சிறுவனை தாக்கிய சம்பவம்: சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பிணை

கிளிநொச்சியில் சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தலா ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.... Read more »

போலி வாக்குச் சீட்டுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் கைது!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற பெண்வேட்பாளர் ஒருவர் சட்டவிரோத போலி வாக்குச் சீட்டுடன் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கரைச்சி பிரதேச சபைக்கு பரந்தன் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான... Read more »

சிறைக்காவலர்கள் தாக்கிய சிறுவனுக்காக மனித உரிமை ஆணைக்குழு களத்தில்!

சிறுவன் ஒருவன் சிறைக்காவலர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற சிறுவன், சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தில் மோதி விபத்திற்குள்ளானான். சிறுவனின் தவறினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக கூறி, சிறைக்காவலர்கள் மனிதாபிமானம் இன்றி சிறுவனைத்... Read more »

சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள்!!!!

நேற்று மாலை கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும் சிறைக்காவலர்களது சீருடையில் இருந்த இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கரடிப்போக்கு சந்தியில் நேற்று மாலை சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப்... Read more »

ஜனாதிபதியின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை தீயிட்டு எரிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் கட்டப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு 9 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள... Read more »

கிட்டுவை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்ததா கூட்டமைப்பு?

வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய விடயங்களைப் பயன்படுத்த வேண்டாம் என, அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் குழுவொன்று, முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கிட்டுவின் 25வது... Read more »

கிளிநொச்சியில் பாலத்தின் கீழிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

கிளிநொச்சி, பன்னங்கண்டி பாலத்தின் கீழிருந்து ஆணொருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வட்டக்கச்சி மாயவனுரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக பயணித்தவரே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம்... Read more »

இரணைமடுக் குளம் உருவாக்கப்பட்டு 98 ஆண்டுகள்: மக்கள் கொண்டாட்டம்

கிளிநொச்சி இரணைமடுக் குளம் உருவாக்கப்பட்டு நீர்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 98 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் இன்று (திங்கட்கிழமை) பொங்கல் நிகழ்வொன்று இடம்பெற்றது. இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், இரணைமடு விவசாய சம்மேளன விவசாயிகளால்... Read more »

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்!

கிளிநொச்சி, பூநகரி பள்ளிக்குடா தொடக்கம் பரந்தன் வரையான பிரதேசத்தில் 1000 மருது மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சியில் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வருடத்தில் மர நடுகைத் திட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு இலங்கை இராணுவம் பிரதான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.... Read more »

இரணைமடுச் சந்தியில் பாரவூர்தி விபத்து: சாரதி உயிரிழப்பு!

கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் 2 ரிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார். மாங்குளம் பகுதியிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை யாழ் நோக்கிப் பயணித்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் கிளிநொச்சி – முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக... Read more »

கொக்காவில் பகுதி கோரவிபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது

முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம் வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம் அல்வாய் வடக்குப் பகுதியை சேர்ந்த நவரத்தினம் அருண் (வயது – 24), சந்திரசேகரம் ஜெயசந்திரன் (வயது -36), யாழ்ப்பாணம் மாலு சந்தி பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் இந்துகன் (வயது... Read more »

பொக்கோ இயந்திரம் மோதியதில் மாணவன் பலி!

கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் பாடசாலை மாணவர் ஒருவர் பலியானார். சம்பவத்தில் மற்றுமொரு மாணவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொக்கோ (JCB) இயந்திரம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மாணவர்கள் மீது புரண்டுள்ளது. இதன்போது அனர்த்தத்தில் சிக்கிய மாணவர்... Read more »

கிளிநொச்சியில் கோர விபத்து! : நால்வர் உயிரிழப்பு

கிளிநொச்சி மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கொக்காவில் பகுதியில், தென்னிலங்கையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி... Read more »

வவுனியா வடக்கில் பல்வேறு இடங்களில் தமிழ்த் தேசியப் பேரவை மக்கள் சந்திப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையினர் நேற்று 08.01.2018 ஞாயிற்றுக்கிழமை வவுனியா வடக்கில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை- மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டனர். நெடுங்கேணி ஒலுமடு, நெடுங்கேணி சூடுவெந்தான் கிராமம், வவுனியா வடக்கு,... Read more »

எழிலன் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை... Read more »

பிளாஸ்ரிக் குறித்த விழிப்புணர்வை மக்கள் மனதில் விதைக்க கிளிநொச்சி மாணவர்கள் செய்த காரியம்!

உலகளாவிய ரீதியில் பிளாஸ்ரிக் பொருட்களை தடை செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், கிளிநொச்சியிலும் இதற்கான முதற் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக பிளாஸ்ரிக் கழிவு பொருட்களால் உருவாக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.... Read more »

விபத்துக்குகாரணமான லொறி சாரதியை விடுவிக்க பொலிஸார் முயற்சி!! பொதுமக்கள் பொலிஸார் இடையே அமைதியின்மை!!

கிளிநொச்சி- செல்லையாதீவு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில், பொலிஸார் மற்றும் உயிரிழந்தவரின் உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை சீரடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த வியாழக்கிழமை மாலை பூநகரி நோக்கி மோட்டார் சைக்கிளில்... Read more »

வைரஸ் தொற்று குறித்து ஆராய அமைச்சர் குணசீலன் மருத்துவனைகளுக்கு விஜயம்!

முல்லைத்தீவில் தீவிரமாக பரவி வரும் இன்புளுவன்சா பி வைரஸ்தொற்று தொடர்பில் ஆராய, வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மல்லாவி, மாங்குளம், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆகிய மருத்துவமனைகளுக்கு விஜயம் மேற்கொண்ட அவர் வைரஸ்தொற்று தொடர்பிலான நிலைமைகளை... Read more »

கேப்பாப்புலவு காணி விடுவிப்பு ; மிகுதி காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்

கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினர் வசமிருந்த காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் நேற்றயதினம் மக்கள் முன்னிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. காணி கையளிக்கும் நிகழ்வு கேப்பாப்புலவுவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் இராணுவத்தினரின்... Read more »

முன்னாள் போராளிகளின் உதவியுடன் தேர்தலில் சாதிக்க கூட்டமைப்பு முயற்சி!

முன்னாள் தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களின் உதவியுடன் உள்ளூரட்சி மன்றத் தேர்தலை வெற்றிக் கொள்ளும் முயற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இறங்கியுள்ளனர். அந்தவகையில், கூட்டமைப்பினருக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (புதன்கிழமை) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்... Read more »