Ad Widget

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம்?

எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பால் மாவின் விலை குறைக்கப்பட்டது. இதற்கமைய...

எரிவாயுவின் விலை பாரிய அளவில் குறைப்பு!!

இன்று (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை சுமார் ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய விலை நாளை காலை அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலைத் திருத்தம் இதுவென முதித பீரிஸ் குறிப்பிட்டார். உலக சந்தையில் எரிவாயு விலை வீழ்ச்சி...
Ad Widget

பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அறிவிப்பு!

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் இந்த தருணத்தில் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி பொருட்களின் விலைகளை திருத்தும் அளவுக்கு எரிபொருள் விலை குறைப்பு கணிசமானதாக இல்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்றது!

எரிபொருள் விலை இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை...

ஏப்ரலில் பால் மாவின் விலை மேலும் குறைவடையும் என தகவல்!

ஏப்ரல் முதல் வாரத்தில் பால் மாவின் விலை மேலும் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

பிரதி ஞாயிறு தோறும் யாழ்ப்பாணம் உற்பத்தி பொருட்களுக்கான வாரந்த சந்தை சங்கிலியன் பூங்காவில்!!

யாழ்ப்பாணம் மாவட்டமுயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுட்களுக்கான சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் முகமாக மாவட்ட செயலகத்தினால் 02.04.2023 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் வாராந்த சந்தை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணம் மாவட்ட உற்பத்திப் பொருட்களுக்கான வாரந்த சந்தை” என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயத்துறை, கைத்தொழில் துறை சார்...

கோதுமை மாவின் விலையும் குறைப்பு !

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை நேற்றையதினம் (புதன்கிழமை) முதல் குறைக்கப்பட்டதாக செரண்டிப் மற்றும் பிறிமா நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாயால் குறிக்கப்பட்டுள்ளதாக இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்!

வடக்கின் நுழைவாயில்” சர்தேச வர்த்தக சந்தை 13வது தடவையாக இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 13 ஆவது தடவையாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது. கண்காட்சி கூடத்தினை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நாடா வெட்டி திறந்து வைத்தார்....

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

நேற்று (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறூவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாயினாலும் 05 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 134 ரூபாயினாலும் அதிகரித்துள்ளது. எனவே நேற்று நள்ளிரவில் இருந்து 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 4,743 ரூபாய்க்கும் 5 கிலோ...

குறைக்கப்பட்டது 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!

12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதற்கமைய, பெரிய வெங்காயம் 1 கிலோ – 05 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளை சீனி 1 கிலோ – 02 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 216 ரூபாவாக...

குறைக்கப்பட்டது கோதுமை மாவின் மொத்த விலை!

கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மா 200 முதல் 195 ரூபாய் வரை விற்பனை செய்யப்படவுள்ளது.

நாளை முதல் முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

எதிர்வரும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு 5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. குறைக்கப்பட்ட விலைகள் டிசம்பர் 21 முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொசவின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தெரிவித்துள்ளார். அதன்படி பெரிய வெங்காயம் 5 ரூபாய் குறைக்கப்பட்டு 185 ரூபாயாகவும் சிவப்பு பருப்பு 7 ரூபாய் குறைக்கப்பட்டு...

யாழ். மாவட்டத்திலும் பாண் விலை 10 ரூபாவால் குறைப்பு

யாழ்.மாவட்டத்திலும் பாண் விலை 10 ரூபாவால் இன்று திங்கட்கிழமை(19.12.2022) நள்ளிரவு முதல் குறைவடைந்து 190 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுமென யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகிய இரண்டும் இணைந்து முடிவெடுத்துள்ளன. சனிக்கிழமை (17) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை பத்து...

சீமெந்தின் விலை குறைப்பு!!

நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 225 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு மூட்டை சீமெந்தின் விலை சந்தையில் 2,975 ரூபாயாக காணப்பட்ட நிலையில் புதிய விலை 2,750 ரூபாயாக குறைந்துள்ளது.

அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை!! வௌியாகியது வர்த்தமானி அறிவித்தல்!

பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தற்போது கொண்டு வரப்படும் அரிசி தொகை மற்றும் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் கடன் கடிதங்கள் வௌியிடப்பட்ட ஓடர்களை விசேட அனுமதிப் பத்திரத்தின் ஊடாக துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியும்...

மாவட்ட ரீதியாக லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு!!

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்யக்கூடிய குறைந்த விலை கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இது 4,610 ரூபாவாகும். அதிக விலை யாழ்.மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் இதன் விலை 4,990 ரூபாவாகும். பொருந்தக்கூடிய விலைகளின் முழுப் பட்டியல் கீழே...

சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு!

உள்நாட்டு சமையல் எரிவாயுயின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ 250 ரூபாய் அதிகரித்து 4,610 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 5 கிலோ எரிவாயு 100 ரூபாய் அதிகரித்து 1,850 ரூபாயாகவும்...

பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

பால் மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி 975 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 450 கிராம் உள்ளூர் பால் மா பக்கெற்றின் விலையை 175 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 450 கிராம் உள்ளூர் பால் மா பக்கெற் ஒன்றின் புதிய விலை 175 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு...

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

எரிவாயு விநியோகம் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் இன்று (08) முதல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாசாங்கு செய்யும் நோக்கில்...

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

வெள்ளை சீனி, கோதுமை மா, நெத்தலி, செமண் மற்றும் சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி 22 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளை சீனியின் புதிய விலை 238 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கோதுமை மா 96 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோதுமை...
Loading posts...

All posts loaded

No more posts