இரணைமடு காணிகள் அளவிடப்படுவதன் நோக்கம் என்ன?: மக்கள் கேள்வி

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பராமரிப்பிலுள்ள கிளிநொச்சி இரணைமடு பகுதி காணிகள் அளவிடப்படுவதன் நோக்கம் குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளர். குறித்த காணிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) அளவிடப்பட்டு வருகின்றன. இக்காணிகளில் பொதுமக்களது காணிகளும் உள்ளடங்குகின்ற நிலையிலேயே அவர்கள் இவ்வாறு வினவியுள்ளனர். விடுதலை புலிகளினால் விவசாய செய்கை... Read more »

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வாய்தர்க்கம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இணைத் தலைவர்களான ரிசாட் பதூர்தீன், காதர்மஸ்தான், வடக்கு முதல்வர் சி.விவிக்கினேஸ்வரன் ஆகியோர் இல்லாத நிலையிலேயே இக்கூட்டம் இடம்பெற்றது. எனினும் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

வடக்கு கிழக்கில் உள்ள மாவீர் துயிலுமில்லங்கள் மீள் எழுச்சி பெறுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக கடந்த வருடம் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் அனுமதி வழங்கிய நிலையில் வடக்கில் பல துயிலுமில்லங்களில் விளக்கேற்றப்பட்டன. அதேபோல் இந்த வருடமும் கார்த்திகை மாதம் ஆரம்பிக்கப்பட்ட நாள்... Read more »

மேல் நீதிமன்றத்துக்கு எழிலனின் ஆட்கொணர்வு மனு தொடர்பான அறிக்கை!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட 5 பேரின் வழக்கு தொடர்பான அறிக்கை வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. எழிலன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு... Read more »

இரணைமடுவில் எந்தவொரு முகாமும் அகற்றப்படவில்லை: ராணுவப்பேச்சாளர்

இரணைமடு பிரதேசத்தில் இருந்து எந்தவொரு ராணுவமுகாமும் அகற்றப்படவில்லை என்று ராணுவப்பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இராணுவப்பேச்சாளர் இதனை கூறியுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்களுக்கு அமைய... Read more »

யானைகளின் அட்டகாசத்தினால் முல்லைத்தீவு மக்கள் பாதிப்பு!!

யானைகளின் அட்டகாசத்தினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய முல்லைத்தீவு மக்கள், பாதிப்பை தவிர்க்க பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு கோரியுள்ளனர். முல்லைத்தீவில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருகின்ற நிலையில், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்து வருகின்றது. குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும்... Read more »

இரணைமடு குளத்திற்கருகில் இருந்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியது

இரணைமடு குளத்திற்கு அருகில் முகாம் அமைத்திருந்த இராணுவத்தினர் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இரணைமடுக்குளத்தின் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த பகுதியில் அமைந்திருந்த நீர்பாசன திணைக்களத்தின் விடுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை குறித்த இரணைமடுக் குளத்திற்கு... Read more »

கிளிநொச்சி சமுர்த்தி வங்கி முகாமையாளரை இடமாற்ற கோரிக்கை!

கிளிநொச்சி பூநகரி தெற்கு பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளரை இடமாற்றம் செய்யுமாறு பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த முகாமையாளரின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளால் பயனாளிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையிலே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக பயனாளிகள் பூநகரி... Read more »

கிளிநொச்சியில் வைத்தியர் இல்லாததால் உயிர் பறிபோனது

கிளிநொச்சி பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பூநகரி 4ஆம் கட்டையைச் சேர்ந்த சந்திரலோகராசலிங்கம் நிர்மலா (வயது-55) என்ற குறித்த பெண், நண்பர் ஒருவரது மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்துள்ளார். படுகாயங்களுக்கு உள்ளான அவரை அவரது நண்பர்... Read more »

ஏ9 வீதியில் கடும் பனி மூட்டம்!! சாரதிகளுக்கு எச்சரிக்கை!!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – கண்டிக்கான ஏ9 வீதியில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றது. இதற்கமைய, வவுனியா, மாங்குளம், புளியங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக வாகன சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர். Read more »

முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் பொலிஸார்!

