தமிழ் பொலிஸ் இல்லாத காரணத்தால் அவசர முறைபாடுகளை பதிவு செய்வதில் சிரமம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் போதிய தமிழ் பொலிஸார் இல்லாத காரணத்தால் அவசர முறைபாடுகளை பதிவு செய்வது சிரமமாக காணப்படுகிறது என பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் பொது மக்கள் தெரிவிக்கையில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் போதிய தமிழ் பொலிஸார் இல்லாத நிலை... Read more »

முதலாம் ஆண்டு ஆசிரியை நடத்தும் அறுநூறு மாணவர்களை கொண்ட 1சி பாடசாலை

கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தின் 1சி பாடசாலையான முட்கொம்பன் வித்தியாலத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் அதிபர் இன்மையால் அறுநூறு மாணவர்களை கொண்ட பாடசாலையை ஆண்டு ஒன்றுக்கு கல்வி கற்பிக்கும் பயிற்றப்பட்ட ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரியரே நடத்திவருகின்றார். ஆனால் நகரில் உள்ள பாடசாலை... Read more »

உரும்பிராய் பொதுச் சந்தை சுகாதாரமற்ற நிலையில்! உரிய தரப்பினர் கவனம் எடுப்பார்களா?

உரும்பிராய் பொதுச் சந்தையில் சுகாதாரமற்ற நிலை காணப்பட்டு வருவதனால் பொருட்களை நுகர்வதற்கு மக்கள் தயக்கம் காட்டிவருவதாக சந்தைக்கு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சந்தையில் இறைச்சிக்கடைகள் மற்றும் மீன் விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் அதன் கழிவுகள் உரிய முறையில்அகற்றப்படாமையினால் சந்தையில் ஒரு பகுதியில் ஏராளமான புழுக்கள்... Read more »

வாட்டும் வெயிலில் சிறுகுழந்தைகளுடன் யாசகம் கேட்கும் பெண்கள்

யாழ்ப்பாணம் கைதடி பிள்ளையார் ஆலயத்துக்கு முன்னால், இளம் வயதுடைய இரு பெண்கள், கையில் சிறு குழந்தைகளுடன் யாசகம் கேட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் அதிக வெப்பம் நிலவி வருகின்றது. இருந்தபோதும் அச்சிறு குழந்தைகளையும் கையில் ஏந்தியவாறு அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இன்றி, அப்பெண்கள் வீதியில்... Read more »

காக்கைதீவுப் பகுதியில் மாடுகளின் கொல்கலன் கழிவுகள் கொட்டப்படுவதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

யாழ்ப்பாணம், காக்கைதீவுப் பகுதியின் அராலி வீதியோரத்தில், மாடுகளின் கொல்கலன் கழிவுகள் முறைகேடாகக் கொட்டப்படுவதனால், குறித்த பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையினால் சேர்க்கப்படும் திண்மக்கழிவுகள் நிறைந்த கல்லுண்டாய் வெளிக்கும் காக்கைதீவு பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் மீள்சுழற்சி... Read more »

கிராம சேவகர் மீது மதுபோதைக் கும்பல் தாக்குதல்!! நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது மக்கள் அதிருப்தி!!

தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொடிகாமம் அல்லாரை J/322 கிராம சேவையாளர் ஒருவர் மதுபோதைக் கும்பலால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி கிராம சேவையாளரைக் கடமை நேரத்தில் அவரைத் தாக்கியவர்கள் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட... Read more »

மினி சூறாவளி ; 38 வீடுகள் சேதம்

வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், மழையுடன் கூடிய கடுங்காற்று வீசியமையால், 38 வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. அந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாம் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக, பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தினால், வவுனியா களுக்குன்னமடுவ, பெரியக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள... Read more »

புலம்பெயர் தமிழர் ஒருவரால் சுன்னாக மக்கள் அதிருப்தியில்!

சுவிற்சர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் ஒருவர் தனது காணியை சுன்னாகம் காவல்துறையினருக்கு விற்பனை செய்வதற்கு முன்வந்துள்ளார். உடுவில், சுன்னாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குறித்த புலம் பெயர்ந்த தமிழரே காவல்துறையினருக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளார். குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள குறித்த காணியை, குடியிருப்பாளர்கள் அந்தக்... Read more »

யாழ்.சிறுவர் பூங்காவில் விளையாடும் சிறுவர்களுக்கு டெங்கு பரவும் அபாயம்!

யாழ்.சிறுவர் பூங்காவிற்கு முன்னால் மாநகரசபையால் கழிவுகள் போடுவதற்காக வைக்கப்பட்டிருக்கிற தொட்டிகளைச்சுற்றிலும் கடதாசி மற்றும் பிளாஸ்ரிக் குப்பைகள் சிந்தப்பட்டும், கொட்டப்பட்டுமுள்ளன இதனால் பூங்காவிற்கு வருகின்ற தமது பிள்ளைகளுக்கு டெங்கு பரவும் அபாயமுள்ளதாக பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், யாழின் முக்கியமான... Read more »

முள்ளிக்குளத்தை யுத்தம் இடம்பெற்ற பிரதேசமாக மாற்றியது கடற்படை!

