Ad Widget

வடக்கின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலை,பூநகரியில் அமைச்சர் ஐங்கரநேசன் திறந்துவைத்தார்

வடமாகாணத்தின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலையை பூநகரியில் வடமாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த வியாழக்கிழமை (17.09.2015) திறந்துவைத்துள்ளார். பூநகரி பள்ளிக்குடாவில் கொடுவா மற்றும் பாலைமீன் வளர்ப்புத்திட்டம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடற்கரையை அண்மித்ததான கடலில் பண்ணைகள் அமைத்து வளர்க்கப்படும் இம்மீன்களுக்குப் புரதத் தீவனத்தை வழங்குவதில் கடற்றொழிலாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடலில்...

பிரமந்தனாறு குளத்தின் அணைக்கட்டுப் புனரமைப்புப் பணிகள் துரிதகதியில்

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற குளங்களில் ஒன்றான பிரமந்தனாறு குளத்தின் அணைக்கட்டைப் புனரமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. பிரமந்தனாற்று வடிநிலத்தின் குறுக்காக அணைக்கட்டை உருவாக்கியே பிரமந்தனாற்றுக் குளம் உருவாக்கப்பட்டது. இக்குளத்திலிருந்து பெறும் நீர்ப்பாசனத்தின் மூலம் 600 ஏக்கர் பரப்பளவில் மிளகாய், நிலக்கடலை, வெங்காயம் போன்ற மறுவயற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. காற்றின் வேகம் அதிகமாக உள்ள பகுதியாக...
Ad Widget

வடமாகாண சபை மாங்குளத்தில் அமைக்கப்படும்

வடமாகாண சபையின் கட்டடத் தொகுதியை வடமாகாணத்தின் மத்தியாகக் கொள்ளப்படும் மாங்குளத்தில் அமைப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாங்குளம் பகுதியில் வடமாகாண சபை கட்டடத் தொகுதியை அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காணியை, வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் திங்கட்கிழமை (14) பார்வையிட்டுள்ளனர். மாங்குளம் சந்தியிலிருந்து 500 மீற்றர்...

கைதிகள் தினத்தில் அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி முல்லைத்தீவில் போராட்டம்

கைதிகள் தினமான கடந்த சனிக்கிழமை சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனக்கோரி முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. மேற்படி போராட்டம் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தரப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு முல்லைத்தீவூ தனியார் பஸ் நிலையத்தில் ஒன்று...

ஏ9 வீதியில் வயோதிபரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி, ஏ9 பரந்தன் வீதியில் வயோதிபரின் சடலமொன்று பலத்த காயத்துக்குள்ளான நிலையில் நேற்று சனிக்கிழமை (12) காலை மீட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் பயணித்த குறித்த வயோதிபரை, வெள்ளிக்கிழமை இரவு வாகனமொன்று மோதிவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் நேற்று காலை தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த வயோதிபர் யார்...

இரண்டாவது நாளாகவும் தொடரும் நடைபயணம்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் நடை பயணம் இன்று வெள்ளிக்கிழமை இடண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. கிளிநொச்சியில் காலை 9 மணியளவில் ஆரம்பமான இரண்டாம் நாள் பயணத்தின் போது வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். தமிழ் மக்கள் உள்நாட்டு விசாரணை விரும்பவில்லை, சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதை வலியுறுத்தும்...

சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் நோக்கி நடைபயணம் ஆரம்பம்

இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி நடை பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. மனித உரிமை மீறல்களுக்கு உள்ளக பொறிமுறை பொருத்தமற்றது என்பதை சட்டிக்காட்டியும் சர்வதேச விசாரணையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியும் வட மாகாண சபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம்...

முல்லை விவசாயிகளுக்கு விதைநெல் விநியோகம்

முல்லை மாவட்ட விவசாயிகள் 128 பேருக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து விதைநெல் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சிக் கல்லூரியில் நேற்று புதன்கிழமை (09.09.2015) இடம்பெற்ற நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு விதைநெல்லை விவசாயிகளுக்கு வழங்கிவைத்துள்ளார். உவர்எதிர்ப்பு நெல்லினமான ஏ.ரீ 362 மற்றும் நீரிழிவு...

கிளிநொச்சி இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் தற்கொலை

கிளிநொச்சி இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியை பயன்படுத்தியே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் 31 வயதான ஒருவரே மரணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜெயக்குமாரி மீண்டும் கைது!

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பாலேந்திரன் ஜெயக்குமாரியை மீண்டும் பொலிஸார் கைது செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட இவர் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது. முன்னரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே நீதிமன்றின் ஊடாக விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவுடிகளை ஓடவிட்டு வேடிக்கை பார்த்த பொலிஸார்!

