20 வது திருத்தம் : இன்று வட மாகாண சபையில் விவாதம்

அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கான அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தம் இன்று வட மாகாண சபையில் சமர்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்று (04) மேற்கொள்ளப்படும் என வட மாகாண சபை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 20 வது அரசியலமைப்பு... Read more »

முதலமைச்சருக்கு எதிராக டெனிஸ்வரன் மனு

தன்னை அமைச்சர் பதவியிலிருந்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்கியமையை எதிர்த்து, வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்கும்படியும், வடமாகாண சபையின் உறுப்பினர்களான குணசீலன் மற்றும் சிவநேசன்... Read more »

வடக்கு மாகாண சபைக்குள் கவனயீர்ப்பு போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, வடக்கு மாகாண சபையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 103வது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகின்ற நிலையில்,... Read more »

மக்கள் சேவையைக் கருத்தில் வைத்து எமது தனியான விருப்பு வெறுப்புக்களைத் தியாகம் செய்ய வேண்டும்! : முதலமைச்சர் சி.வி

“நாம் இருவேறு கடமைகளில் ஈடுபட்டுள்ளோம். கட்சி நலம் கருதி சிபாரிசு செய்வது உங்கள் பொறுப்பு. ஆட்சி நலம் சார்ந்து நடவடிக்கை எடுப்பது முதலமைச்சர் பொறுப்பு. கட்சிகளால் நியமிக்கப்பட்டவர்கள் அல்லாது பிறரை முன்னைய அமைச்சரவையில் உள்ளடக்கியதாக நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். அது வாஸ்தவமே” என்று, வடமாகாண முதலமைச்சர்... Read more »

அமைச்சு பதவிக்காக நீதிமன்றம் செல்ல தயார் : டெனிஸ்வரன்

தாம் வகிக்கும் போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சை ஆளுனர் நினைத்தால் போல் சுவிகரிக்க முடியாது என வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் வேண்டு கோளுக்கமைய அவ்வாறு அமைச்சு பதவியை சுவிகரிக்க ஆளுனருக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். டெனிஸ்வரனை அமைச்சு... Read more »

வடக்கு மாகாணத்தின் புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

வடக்கு மாகாணத்தின் மீன்பிடி அமைச்சராக சிவனேசனும், சுகாதார அமைச்சராக வைத்திய கலாநிதி குணசீலனும் சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் ரெனினோல்ட் குரே முன்னிலையில், இவர்கள் இருவரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்போது, முதலமைச்சர் விக்னேஸ்வரனும் உடனிருந்தார். வடக்கு மாகாண... Read more »

பரிந்துரைக்காத ஒருவரை அமைச்சராக்க டெலோ எதிர்ப்பு

“வட மாகாண சபையில் டெலோவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியை, டெலோவின் உத்தியோகபூர்வ பரிந்துரையை மீறி குணசீலனுக்கு வழங்குவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுவது, டெலோவுக்குள் கடும் அதிர்வலைகளையும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் தோற்றுவித்துள்ளது” என, டெலோ தெரிவித்துள்ளது. இது குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,... Read more »

‘டெனிஸ்வரனை நீக்கிவிட்டேன்’ : முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

“வடமாகாணப் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கிவிட்டேன்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தாவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். நேற்று (22) அனுப்பிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, “டெலோ விடுத்த... Read more »

புகையிரத விபத்துகளைத் தடுக்க உடன் நடவடிக்கை அவசியம் : சி.தவராசா

புகையிரதக் கடவை விபத்துகளைத் தடுக்க வடமாகாண சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (24.08.2017) வட மாகாண சபையில் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.... Read more »

குணசீலன் மற்றும் சிவனேசன் ஆகியோருக்கு அமைச்சு பதவி!

முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் குணசீலன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவனேசன் ஆகியோர் விரைவில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.... Read more »

முதலமைச்சர் பாப்பாண்டவரின் பெயரை உவமைக்கு எடுத்துக் கொண்டமை கண்டிக்கத்தக்கது : சி.தவராசா

வட மாகாண சபையின் கையாலாகாத் தன்மைக்கு விடையளிக்கத் தெரியாமல் முதலமைச்சர் பாப்பாண்டவரின் பெயரை உவமைக்கு எடுத்துக் கொண்டமை கண்டிக்கத்தக்கது என வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். தான் ஊடக விளம்பரத்திற்காகச் செயற்படுவதாக தெரிவித்து விடயத்தைத் திரிபுபடுத்த முதல்வர் முயன்றுள்ளதாகவும் அவர்... Read more »

வடமாகாண அவைத்தலைவரின் சாதுரியத்தாலையே எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருக்கின்றார் : சி.வி. விக்னேஸ்வரன்

வடமாகாண அவைத்தலைவரின் சாதுரியத்தால் தான் எதிர்க்கட்சி தலைவர் தனது பதவியை தக்க வைத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் , மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.... Read more »

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறார் முதலமைச்சர் : சி.தவராசா

வட மாகாண சபையின் செயல் திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சரினால் அவையில் கூறப்பட்ட பதில்கள் என்னால் முன்வைக்கப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகளைத் திசை திருப்பும் வகையில் அமைந்திருக்கின்றதே அன்றி என்னால் முன்வைக்கப்பட்ட விடயங்களிற்கான ஆக்க பூர்வமான பதில்களாக அமைந்திருக்கவில்லை. என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர்... Read more »

மக்களின் வரி பணத்தில் இலவசகல்வியினை கற்ற வைத்தியர்கள் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற தயாரா? : சிவாஜிலிங்கம் கேள்வி

தனியார் மருத்துவக்கல்வியை எதிர்க்கும் வைத்தியர்கள் மக்களின் வரி பணத்தில் இலவசகல்வியினை கற்ற வைத்தியர்கள் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற தயாரா? என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் ,... Read more »

அமைச்சர் ரிஷாதை பதவி விலக கூறும் அய்யூப் அஸ்மின்

முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் மக்களின் காணிகளை மீட்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் மற்றும் வடாமாகாண முதலமைச்சர் ஆகியோர் தலையிடுவதற்கு அமைச்சர் றிஷாட் பதியூதீன் தடையாக உள்ளார் என கூறியிருக்கும் வட மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், மேற்படி காணிகளை மீட்க முடியாமைக்காக அமைச்சர்... Read more »

தியாகி திலீபனின் நினைவுத்தூபியை புனரமைக்க நடவடிக்கை

யாழ். நல்லூர் பின் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, யாழ். மாநகர ஆணையாளருக்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய வடக்கு மாகாண சபை அமர்வில், அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்தார். தியாகி திலீபனின் நினைவிடம் எவ்வித பாதுகாப்பு வேலிகளும்... Read more »

‘பாப்பரசராக முயற்சிக்கிறார் தவராசா!’ : வடக்கு முதல்வர் சி.வி. குற்றச்சாட்டு

பாப்பரசரை போல பிரபல்யம் அடையவேண்டும் என்பதற்காகவே வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தன்னைப் பற்றி உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி வருகிறார் என, வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 102ஆவது அமர்வு, அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் காலை 9 மணிக்கு... Read more »

அமைச்சுப் பதவி பறிக்கப்படும் என்ற அச்சம் எனக்கும் உள்ளது: அனந்தி சசிதரன்

அமைச்சராக பொறுப்பெடுத்துள்ள நிலையில் பல்வேறு சவால்களிற்கு முகம் கொடுத்து வருவதுடன், வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியும் எப்போது பறிக்கப்படும் என்ற அச்சமும் உள்ளதாக வட மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள், புனர்வாழ்வு மற்றும் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை)... Read more »

நம்பிக்கையை சிதறடிக்கும் முதலமைச்சர் சி.வி: சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

எந்த நம்பிக்கையுடன் வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதோ அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் வகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார் என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியா சேமமடு கிராமத்தில் நேற்று (திங்கட்கிழமை) கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல் நட்டும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு... Read more »

அமைச்சுப் பதவியில் இருந்து விலக மாட்டேன்: டெனிஸ்வரன்

வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சிப்பொறுப்பில் இருந்து தான் ஒரு போதும் சுய விருப்பத்துடன் பதவி விலகப்போவதில்லை என்றும், கட்சியோ முதலமைச்சரோ தனக்கு பெரியவர்கள் இல்லை என்றும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு டெனிஸ்வரனுக்கு டெலோ அறிவித்திருந்த நிலையில், அவரது... Read more »