபேசிகள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரம் இன்றி இயங்கும் நிலையங்களுக்கு முற்றுகையிடவுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த மாதத்தின் இறுதி வாரம் முதல் நாடு பூராகவும் சுற்றி வளைப்பு நடவடிக்கையை முன் எடுக்கவுள்ளதாக தொலைத்... Read more »

அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது

அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்விலைகள் பின்வருமாறு, கோழி இறைச்சி (தோலுடன்) 410 ரூபா கோழி இறைச்சி (தோல் இல்லாமல்) 495 ரூபா பருப்பு – 169 ரூபா சீனி (1 கிலோ கிராம்) – 95 ரூபா நெத்தலி (தாய்லாந்து) 1... Read more »

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக சந்தை திறக்கப்படாதது ஏன்?

வடக்கிற்கான பொருளாதார நிலையத்தை வவுனியாவில் அமைப்பதற்கு முயற்சிக்கும் அரசியல்வாதிகள் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு இதுவரை திறக்கப்படாதுள்ள பொருளாதார சந்தை தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தாதது ஏன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கிற்கான பொருளாதார வர்த்தக மையத்தை வவுனியா –... Read more »

வடக்கில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு

வட மாகாணத்தில் உற்பத்தியாகும் தரமான உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றிற்கு சந்தைவாய்ப்பை பெற்றுக் கொடுத்து புலம்பெயர் மக்களின் தேவைகளை பூர்த்தியாக்கும் வகையில் ஏற்றுமதி செய்யவும், அவற்றுக்கான வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் யாழ் வணிகர் கழகம் முன்வந்துள்ளது. இவ்வாறான பொருட்களின் தேவைகள் பற்றிய... Read more »

பாவனையாளர் முறைப்பாட்டு பிரிவு ஆரம்பம். முறைப்பாட்டு எண்களும் அறிவிப்பு

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது தனது சேவையினை மேம்படுத்தும் முகமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பாவனையாளர் முறைப்பாட்டுப் பிரிவு ஒன்றினை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு அதனடிப்படையில் யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது அரச அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் முறைப்பாட்டுப் பிரிவொன்றை உருவாக்கியுள்ளது. மேற்படி முறைப்பாட்டு... Read more »

வடமாகாண வர்த்தகர்களுடனான சந்திப்பு

கடந்த யுத்தகால இடம்பெயர்வுகளுக்கு பின்னர், வடமாகாண வர்த்தகர்கள் பல்வேறு நெருக்கடிகளுடன் தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வர்த்தகர்களின் அபிவிருத்தி தொடர்பாக 5 மாவட்டங்களையும் ஒன்றிணைத்து அதிகாரசபை ஒன்றினை உருவாக்கும் நோக்கோடு வடமாகாண வர்த்தகர்களுடனான சந்திப்பு, யாழ். வணிகர் கழகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில்... Read more »

சிகரட் மற்றும் மதுபானம் மீதான வரி அதிகரிப்பு

சிகரட், மதுபானம் மற்றும் பாம் ஒயில் போன்றவற்றின் வரியை அதிகரிப்பதற்கும், தனியார் சுகாதார சேவை மீதான வெட் வரி வீதத்தை குறைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விசேட பணிகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். பொருளாதார குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நேற்று... Read more »

அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி பொலன்னறுவை, வவுனியா போன்ற பிரதேசங்களில் இதுபோன்று அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சபையின்... Read more »

சிகரெட் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்?

சகல வகையான சிகரெட்டுகளின் விலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் அதிகரிக்கப்படகூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. Read more »

சீமெந்தின் விலை உயர்வு

ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்தின் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதியளித்துள்ளது. இதன்படி, அல்ட்ராடெக், டோக்கியோ மற்றும் ஹோல்சிம் ஆகிய ஐந்து வகையான சீமெந்தின் விலைகளும் 60 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய 870... Read more »

முச்சக்கரவண்டிக்குப் பதிலாக குறைந்த விலைக்கு நம்நாட்டில் வாகனம்

முச்சக்கரவண்டியை விடக் குறைந்த விலையில், நான்கு சக்கர வண்டியொன்றைக் கொள்வனவு செய்வதற்கு வழிசமைத்துக்கொடுப்பதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அறிவித்திருந்தார். இந்நிலையில், அவ்வாகனம் தொடர்பான விவரங்கள், தற்போது வெளியாகியுள்ளன. நான்கு சக்கர வண்டி என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்த போதிலும், அது எவ்வகையான வாகனம் என்று அறிவித்திருக்கவில்லை.... Read more »

முச்சக்கரவண்டிக்குப் பதிலாக கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளது!

முச்சக்கர வண்டிக்குப் பதிலாக சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத் திணைக்கத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் முச்சக்கரவண்டியினால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதனைக் கட்டுப்படுத்தவேண்டிய தேவை... Read more »

யாழில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் 1 பவுண் தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களில் சுமார் 4,000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 22 கரட் தரமுடைய 1 பவுண் (8 கிராம்) தங்கள் 45,900 ரூபாய் தொடக்கம் 47,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால்,... Read more »