கடற்படை எமது நிலத்தை விட்டு வெளியேறவேண்டும்: இரணைதீவு மக்கள்

தமது பூர்வீக பூமியான இரணைதீவை ஆக்கிரமித்து தங்கள் வீடுகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அங்கிருந்து வெளியேறி அரச காணிகளுக்கு செல்லவேண்டுமென இரணைதீவு மக்கள் குறிப்பிடுகின்றனர். அருகிலுள்ள அரச காணிகளில் கடற்படையினர் குடியிருப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்றும், தம்மை தமது சொந்த நிலத்தில் தொழில் செய்ய... Read more »

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் உரிய நட்டஈட்டை வழங்காமல் ஏமாற்றி வருகின்றன : சிறிதரன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் உரிய நட்டஈட்டை செலுத்த வில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பிரதமருடனான நேரடி கேள்வி பதில் நேரத்தின்போது அவர் இவ்வாறு குற்றம் சுமத்தினார். தொடந்து உரையாற்றிய அவர்... Read more »

கிளிநொச்சி விளையாட்டு வீரருக்கு இலங்கை கிரிக்கட் அணியில் விளையாட வாய்ப்பு!! வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை!

கிளிநொச்சி பளையை சேர்ந்த செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் 23வயதுடைய வேகப்பந்து மற்றும் கடினப்பந்து வீச்சாளரை இன்று (09.08.2017) காலை 9மணியளவில் வன்னி பிராந்தி பிரதிப் பொலிஸ்மா காரியாலயத்திற்கு அழைத்து கலந்துரையாடிய வன்னி பிராந்திப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவரது பயற்சிகளுக்குத் தேவையான உபகரணங்களை... Read more »

செஞ்சோலைப் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

செஞ்சோலைப் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (14-08-2016) இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேற்படி நிகழ்வுகள் வள்ளிபுனம், முல்லைத்தீவில் (தாக்குதலுக்கு உள்ளான செஞ்சோலை வளாக வீதி) இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும்... Read more »

கதிர்காமத்தில் உறங்கியவர்கள் மீது பஸ் ஏறியதில் கிளிநொச்சியை சேர்ந்த இருவர் பலி!!

கதிர்காமத்தில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்து, இதனை கவனிக்காத, பஸ்ஸின் சாரதி பஸ்ஸை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பஸ்ஸின் சில்லுகளில் சிக்கியுள்ளனர்.... Read more »

கிளிநொச்சியில் தொடர்ந்தும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் உள்ள கிணற்றில் இருந்து மேலும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் கிணறுகள், மலசல கூட குழிகள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இவ்வாறான வெடி பொருட்கள் மீட்கப்பட்டு வந்தன. இதேவேளை அண்மையில் ஆனையிறவு பகுதியில்... Read more »

முல்லைத்தீவில் வறட்சியால் 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியினால் 30,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவின் வறட்சி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 136 கிராம அலுவலர் பிரிவுகளிலும் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட... Read more »

தனியார் சொகுசு பேருந்து விபத்து சாரதி உட்பட ஆறுபேர் வைத்தியசாலையில்

இன்று அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிசென்ற தனியார் சொகுசு பேருந்து கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் அறையுக்குள் மின்சார கம்பங்களையும் அருகில் இருந்த கடைத்தொகுதியையும் உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளானது. சாரதி உட்ப்பட ஆறு பேர் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்... Read more »

பொலிஸ்மா அதிபர் கிளிநொச்சி விஜயம்

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் உள்ள கிராம சேவையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் சிவில் குழுக்களுடனான சந்திப்பொன்றில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பொலிஸ்மா அதிபர் நேற்று கலந்து கொண்டார். குறித்த சந்திப்பு நேற்று மாலை கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில்... Read more »

முல்லைத்தீவில் கொட்டித்தீர்த்த மழை: மகிழ்ச்சியில் மக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நேற்று பிற்பகல் மழை பெய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், முள்ளியவளை, தண்ணீரூற்று, குமுழமுனை உள்ளிட்ட பிரதேசங்களிலே நேற்று மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த தொடர் வறட்சி காரணமாக முல்லைத்தீவு பெருமளவில் பாதிக்கப்பட்டு... Read more »

இராணுவத்தினரால் மல்லாவி வைத்தியசாலை வளாகத்தில் சிரமதான பணி

இலங்கை இராணுவ வீரர்கள் அண்மையில் கிளிநொச்சி மல்லாவி வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானப்பணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரியினால் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க 65வது படைப்பிரிவின் கீழுள்ள சுமார் 500 படை வீரர்கள் இந்த சிரமதானப்பணியில்... Read more »

இணையத்தள நிலையங்களும் செல்லும் சிறுவா்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவும்!

கிளிநொச்சி நகரத்தில் இயங்குகின்ற இணையத் தள நிலையங்களை நாடுகின்ற சிறுவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளினால் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டின் பின்னர் கிளிநொச்சி நகரத்திலே பல இணையத் தள நிலையங்கள் இயங்குகின்றன. இவ் இணையத் தள நிலையங்களை நோக்கி சிறுவர்கள் கூடுதலாக... Read more »

கிளிநொச்சியில் வாகன விபத்து: சாரதி உட்பட நால்வர் படுகாயம்

கிளிநொச்சியில் தனியார் பேரூந்து ஒன்றும் பிக்கப் ரக வாகனம் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தெரேசா ஆலயம் முன்பாக நேற்று (திங்கட்கிழமை) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. தெரேசா ஆலயத்திற்கு முன்பாக வீதியினை... Read more »

இரணைமடு வாய்க்காலை ஆழப்படுத்தும் நடவடிக்கையில் விவசாயிகள்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தம் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இரணைமடு குளத்தின் கீழ் 800 ஏக்கர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால் பயிர்செய்கை நிலங்களிற்கு நீர் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரணைமடு... Read more »

புலிகள் மீதான தடைநீக்கம் தமிழ் அரசியலுக்கு கிடைத்த அங்கீகாரம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டமையானது, தமிழ் மக்களின் அரசியலை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றதென அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். குறித்த தடை நீக்கம் தொடர்பாக கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே... Read more »

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அமைதி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது... Read more »

கிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதியின் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. 2016 இல் தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய சிறந்த பணியினை பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த... Read more »

குடிநீர் போத்தலினுள் மருந்து கலந்து மாணவியை கொலை செய்ய முயற்சி?

குடிநீர் போத்தலினுள் ஒருவகை மருந்துப்பொருள் கலக்கப்பட்ட நிலையில், அதனை பருகிய மாணவி மயக்கமடைந்த சம்பவமொன்று கிளிநொச்சி கனகபுரம் பகுதி பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. பாதிக்கப்பட்ட மாணவி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த குடிநீர் போத்தலினுள்... Read more »

யாழ். துப்பாக்கிச்சூட்டை கண்டித்து கடையடைப்பு: கிளி. சந்தை முடங்கியது

யாழில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கண்டித்து, கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்களின் ஏற்பாட்டில் இக்கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கிளிநொச்சி சேவை சந்தை முழுமையாக முடங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை... Read more »

சூசையின் படகு விவகாரம் குறித்த செய்திகள் உண்மையில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் சூசை பயன்படுத்தியதாக கூறப்படும் படகு முல்லைத்தீவு கடலில் இருப்பதாக வௌியான தகவல்களில் உண்மையில்லை என, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படகு அண்மையில் முல்லைத்தீவு கடலில் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. எதுஎவ்வாறு இருப்பினும்,... Read more »