யுத்தம் இடம்பெறாத மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் தாம் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக அந்த கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மூன்று நாட்களில் முள்ளிக்குளத்தில் இருந்து வெளியேறுவோம் என வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா கடற்படை இன்று பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், வாழங்கிய... Read more »

முல்லைத்தீவில் அதிவேக சிங்கள குடியேற்றம்

“வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டமானது, மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், படையினருக்கான நில சுவீகரிப்புக்கள், கடல்வள சுறண்டல்கள், பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ மயமாக்கல் போன்றவற்றினால் விழுங்கப்பட்டு வருகின்றது. முழுமையாக விழுங்கப்படுவதற்கு முன்னர், மாவட்டத்தையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என,... Read more »

பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள எமக்கு தீர்வு வேண்டும் : நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள்

“நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் தொழிலை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என, நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சமாசத்தலைவர் கி.அருள்ஜீவன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பல்வேறு வழிகளிலும் பின்தங்கிய நிலையில் காணப்படும் நெடுந்தீவு பகுதியில் வாழ்ந்து வரும் மீனவர்கள், தமது தொழில் நடவடிக்கைகளை கைவிட வேண்டிய... Read more »

இராணுவத்தின் காவலரணை அகற்றுக ; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வலி. விடக்கு அச்சுவேலியினூடாக தெல்லிப்பளைக்குச் செல்லும் பிரதான வீதியான வயாவிளான் – தோலகட்டி வீதியை விடுவிக்குமாறு வலியுறுத்தி பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வயாவிளான் – தோலகட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள இராணுவத்தின் காவலரணை அகற்றி, வீதியை திறந்துவிட வேண்டும் எனக் கோரியே இன்று காலை... Read more »

அரசியல்வாதிகளின் அழுத்தமின்மையே காணிகள் விடுவிக்கப்படாமைக்கு காரணம்

அரசாங்கத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் அழுத்தம் குறைவாக இருக்கின்றமையே காணி விடுவிப்புக்கு தீர்வு கிடைக்காமைக்கான காரணம் என கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் ராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கடந்த காலத்தில் தொடர் போராட்டங்களை... Read more »

யாழ். ஆரியகுளத்துநீர் சிவப்பாக மாறியமை பாரிய பிரச்சினை இல்லையாம்!

யாழ். ஆரியகுளத்து நீர் சிவப்பு நிறமாக மாற்றமடைந்தமை ஒரு முக்கிய பிரச்சினையாக இல்லை எனவும் அவ்வாறு முக்கிய பிரச்சினையாக இருந்தால் உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,... Read more »

காணிகளை விடுவிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம்: கேப்பாப்பிலவு மக்கள்

படையினர் வசமுள்ள தமது காணிகளை நாளை காலை 8 மணிக்கு முன்னதாக விடுவிக்காவிட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளார். தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி அம் மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம்... Read more »

தென்னிலங்கை மீனவர்களால் காரைநகர் மீனவர்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். “காரைநகர் கடற்பரப்பில் கடந்த சில வாரங்களாக நீர்கொழும்பு, புத்தளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், இழுவைப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். காரைநகர் பகுதியில் உள்ள கடற்படையின் பாவனையில் உள்ள... Read more »

கிளிநொச்சி வளாகத்தில் பௌத்த விகாரை: பிள்ளையாா் கோவில் அமைக்க மறுப்பு

யாழ்ப்பாணம் பல்கலைகழத்தின் கிளிநொச்சி, அறிவியல்நகா் பீடங்களில் சிறியளவில் பிள்ளையாா் கோவில் அமைத்து வழிபடும் மாணவா்களின் முயற்சிக்கு, நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளதாக மாணவர்கள் கூறினர். இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது, “யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம், மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில், பாரிய இராணுவ முகாமாக காணப்பட்டது.... Read more »

கழிவு ஒயில் வழக்கு;ஆட்சேபனை சமர்பிக்க வடமாகாண சபைக்கு ஒருமாத அவகாசம்

யாழ்.சுன்னாகம் கழிவு எண்ணெய் விவகார வழக்கில் ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றை ஒருமாத காலத்திற்குள் சமர்பிக்குமாறு உச்சநீதிமன்றம் வடமாகாண சபைக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப், புனநேக அலுவிஹார ஆகியோர் தலைமையிலான குழாம் முன்னிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மனு விசாரணையின்போது... Read more »

சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்று தான் இருக்க வேண்டிவரும் ; நாவற்குழி சிங்கள மக்கள்

எங்களுக்கு வீடுகளை வழங்ககக் கூடாது எங்களை வெளியேற்றுங்கள் என்றால் எங்கள் சொந்த இடத்திலிருந்து நாங்கள் எங்கு செல்வது, அவ்வாறு எங்களை விரட்டினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று தான் இருக்க வேண்டி வரும் என நாவற்குழியில்... Read more »