ஒலிபெருக்கிச் சத்தத்தைக் குறைக்க சொன்ன மக்களை அச்சுறுத்திய பொலிஸார்!!

ஒலிபெருக்கிச் சத்தத்தைக் குறைக்க சொன்ன குடும்பத்தாரை மாங்குளம் பொலிஸார் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் செல்வபுரம் முறிகண்டியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் வழிபாட்டிற்கு பொலிசாரிடம் ஒலிபெருக்கி அனுமதி கோரியிருந்தனர். குறித்த... Read more »

துணுக்காய், அக்காயராயன் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு பேரூந்து சேவையை ஆரம்பிக்குமாறு கோரல்

முல்லைத்தீவு – துணுக்காயில் இருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற பஸ் சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக நடைபெறாததன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். துணுக்காய், உயிலங்குளம், ஆலங்குளம், தென்னியங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம், முக்கொம்பன், பூநகரி வழியாக... Read more »

உரிமையை பற்றி பேசும் அரசியல்வாதிகள் உயிர் வாழ்வதை பற்றி சிந்திக்க வேண்டும்

எப்பொழுதும் உரிமை உரிமை என பாலர் பாடசாலை முதல் எல்லா மேடைகளிலும் பேசுகின்ற அரசியல்வாதிகள் மக்களின் வறுமையை நீக்கி அவர்கள் மூன்று வேளை சாப்பிடுவதற்கும் வழி செய்ய வேண்டும் என கிளிநொச்சி பொன்னகர் மத்தி, அக்கராயன் கரிதாஸ் குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் உரிமையை... Read more »

உயிலங்குளம் வீட்டுத்திட்டத்தில் இருந்த மக்கள் வௌியேற்றம்

முல்லைத்தீவு – துணுக்காய் – உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்கள், அடிப்படை வசதிகள் இன்மை மற்றும் வீடுகள் ஆபத்தான நிலையில் காணப்படுதல் காரணமாக, இப்பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர். முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள உயிலங்குளம் கிராமத்தில்,... Read more »

ராணுவ பாதுகாப்புடன் பயணிக்கும் யாழ். மக்கள்!

ராணுவ கட்டுப்பாட்டில் காணப்படும் யாழ். பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் போக்குவரத்து செய்ய மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்துகளில் ராணுவத்தின் பாதுகாப்புடனேயே மக்கள் தமது பிரயாணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த... Read more »

கிளிநொச்சி பொதுச்சந்தை துர்நாற்றம் : பொதுமக்கள் விசனம்

கிளிநொச்சி பொதுச்சந்தை நீண்ட காலமாக துர்நாற்றம் வீசி வருவதாகவும், இதனால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த பொது சந்தையில் அமைந்துள்ள மலசலகூடம், அதை அண்மித்த பகுதிகள் இவ்வாறு துர்நாற்றத்துடன் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் புதிதாக மலசல கூடம்... Read more »

நிவாரணம் பெறுவதற்கு சிரமதானம் செய்யுமாறு பணிப்பு!

கிளிநொச்சியின் சில பிரதேசங்களில் அரசினால் வழங்கப்படும் வறட்சி நிவாரணத்தினைப் பெறுவதற்கு சிரமதானம் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமது அன்றாடக் கடமைகளை விடுத்து மேற்படி சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதிலும் வறட்சிக்கான... Read more »

அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஊழியர்கள்

நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள், தாங்கள் வழங்கும் கடன்களை அறவிடும் போது, மக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாக. பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். அண்மையில் ஊற்றுப்புலம் கிராமத்துக்குச் சென்ற கிளிநொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் கடன் அறவிடும் ஊழியர் ஒருவர்,... Read more »

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர்களை நியமிக்கக் கோரிக்கை!

நெடுந்தீவு வைத்தியசாலையினுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து தருவதோடு, அங்கு நிரந்தர வைத்தியர்கள், மற்றும் தாதியர்களை நியமிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் குடாநாட்டில் தீவுகளில் ஒன்றாகக் காணப்படும் நெடுந்தீவு வைத்தியசாலையில் அடிக்கடி வைத்தியர் இன்றிக்காணப்படுவதால் இந்தப்பிரதேசத்தில்உள்ள சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்... Read more »

கரைச்சி பிரதேச சபையின் அசமந்தப் போக்கு

கிளிநொச்சியில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படும் பகுதிகளை சுத்தம் செய்வதற்கு, கரைச்சி பிரதேச சபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியிலிருந்து, இரணைமடு சந்தி வரையான ஏ9 வீதியில், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய நிலையில் குப்பைக்கூலங்கள் ஆங்காங்கே... Read more »

யாழில் அகற்றப்படும் கடைகள்!

