Ad Widget

நல்லூர் பிரதேச சபையின் செயற்பாடுகளைக் கண்டித்து திருநெல்வேலி மரக்கறி வியாபாரிகள் பகிஸ்கரிப்பு

நல்லூர் பிரதேச சபையின் செயற்பாடுகளைக் கண்டித்து திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் இன்று சனிக்கிழமை காலை முதல் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலிச் சந்தையில் நடைபாதைக் கடைகளை அகற்றுவதற்கு பிரதேச சபை எடுத்த நடவடிக்கைக்கு அமைய சபையின் ஏற்பாட்டில் பொலிஸாரின் உதவியுடன் நேற்று வெள்ளிக்கிழமை நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டன. ஆயினும் தமது கடைகளை அகற்றப்படுவது...

ATM அட்டை மோசடி: புதிய பாதுகாப்பு நடவடிக்கை!

ஏ.ரி.எம் (ATM) அட்டைகளுக்கூடாக இடம்பெறும் மோசடிகளை தடுப்பதற்காக இலங்கை மத்திய வங்கி புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகம் செய்துள்ளது. இதேவேளை ஏ.ரி.எம் வலையமைப்புக்கூடாக பணப்பரிமாற்றம் செய்யும்போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கை மத்திய வங்கி பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது. பண அட்டையை பயன்படுத்தி ஏ.ரி.எம்...
Ad Widget

பேருந்து கட்டண குறைப்பு இன்று முதல் அமுலில்

பேருந்து கட்டணங்களின் விலை நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன. எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதற்கு அமைய நுாற்றுக்கு 4.2 வீதத்தால் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரச மற்றும் தனியார் பேருந்து பயணக்கட்டணங்களும், சொகுசு மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பேருந்து பயணக் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 12 ரூபாய் என்ற ஆகக்குறைந்த பேருந்து பயணக் கட்டணம் அவ்வாறே...

சோடா உள்ளிட்ட குளிர்பானங்கள் மீதான வரி அதிகரிக்கப்படும் – ராஜித

சீனியின் அளவின் அடிப்படையில் சோடா உள்ளிட்ட குளிர்பானங்களுக்கு விதிக்கப்படும் வரி மீளவும் அதிகரிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனரட்ன அறிவித்துள்ளார். புதிய அமைச்சரவை நியமனம் நேற்று இடம்பெற்றது. அதில் ராஜித சேனரட்ன, மீளவும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் தனது கடமைகளை சுகாதார அமைச்சில் இன்று பொறுப்பெடுத்தார். கடமைகளைப் பொறுப்பேற்றவுடன் சுகாதார அமைச்சர் ராஜித...

முற்றவெளியில் வடக்கு கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்!!

வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் கைத் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் கண்காட்சி வடக்கு மாகாண இணைப்பாளர் கு,ரவிக்குமார் தலைமையில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சுமற்றும் தேசிய கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றமும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடாத்துகின்றன. இந்தக்...

எரிபொருள்களின் விலை குறைகிறது!

பெற்றோல் மற்றும் டிசெலின் விலைகள் இன்று (30) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் தலா 5 ரூபாவால் குறைக்கப்படுகிறது என்று நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெற்றோல் 92 மற்றும் 95 ஒக்ரைன், டிசெல் சுப்பர் மற்றும் ஓட்டோ என்பனவற்றின் விலைகள் தலா 5 ரூபாவால் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை 135 ரூபாவாகும்...

புதிய நாணயக் குற்றிகளை வெளியிட்டுவைத்தார் பிரதமர் மஹிந்த!

இலங்கை மத்திய வங்கியினால் நேற்றையதினம் 10 ரூபாய், 5 ரூபாய், 2 ரூபாய் மற்றும் 1 ரூபாய்க்கான புதிய நாணயக் குற்றிகள் வெளியிடப்பட்டன. நாடாளுமன்றில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ இந்த புதிய நாணயக் குற்றிகளை வெளியிட்டார். பார்வைத் திறன் குறைப்பாடு உடையவர்களுக்கான விசேடமாக வடிவமைக்கப்பட்ட இந்த நாணயக் குற்றிகள்,...

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு ஐந்து வருட வரி விலக்கு

சிறிய மற்றும் நடுத்தர வர்க்க முயற்சியாளர்களுக்கு ஐந்து வருட வரி விலக்கு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 28 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக வரி வீதம் குறைக்கப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. இதன்போது, ஏற்றுமதிக்கான...

