Ad Widget

அதிரடி படையினரின் முற்றுகைக்குள் சிறீதரனின் வீடு!

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வீட்டு வளவில் முதலாவதாக படையினர் தேடுதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளார். அதன் பின்னர் தவறுதலாக தேடுதல் நடத்திவிட்டோம் என அடுத்த வளவிற்குள் பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்பகுதியில் பெருமளவான ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து இவ்வாறு தேடுதல் நடவடிக்கை...

முல்லைத்தீவு பூவரசங்குளத்தில் சிசுவின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பூவரசங்குளப் பகுதியில், சிசு ஒன்றின் சடலம் குளம் ஒன்றின் அருகில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிசுவை தாய், குளத்தில் அருகில் பிரசவித்திருக்கலாம் எaன்றும், அதன் பின்னர் குளத்தில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. இதேவேளை, சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், சிசுவின் தாயையும்...
Ad Widget

இனப்படுகொலையாளிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – சிறிதரன்!

இனப்படுகொலையாளியான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை பொறுத்த வரையில் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நேரடியான இனப்படுகொலையாளி எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். அவர்...

சாந்தி எம்.பி தனது 18 வயது மகனின் பெயரில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை கோரினார் – சிவமோகன்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தனது 18 வயது மகனின் பெயரில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை கோரினார், ஆனால் நாம் அதனை நிராகரித்தோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,...

முல்லைத்தீவில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டினால் பதற்றம்!

முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தவர்களை நோக்கி நேற்று இரவு இராணுவத்தினர் துப்பாக்கி சூட்டு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அம்பகாமம் பகுதியில் தற்பொழுது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜித்திற்காக 1000 தேங்காய் உடைத்து வழிபட்ட தமிழர்கள்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவில் வடமாகாண மக்கள் 1000 தேங்காய்களை உடைத்து வழிபட்டனர். வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட மக்கள் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் வருகை...

பாடசாலை நிர்வாகத்தின் கவனயீனத்தால் மாணவி மரணம்?

முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. றோமன் கத்தேலிக்க பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்று வரும் தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த 12 வயதுடைய இ. லிந்துசியா (சீனு) என்ற மாணவி கடந்த மாதம் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி சம்பவ தினத்தன்று பாடசாலை...

வடக்கு இளைஞர்களே 2 மாதம் பொறுமையாக இருங்கள்: மகிந்தானந்த

நாட்டில் அமையவுள்ள எமது புதிய அரசாங்கத்தினால் வடக்கிலுள்ள இளைஞர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதற்கு இளைஞர்கள் அனைவரும் இரண்டு மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிசொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மகிந்தானந்த மேலும்...

கிளிநொச்சியில் தாயும் மகனும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் தாயும், மகனும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (30) செவ்வாய்க்கிழமை காலையில் அவர்களது இருவரும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர் என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர். 70 வயதான தாயும், 34 வயதுடைய மகனின் சடலமுமே வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன. கூரிய ஆயுதத்தால் அவர்கள் வெட்டப்பட்டு, குருதி வெள்ளத்தில் சடலங்களாக காணப்பட்டனர். அவர்கள் கொலை...

சொந்த மகளைச் சீரழித்த தந்தை தலைமறைவு ; தேடுதல் வேட்டையில் பொலிஸார்!!

13 வயதுச் சிறுமியான தனது மகளை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை தலைமறைவாகியுள்ளதாக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சிறுமி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சிப் பொலிஸாரால் இந்த அறிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பரந்தன் சிவபுரத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் முறைப்பாடு வழங்கப்பட்டது....

பரந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியில் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரிப்பு!

கிளிநொச்சி – பரந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியில் கடந்த நான்கு நாட்கள் தொடர்ச்சியாக வீதிகளில் செல்லும் பெண்களிடம் தங்கச் நகைகளை அறுத்து செல்லுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(வியாழக்கிழமை) காலை அலுவலக கடமைக்காக சென்று கொண்டிருந்த கிராம அலுவலரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இருவர் அவர் அணிந்திருந்த சங்கிலியினை அறுத்துச்சென்றுள்ளனர் குறித்த...

முல்லைத்தீவில் இளைஞனுக்கும் யுவதிக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த சஜித் பிரேமதாச!