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடந்த 2017ஆம் ஆண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருடைய விபரங்களை பெறுவதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) முற்பகல்... Read more »

காதலித்து ஏமாற்றிய இளைஞனுக்கு 10 வருட சிறை

16 வயதுக்கு குறைந்த பிள்ளையை காதலித்து பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முல்லைத்தீவு இளைஞனொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வித்தித்து தீர்ப்பளித்துள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நாகராசா ஜெகதீஸ்வரன் என்ற இளைஞன்... Read more »

கிளிநொச்சி மாணவிகளுக்கு கருத்தடை ஊசி போடப்பட்டதா? வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் விளக்கம்

கருப்பை கழுத்து புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 10 வயதை தாண்டிய பெண் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் எச்.பி.வி தடுப்பு மருந்து கொடுக்கப்படுகின்றது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார். இதனை கருத்தடை ஊசி என மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள்... Read more »

முல்லை மக்களின் காணியை சுவீகரிக்க முயற்சி! : பரந்தன் வீதியில் மறியல் போராட்டம்

முல்லைத்தீவு மக்களின் காணியை நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நில அளவீட்டு முயற்சி, மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது. வட்டுவாகல் கடற்படை முகாம் அமைந்துள்ள மக்களுக்குச் சொந்தமான காணி, மக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை அளவிடுவதற்கு அரச அதிகாரிகள் சென்றுள்ளனர். இதனை அறிந்த மக்கள்,... Read more »

மாணவிகள் மீது பேருந்துகளில் தொடர்ந்தும் பாலியல் துன்புறுத்தல்

கிளிநொச்சியின் வட்டக்கச்சி, இராமநாதபுரம் மாணவர்கள் பேருந்துகளில் பயணிக்கின்ற போது தொடர்ந்தும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதி மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களிற்கு மாலை நேர வகுப்புக்களுக்கு சென்று வருகின்ற நிலையில், இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி... Read more »

கிளிநொச்சியில் விபத்து! யாழ் இந்திய துணை தூதுவரின் மகள் அதிஷ்டவசமாக உயிர்த் தப்பினார்.

யாழ் இந்திய துணை தூதுவா் ஆர்.நடராஜனின் மகள் பயணித்த வாகனம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சங்குப்பிட்டியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த, யாழ் இந்திய துணை தூதுவரின் மகள் சென்ற வாகனம், சங்குப்பிட்டிப் பகுதியில் வைத்து, அதே திசையில் பயணித்த கார்... Read more »

இன்று பலர் முன்னாள் போராளிகளை வைத்து அரசியல் செய்து வருகின்றனர் : தமிழ் தேசிய ஜனநாயக போராளிகள்

தமிழ் தேசிய ஜனநாயக போராளிகள் அமைப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த ஊடக சந்திப்பு கிளிநொச்சி பாரதி ஸ்டார் விடுதியில் மாலை 2 மணியளவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஜனநாயக போராளிகள் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்திருந்தனர். இது குறித்து... Read more »

முல்லைத்தீவு கடலில் உயிரிழந்த மற்றைய மாணவனின் சடலமும் கண்டெடுப்பு!

முல்லைத்தீவு கடலில் உயிரிழந்த மற்றுமொரு மாணவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரைப் பிரதேசத்தில் நீராடியபோது காணாமல்போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி தினமான நேற்று (புதன்கிழமை) நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு... Read more »

முல்லைத்தீவு கடலில் காணமல்போன மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நீச்சலில் ஈடுபட்டு காணாமல்போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தீபாவளி நாளான நேற்று பொழுதை மகிழ்சியாக கழிக்கும் நோக்கில் நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கடலில் குளித்துகொண்டிருந்த சமயம்... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஏக்கத்துடன் தொடர்கிறது

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 224 நாட்களை கடந்து இன்றும் தொடர்கின்ற நிலையில் தீர்வு கிடைக்கும் வரை போரட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் தெரிவிக்கின்றனர். யுத்த காலத்தில் வலிந்து இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே... Read more »