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 09 கடைகள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நேற்று (புதன்கிழமை) அகற்றப்பட்டுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக மின்சார நிலைய வீதியில் அமைந்திருந்த கடைத் தொகுதியே நேற்றய தினம் யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்ற பதிவாளரின்... Read more »

கிளிநொச்சியில் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் கடற்கரை இறங்குதுறைகள் புனரமைக்கப்படாததன் காரணமாக கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் தமது படகுகளை கரைக்குக் கொண்டு வருவதில் தொடர்ச்சியாக கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் இந்த பிரச்சினை தொடர்வதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் தொழில் மேற்கொள்வதில் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இது தொடர்பாக பூநகரிப்... Read more »

இராணுவத்தினரின் செயற்பாட்டினால் அச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்

கிளிநொச்சியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களுக்கு அருகில் குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி, உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்பு காணிகளிலேயே குறித்த செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த... Read more »

வவுனியாவில் பொருத்து வீட்டால் பதற்றம்

வவுனியாவில் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்சி சார்ந்த ரீதியில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக நேற்று மாலை 4 மணியளவில் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் ஒன்றிணைந்த அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர். வவுனியா பாரதிபுரம் பகுதியில் பொருத்து வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 20... Read more »

கல்வியங்காடு பொதுச் சந்தைக்கு முதலமைச்சர் திடீர் விஜயம்!

கல்வியங்காடு பொதுச் சந்தையில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு வர்த்தகர்கள் கொடுத்த முறைப்பாடுகளையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் அங்கு வருகை தந்து நிலவும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். முதலமைச்சருடன் மாநகர சபை அதிகாரிகளும் வருகை தந்தனர். 2015... Read more »

யானைகளின் தொல்லை அதிகம் மக்கள் அவதி

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தட்டார்மலை, பெரிய சாளம்பன், முத்தையன்கட்டு ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக யானைகளின் தொல்லையினை கிராமங்களின் மக்கள் எதிர்கொண்டுள்ளனா் கடந்த மூன்றாண்டுகளாக குறித்த பகுதிகளில் யானைகளின் தொல்லையினைக் கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலி அமைப்பதென முடிவு எடுக்கப்பட்ட போதிலும் 2019ம் ஆண்டில்தான் மின்சார வேலி அமைக்கப்படும்... Read more »

முல்லைத்தீவு கிராமங்களுக்கான உள்ளுர் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பல கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதிப் போர் நடைபெற்ற மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் குமுழமுனை, முத்தையன்கட்டு, மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பகுதிகளின் பல கிராமங்கள் பேருந்து சேவைகள் நடைபெறாததன்... Read more »

நடேஸ்வர கல்லூரிக்கு அருகில் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவை!

காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரி வீதியில் உள்ள தொடருந்துக் கடவையில் எந்தவிதமான முன்னெச்சரிக்கை சமிச்ஞைகளும் இயங்காதுள்ளன. முன்னெச்சரிக்கை ஒலி, சமிச்கை விளக்குகள் என்பன இயங்காதுள்ளதால் நடேஸ்வர கல்லூரி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. இந்தப்... Read more »

ஆனையிறவில் சிதறிக்கிடக்கும் மோட்டார் செல்கள்

கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி ஆனையிறவு கடல் நீரேரி வற்றியுள்ள நிலையில், குறித்த பகுதியில் பெருமளவிலான மோட்டார் செல்கள் பரவலாக காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் ஆங்காங்கே வெடிபொருட்கள் காணப்படுகின்றமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தும் அவை அகற்றப்படவில்லையென மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது... Read more »

நெடுந்தீவில் உயிரிழக்கும் குதிரைகள்! பிரதேச சபைமீது மக்கள் விசனம்!!

யாழ்.நெடுந்தீவு பகுதியில் வறட்சி காரணமாகவும் உரிய பராமரிப்பு இன்றியும் குதிரைகள் உயிரிழந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நீடிக்கும் வறட்சி காரணமாக, குடிப்பதற்கு நீர் இன்றி இதுவரை சுமார் 10 குதிரைகள் உயிரிழந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குதிரைகளின் உயிரிழப்பு தொடர்பில் நெடுந்தீவு... Read more »