ஐ.ஓ.சி.யும் எரிபொருள் விலையை குறைத்தது!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைவாக நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைப்பை அடிப்படையாக கொண்டு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளது. அதன்படி ஒரு லீட்டர் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் ஒரு லீட்டர் 07...

சீனி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் குறைப்பு

சீனி உள்ளிட்ட அத்தியாவசிப் பொருள்கள் மீதான தீர்வை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. சீனி மீதான சிறப்பு வரி 10 ரூபாவாலும் பருப்பு மற்றும் கடலை மீதான தீர்வை 5 ரூபாவாலும் உழுந்து மீதான தீர்வை 25 ரூபாவாலும் கோதுமைத் தானியம் மீதான தீர்வை 3 ரூபாவாலும் குறைக்கப்படுகின்றன.

எரிபொருளின் விலை அதிரடியாக குறைப்பு!

எரிபொருளின் விலை நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அதிரடி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், பெட்ரோலின் விலை 10 ரூபாயாலும், டீசலின் விலை 7 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீட்டர் 155 ரூபாயிலிருந்து 145 ரூபாயாக குறைவடைகிறது. அத்துடன் டீசலின் விலை 123 ரூபாயிலிருந்து...

இறக்குமதியாகும் பெரிய வெங்காயம், உருளைக்கிழங்குக்கு வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு மீதான சிறப்புச் சந்தைத் தீர்வை கிலோ ஒன்றுக்கு 40 வீத்த்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு இன்று (1) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது. உள்ளூர் விவசாயிகளின் நன்மை கருதியே இந்த தீர்வை அதிகரிப்பு செய்யப்பட்டதாக நிதி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் விலைச் சூத்திரம் இனிமேல் இல்லை

எரிபொருள் விலைச் சூத்திரம் புதிய அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார். இன்று (30) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்துக் கூறிய அவர், மக்கள் இனிமேல் 10ம் திகதி வரும் போது அச்சமடைய தேவையில்லை. 10ம் திகதி பேய் தினம். இனிமேல்...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் தற்போது எரிபொருள் விலை வேகமாக குறைந்து வருகிறது. 2018 ஒக்டோபர் 05 முதல் இன்று வரையான கடந்த 21 நாட்களில் ப்ரெண்ட் Brent மசகு எண்ணெய் பெரல் ஒன்று 84.47 டொலரில் இருந்து 76.77 டொலர் வரையிலும், OPEC Basket மசகு எண்ணெய் பெரல் ஒன்று 84.09 டொலரில் இருந்து 75.04 டொலர்...

இரண்டு அரச வங்கிகள், இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபைகள் ஜனாதிபதியினால் கலைப்பு!

இரண்டு அரச வங்கிகள் மற்றும் முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபைகள் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவை கலைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய இலங்கை வங்கி, மக்கள் வங்கி, மற்றும் இலங்கை முதலீட்டு சபை என்பவற்றின் பணிப்பாளர் சபைகளைக் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தரவிட்டிருந்ததாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள்...

யாழில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை!

தீபாவளி பருவ காலத்தில் யாழ். சாவகச்சேரி பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபார நோக்குடன் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகளுக்கு நட்டம் ஏற்படுவதாக சாவகச்சேரி வணிகர் மன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாதென நகரசபையிடம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்தது. குறித்த கோரிக்கை...

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு!

எரிபொருள் விலை நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், 149 ரூபாவாக இருந்த 1 லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 1 லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 155 ரூபாவாக அமைந்துள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை...

நள்ளிரவு முதல் சீனி மற்றும் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

சமையல் எரிவாயுவின் விலைகள் மற்றும் சீனியின் விலைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்வடையவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில் ஒரு கிலோ சீனியின் விலை 20 ரூபாயாலும், 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் விலையை 190 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வாழ்க்கைச் செலவு குழுவினால் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, அரசாங்கம்...

பாண் விலை மீண்டும் அதிகரிப்பு?

பாண் மற்றும் பனிஸ் உள்ளிட்ட சிற்றூண்டிகளின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. வெதுப்பக பொருட்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் ஃபாம் ஒயில் ஆகியவற்றிற்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய வரி காரணமாகவே, அவற்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தவகையில் ஒக்டேன் 95 ரக மற்றும் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு...
Loading posts...

All posts loaded

No more posts