Ad Widget

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

நேற்று (8) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி 12.5 கிலோ 246 ரூபாயாலும் 5 கிலோ 99 ரூபாயாலும் 2.2 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது.

பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்தன!

பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது. புறக்கோட்டை வர்த்தக சங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய 600 ரூபாயாக இருந்த பருப்பு மொத்த விலை 410 ரூபாயாகவும், 330 ரூபாயாக இருந்த சீனியின் மொத்த விலை 270 ரூபாயாகவும், ரூ.215 ஆக இருந்த உருளைக்கிழங்கின் மொத்த...
Ad Widget

பாண் உட்பட ​பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு!!

450 கிராம் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம்

ஒரு இலட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் நாளை முதல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தினை மீண்டும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக கடந்த மே மாதத்திற்கான மின்சார கட்டண பட்டியலினை சமர்ப்பிக்குமாறும் லிட்ரோ...

சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட், நூடில்ஸ் விலைகள் அதிகரிப்பு!

சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள பொருட்கள் சிலவற்றின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடுத்தர அளவான பற்பசை ஒன்றின் விலை 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது....

பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என அறிவிப்பு!

பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று நாளை இலங்கைக்கு வரவுள்ள நிலையில், பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, டீசல் ஏற்றிய கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும்...

பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று 24ஆம் திகதி நாட்டை வந்தடைகின்றது!

பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கப்பலில் 35 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோல் காணப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பல் எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எது...

சீனி விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்?

தாய்லாந்தில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய ஒரு கிலோ சீனியின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கக் கூடும் என இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சீனி கிலோகிராம் ஒன்று தற்போது சந்தையில் 265 ரூபா முதல் 300 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில்...

எரிவாயு சிலிண்டர்களின் விலையை 200 ரூபாயால் அதிகரிக்க நடவடிக்கை!

வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை 200 ரூபாயால் அதிகரிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித பீரிஸ், லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும் லிட்ரோ எரிவாயு விலையை உயர்த்தவில்லை என குறிப்பிட்டுள்ளார். அடுத்த நான்கு மாதங்களுக்கு ஓமானில் உள்ள நீண்ட கால...

11 நாட்களுக்குப் பின்னர் எரிவாயு விநியோகம் ஆரம்பம்

நாட்டில் 11 நாட்களுக்குப் பின்னர் இன்று (புதன்கிழமை) முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முதன்மையாக வணிகங்கள், தகனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எரிவாயு இருப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், குறைந்த எண்ணிக்கையிலான வீடுகளுக்கு எரிவாயுவை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பலின் எரிவாயு...

எரிவாயு தட்டுப்பாட்டினால் 80 வீத சிற்றூண்டிச்சாலைகளுக்கு பூட்டு!

நாட்டில் நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 வீதமான சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம், சிறிய மற்றும் நடுத்தர சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்...

6ஆவது நாளாக இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை – லிட்ரோ

நாட்டில் தொடர்ந்து 6ஆவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்த எரிவாயுக் கப்பலை இதுவரை விடுவிக்க முடியாத காரணத்தினால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த கப்பல் கடந்த 8ஆம் திகதி நாட்டை வந்தடைந்த நிலையில் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதன்படி இன்றுடன் சேர்த்து குறித்த கப்பலுக்கு 06...

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு!!

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை மீண்டும் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி 2,850 ரூபாவாக இருந்த சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து 50 கிலோகிராம் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூபா 3,000...

சமையல் எரிவாயு விநியோகம் குறித்து லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களின் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை எரிவாயு விநியோகம் செய்யப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, எரிவாயு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், செவ்வாய்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த லாஃப்ஸ் எரிவாயு கப்பலில் இருந்து வழங்கப்பட்ட எரிவாயு...

இறக்குமதியாகும் பொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் 15-200 சதவீதம் வரை உயர்வடைகின்றன!!!

நேற்று இரவு முதல் புதிய சிறப்புப் பொருள்கள் வரி விதிப்பின் கீழ் அனைத்து இறக்குமதிகளின் விலைகளும் 15 முதல் 200 சதவீதம் வரை உயரும் என்று நிதி அமைச்சின் அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது. கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான டயர்கள் மீதான வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன. வளிச்சீராக்கிகள் (A/C), சலவை இயந்திரங்கள், ரைஸ்...

லிட்ரோ சமையல் எரிவாயு இன்றையதினம் 414 இடங்களில் விநியோகம் – விபரம் இதோ !

லிட்ரோ சமையல் எரிவாயு இன்றையதினம் வியாழக்கிழமை ( ஜூன் 2) 414 இடங்களில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் படி நாடளாவிய ரீதியில் இன்றையதினம் 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் நிறைகளையுடைய 50 ஆயிரம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளன. கீழுள்ள லிங்கை கிளிக்...

மதுபானங்களின் விலையும் அதிகரிப்பு!!

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக மதுபானங்களின் விலையை அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாயினாலும், பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாயினாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகம்!

நாட்டில் இன்றைய தினமும் (புதன்கிழமை) 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை தமது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெறும்...

8 நாட்களுக்கு பின்னர் வழமைக்கு திரும்புகிறது சமையல் எரிவாயு விநியோகம்!

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகலின் பின்னர் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தினம் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவற்றில் 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில்...

முதலாம் திகதியிலிருந்தே சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் – லிட்ரோ நிறுவனம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நாளை மறுதினம் புதன்கிழமை முதல் முன்னெடுக்கப்படும். ஆகவே எரிவாயு சிலிண்டருக்காக வரிசையில் காத்திருப்பதை பொது மக்கள் தவிரித்துக்கொள்ள வேண்டும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 3,500 மெற்றிக்தொன் எரிவாயு அடங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடைந்ததும், தரையிறக்கல் பணியினை தொடர்ந்து விநியோக நடவடிக்கை நாளை மறுதினம் முதல் முன்னெடுக்கப்படும். அத்துடன்...
Loading posts...

All posts loaded

No more posts