முல்லைத்தீவு - சப்தகன்னிமார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அறநெறிப் பாடசாலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச இருவருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் . குறித்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாசவினை அழகாக ஓவியமாக வரைந்து அமைச்சரிடம் கையளித்த முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தை சேர்ந்த பாலகாந்தன் பிரசன்னா...

கடற்படையிடம் கையளித்த தனது மகனைத் தேடியலைந்த தாய் முல்லைத்தீவில் மரணம்!

கடற்படையினரிடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவரை தேடி அலைந்த தாய் ஒருவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி நடத்தப்படுகின்ற அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்துள்ளார். இவ்வாறு நேற்று (புதன்கிழமை) உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியைச் சேர்ந்த செபமாலைமுத்து திரேசம்மா என்ற தாயார் ஆவார்....

செம்மலையில் ராஜமகா விகாரையின் விகாராதிபதி மீண்டும் அட்டகாசம்!

செம்மலை பழையநீராவியடி பிள்ளையார் கோயிலில் நந்தி கொடிகளை அறுத்தெறிந்து குருகந்த ராஜமகா விகாரையின் விகாராதிபதி மீண்டும் அட்டகாசம்! முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. கடந்த (06.07. 2019) அன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில்...

பாடசாலை காணி ஆக்கிரமிக்கப்படவில்லை கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்!!

கிளிநொச்சி மதிய ஆரம்ப பாடசாலைக்கு உரிய காணியை ஆக்கிரமித்தும் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடமும் முறையிட்டும் எதுவித பலனுமில்லை என்னும் செய்தி ஆதாரமற்றதும் உண்மைக்கு புறம்பானதுமாகும் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் விஸ்வநாதன் வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளார். 25 வருடங்களாக வாழ்வாதார சுயதொழிலாக வெதுப்பாக உற்பத்தி நிலையத்தை மேற்கொண்டு வருவதோடு, 15க்கும் மேற்பட்டோர் இவ் வெதுப்பக...

சிறிதரன் மற்றும் விஜயகலாவிற்கு எதிராக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!!

கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அடிப்படைத் தகுதியுள்ள பணியிலிருக்கும் தம்மை தகுதி கோரப்படாத பதவியிலிருப்போர் தகுதியில்லை என கூறுவதாக குற்றம் சாட்டி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளில் பொது மக்கள் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கல்வி இராஜாங்க...

இராணுவ வாகனம்மோதி இளைஞன் உயிாிழப்பு!

கிளிநொச்சி- இராமநாதபுரம் பகுதியில் இராணுவ வாகனம் மோதி இளைஞா் ஒருவா் உயிாிழந்துள்ளாா். இன்று மதியம் 12.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விமானப் படையின் ஜீப் வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதியதில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதித்த...

காலை எட்டு மணியை கடந்தும் ஏ9 வீதியில் காத்திருக்கும் மாணவர்கள்!

பாடசாலைக்கு செல்வதற்காக புறப்பட்டு ஏ9 பிரதான வீதிக்கு வருகின்ற போதும் பேருந்து ஏற்றிச்செல்லாத காரணத்தினால் காலை எட்டு மணியை கடந்தும் வீதியில் காத்திருக்கும் அல்லது வீடுகளுக்கு திரும்பிச்செல்லும் நிலைமை பரந்தன் உமையாள்புரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காணப்படுகிறது. கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் உமையாள்புரம், பகுதிகளில் இருந்து கிளிநொச்சி நோக்கி சில பாடசாலைகளுக்கு செல்கின்ற...

மாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – மாவை

எமது மாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் வாள் வெட்டு என்ற வன்முறைப் போக்கினை எதிர்காலத்தில் இல்லாமற்செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சியில், புதிய தமிழ்நாதம் பத்திரிகையை வெளியிட்டுவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

தமிழ் பிரபாகரனால் பட்டபாடு போதும்! முஸ்லிம் பிரபாகரன் வேண்டாம்!!! முல்லைத்தீவில் ஜனாதிபதி

தமிழ் பிரபாகரனால் நாங்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்தோம். அவ்வாறிருக்க முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கில் தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. எனவே மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். மேற்கண்டவாறு ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறியுள்ளாா். நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கயந்த கருணாதிலக, தயா...
Loading posts...

All posts loaded

No more posts