சர்வதேசத்தின் தலையீட்டின் மூலமே உண்மைகளை வெளிக்கொண்டு வரலாம்: முதலமைச்சர்

சர்வதேச உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒருபோதும் உண்மையை வெளிக் கொண்டுவர உதவி செய்யாது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் முதலமைச்சரின் வேண்டுகோள்

எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் அனைத்து வடகிழக்கு தமிழ் மக்களும் 3 நிமிட மௌன அஞ்சலியை அனுஷ்டிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரும் நாளாக இம்மாதம்... Read more »

பொருத்து வீடுகளுக்கு எதிர்ப்பு வெளியிடுவோம் : முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வட மாகாண சபையின் கோரிக்கையை புறந்தள்ளி மத்திய அரசாங்கத்தினால் வடக்கில் 6 ஆயிரம் பொருத்து வீடுகள் கட்டப்படுவதற்கு, வட மாகாண சபை எதிர்ப்பு வெளியிடவுள்ளதாக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (12) முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.... Read more »

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நான் வேண்டாதவர்; விக்னேஸ்வரன் ஆதங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நான் வேண்டாதவர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இதனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலுக்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை... Read more »

புற்றுநோய் கதிரியக்க இயந்திரம் பழுது! கவனமெடுக்காத வடக்கு மாகாண சபை மீது மக்கள் விசனம்!!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் கதிரியக்க இயந்திரம் பழுதடைந்து காணப்படுவதால் வடக்கு மாகாணத்தில் உள்ள புற்றுநோயாளர்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் புதிதாக புற்றுநோய் உள்ளது என இனங்காணப்பட்ட நோயாளர்களுக்கு உடலின் எந்தப் பாகத்தில் கதிரியக்க சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதைக் கண்டறியும் Moulding... Read more »

போராட வேண்டிய இடம் இங்கில்லை வடக்கு முதலமைச்சர் பட்டதாரிகளுக்குத் தெரிவிப்பு

பட்டதாரிகள் தமது வேலைவாய்ப்புக் கோரி, தலைமை அமைச்சர் அலுவலகத்தின் முன்போ, அரச தலைவர் அலுவலகத்தின் முன்போதான் போராட வேண்டும். வெறும் சிபார்சு செய்யும் அதிகாரம் கொண்ட எங்களால் வேலைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது. இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண... Read more »

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் காரணமாக வட மாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு!

வடமாகாண சபையை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (09) வடமாகாண சபை கட்டட தொகுதியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகம் ஆகியவற்றை மூடி சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளே விடாது... Read more »

வட. மாகாண சபையின் ஏற்பாட்டில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு நினைவேந்தல்!

முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் நினைவு நாள், எதிர்வரும் 18ஆம் திகதி வட. மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக வட. மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். மேலும், முள்ளிவாய்க்கால் மண்ணில் மேற்கொள்ளப்படவுள்ள நினைவேந்தல் நிகழ்விற்கான ஒழுங்குகள் நடைபெற்றுவரும் அதேவேளை, இது குறித்து எதிர்வரும்... Read more »

வடமாகாணசபை அபிவிருத்திக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவறவிட்டிருக்கின்றது!

வடமாகாணத்தில் என்ன அபிவிருத்தி நடந்திருக்கிறது? என கேள்வி எழுப்பியிருக்கும் வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா வடமாகாணசபை அபிவிருத்திக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவறவிட்டிருக்கின்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். வடமாகாணசபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு... Read more »

ஜனாதிபதியை சந்திக்கிறார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

ஆண்டுகாலமாக தீர்வின்றி போராடிவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். குறித்த சந்திப்பு எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி சந்திப்பின் போது, குறிப்பாக வலிந்து காணாமல்... Read more »

இயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்து வருபவன் நான்!! திரிவுபடுத்தப்பட்ட செய்திக்கு வருத்தம்!!!

கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி விட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன். ஆனால் மன வருத்தம் அடைய வேண்டிய விதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார். முதலமைச்சரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள... Read more »

 ‘கரை எழில்’ குறித்து வடக்கு முதல்வருக்குக் கடிதம்

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசாரப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார விழாவின் போது வெளியிடப்பட்ட, ‘கரை எழில் 2016’ என்ற நூல் தொடர்பில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனே இவ்வாறு கடிதம் அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தின் பிரதிகள்,... Read more »

வட மாகாண அபிவிருத்தி தொடர்பில் ஆராய எதிர்வரும் 18ம் திகதி கூட்டம்!

வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பால் கலந்துரையாடுவதற்கான ஆலோசணைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி வட மாகாண முதலமைச்சர் தலமையில் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் வடக்கில் எதிர் காலத்தில் மேற்கொள்ளவுள்ள பல திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்புதல் மற்றும் அது... Read more »

மீள்குடியேற்றத்திற்கு இராணுவமே தடையாக உள்ளது; வட மாகாண முதலமைச்சர்

வடக்கில் தொடர்ந்தும் பெருமளவில் நிலைகொண்டுள்ள இராணுவம் உட்பட அரச படையினரே யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்சி... Read more »

அகதிகள் இல்லாத நிலையை ஏற்படுத்துமாறு இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கையில் அகதிகள் இல்லாத நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பணிப்பாளர் டெய்ஸி டெல் வலியுறுத்தியுள்ளதாக வட.மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பணிப்பாளர், வட. மாகாண... Read more »

புகலிடம் கோரும் வடக்கு மக்களை அவுஸ்ரேலியா மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்

எமது நாட்டில் காணப்படும் பாதுகாப்பற்ற நிலையை கருத்திற்கொண்டு, அவுஸ்ரேலியாவிடம் புகலிடம் கோரும் வட. மாகாண மக்களை மனிதாபிமானத்துடன் அணுகுமாறு அவுஸ்ரேலிய அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியரவன்ரி-வெல்ஸ்... Read more »

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளோம்: வடக்கு முதல்வர்

எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட்பீறியுடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு... Read more »

வட மாகாணசபையில் பிரதி அவைத்தலைவரால் பெரும் குழப்பம்!!

வடக்கு மாகாணசபையில் கடந்த வியாழக்கிழமை பெரும் குழப்பம் ஏற்பட்டது. அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்கள் திடீர் என ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் அவர்கள் அவையைக் கொண்டு நடத்தும் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திருமண... Read more »

வடக்கு முதல்வர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

வட மாகாண முதலமைசரால் ​நேற்று ஜனாதிபதிக்கு பின்வரும் விடயங்கள் தெரியப்படுத்தப்பட்டன. வட மாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளும் சென்ற வாரம் தங்களுடைய அன்புக்குரியவர்கள் காணமற் போனமை பற்றி என்னைச் சந்தித்துப் பேசினார்கள். அதே போல தங்களுடைய காணிகளை விடுவிப்பது... Read more »

காணாமல் போனோரின் உறவினர்களுடன் வடக்கு முதல்வர் சந்திப்பு

காணாமல் போனோரின் உறவினர்களது பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று தற்போது யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது. கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். காணாமல் போன தமது உறவுகளின் உண்மை... Read more »