வவுனியா, குருமண்காட்டில் பெண்களுடன் கீழ்தரமாக நடக்க முற்பட்ட ரவுடிக் கும்பலை தப்பியோட விட்டு பொலிஸார் வேடிக்கை பார்த்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, நெடுங்கேணியில் இருந்து வந்த தந்தை இரு புதல்வர்கள் மற்றும் 4 சகோதரிகள் குருக்கள் புதுக்குளத்தில் உள்ள தமது வீட்டிற்கு செல்வதற்காக குருமண்காட்டில்...

வறுமையால் பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்கள் மீண்டு கல்வியைத் தொடர வணிகர் கழகம் உதவி

யாழ் மாவட்டத்தில் வறுமையால் பாடசாலையை விட்டு இடைவிலகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மற்றும் இடைவிலகிய மாணவர்கள் தமது கல்வியை இடைவிடாது தொடரும் வகையில் யாழ்ப்பாண வணிகர் கழகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. யாழ்.பிரதேச செயலகத்தில் வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

லைக்கா கிராம வீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் – சம்பந்தன்

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் பூந்தோட்ட முகாம் மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வவுனியா வடக்கு சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் அமைக்கப்படும் லைக்கா கிராமத்தின் பணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். லைக்கா கிராம வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு...

முல்லைத்தீவில் அரச போக்குவரத்து பஸ்ஸைக் கடத்திய இருவர் கைது!

முல்லைத்தீவு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான கடத்தப்பட்ட அரச போக்குவரத்து பஸ் ஒன்று ´ஹோஹம்ப´ என்னும் இடத்தில் வைத்து மீட்க்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அரச போக்குவரத்து பஸ் ஒன்று ​நேற்று அதிகாலை, சேவையில் ஈடுபடும் நோக்கில் கொக்கிளாய் என்னும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதனை இரு நபர்கள் நேற்றிரவு (செவ்வாய்கிழமை) 7.30 மணியளவில் கடத்திச் சென்றிருந்தனர்....

இரணைமடுக்குள அணைக்கட்டுப் புனரமைப்பு

கிளிநொச்சி இரணைமடுக்குள அணைக்கட்டுப் புனரமைப்புப் பணிகளை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று திங்கட்கிழமை (24.08.2015) சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை எடுத்து வருவதற்கு இணங்கினால் மாத்திரமே இரணைமடுக்குள அணைக்கட்டுத் திருத்த வேலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்ற நிபந்தனை முன்னர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இரணைமடுக்குளத்திலிருந்து நீரை யாழ்ப்பாணத்துக்கு...

வவுனியா, அம்மா பகவான் வீதி மக்களை வெளியேற்ற எடுக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு

வவுனியா, குட்செட், அம்மா பகவான் வீதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற கமநலசேவைகள் திணைக்களம் எடுத்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - வவுனியா, குட்செட், அம்மா பகவான் வீதியில் கடந்த காலத்தில் யுத்தம் காரணமாக வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் 1997ஆம் ஆண்டு தொடக்கம் கட்டம் கட்டமாக...

பிரபாகரனின் வழிகாட்டுதலில் எனது பணியை தொடர்வேன்

தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்ட இந்த கட்சியில் அவரது வழிகாட்டலிலும் விடுதலைப் புலிகளின் காலத்தின் நீட்சியாக என்னுடைய பயணத்தை எனது மக்களின் உரிமைக் காகவும் தன்னாட்சிக்காகவும் பாடுபட்டு தொடர்ந்தும் செயற்படுவேன் என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள சிவஞானம் சிறீதரன்...

காணாமல் போன சிறுமி தொடர்பில், பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

கடந்த 03ஆம் திகதி கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் காணாமல் போன 17 வயது சிறுமியை மீட்பதற்கு பளை பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். தனியார் வகுப்பிற்கு சென்று வருவதாகக் கூறி சென்ற 17 வயதுடைய எஸ்.சுமங்கலா என்ற சிறுமியே இதுவரை வீடு திரும்பவில்லை. காணாமல் போன தமது மகளை மீட்டுத்தருமாறு கோரி சிறுமியின் பெற்றோர், பளை...

ஐ.தே.க வேட்பாளர் மீது தாக்குதல் குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சின்னராஜா விஜயராஜன், கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக வைத்து முச்சக்கரவண்டி உரிமையாளர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (13) தாக்கியதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி வைத்தியசாலை அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை நடத்துவதற்காகச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும்...

சைக்கிள் சின்ன முதன்மை வேட்பாளரை இலக்கு வைத்து வவுனியாவில் பொலிசார் மீண்டும் அடாவடி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் அவர்களை இலக்கு வைத்து பொலிசாரின் அடாவடிச் செயற்பாடுகள் தொடர்கின்றன. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று புதன்கிழமை சைக்கிள் சின்னத்தின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் அவர்களை அழைத்து வருவதற்காக...
Loading posts...

All posts loaded

No more posts