யாழ் மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் தமிழ்க் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது

யாழ் மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி மற்றும் நகரசபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று மாலை 2.15 மணிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன்... Read more »

’உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பகிஸ்கரிப்போம்’ : காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள்

“காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய நாம், வருகின்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலைப் பகிஸ்கரிக்கப் போகின்றோம்” என காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (08) 292ஆவது நாளாக கிளிநொச்சியில்தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும்... Read more »

தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்கம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமஉரிமை இயக்கம் மற்றும் பொது அமைப்புக்களிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை முன்னுரை தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி காண்பதையும் இலக்காகக்... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்தில் போட்டி

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்து தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகின்ற நிலையில் தமிழ்தேசிய மக்கள்... Read more »

உதயசூரியன் சின்னத்தில் புதிய அணி

தமிழர் விடுதலைக்கூட்டணியின் சின்னமான உதயசூரியனின் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றள்ளன. இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மன்னார் சிவில் அமைப்புகளின் தலைவர் சிவகரன், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.... Read more »

கூட்டமைப்பின் புதிய தலைமுறை தேர்தலை எதிர்கொள்ளும்: மாவை சேனாதிராஜா

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வினைத்திறன்மிக்க இளைஞர்களை களமிறக்கவுள்ளதாகவும் பலமான அணியாக களமிறங்கும் எனவும் தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது மற்றும் ஆளணிகள் தொடர்பாக தமிழரசுக்கட்சி மற்றும் ரெலோ, புளொட்... Read more »

கதிரைப் பங்கீட்டில் தமிழரசுக்குள் குடுமிச் சண்டை !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கேட்பது போன்று பங்கிட்டால் தமிழரசுக்கட்சிக்கு ஏதும் எஞ்சப்போவதில்லையென தமிழரசின் இரண்டாம் கட்ட தலைமைகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 3 சபைகளையும் ஏனைய மாவட்டங்களில் தலா ஒரு சபையினையும் கோரவுள்ளதாக தமிழீழ... Read more »

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வீணையில் களம் இறங்க முடிவு!!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக யாழ். மாவட்ட இணை செயலாளர்களான சிவகுரு பாலகிருஷ்ணன், மற்றும் ஜயாத்துரை ஸ்ரீ ரங்கேஷ்வரன் ஆகியோர் கூறி
யுள்ளனர். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) காலை யாழ். ஊடக அமையத்தில்... Read more »

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டி?

ஜனவரியில் நடை பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் வட கிழக்கில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட முடிவுசெய்திருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் விரும்பினால் தமிழரசுக் கட்சியால் ஒதுக்கித்தரப்படும் இடங்களில் போட்டியிட முடியும் என்றும் அன்றில் தமிழ் தேசிய... Read more »

டிசம்பரில் வேட்புமனு!! ஜனவரி இறுதிவாரம் தேர்தல் !

புதிய தேர்தல் முறையின் கீழ் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பில் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று (01) கைச்சாத்திட்டார். இந்நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், 2018 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதிக்கும் 31 ஆம்... Read more »

பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியில் கூட்டமைப்பு!

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், குழுக்கள் 25 வீதம் பெண் வேட்பாளர்களை உள்ளடக்க வேண்டும் என்ற புதிய... Read more »

கருணா தலைமையில் கிழக்கில் களமிறங்குகிறது மஹிந்த அணி!

எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வடக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மஹிந்த அணி, அடுத்ததாக கிழக்கில் கருணா அம்மான் தலைமையில் களமிறங்கவுள்ளது. மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளரான பஷில் ராஜபக்ஷ தலைமையில், கடந்த மூன்று நாட்களாக வடக்கில்... Read more »

தமிழரசுக்கட்சி தனித்துப் போட்டியிடாது! -சம்பந்தன்

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றிரவு தமிழ் ஊடகவியலாளர்களை அழைத்து சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கலந்துரையாடடின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்... Read more »

அரச ஊழியர்களின் உரிமையை பறிக்க முடியாது! : சம்பந்தன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்தில் அரச ஊழியர்களை பாதிக்கும் வகையிலான திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள், தேர்தலுக்கு ஒரு வருட காலத்திற்குள் அரச சேவையில் ஈடுபட்டிருக்க முடியாதென உள்ளூராட்சி மன்ற... Read more »

மக்களின் ஜனநாயக உரிமை தடை செய்யப்படுவதற்கு இடமளியோம்: சம்பந்தன்

உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாது, தமது தீர்மானத்தை அறிவிக்கும் மக்களின் ஜனநாயக உரிமை தடை செய்யப்படுவதை தாம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பில் அரசியலமைப்பு திருத்தமொன்றை மேற்கொள்வது தொடர்பில்,... Read more »

புதிய வாக்காளர் இடாப்பு பொது மக்கள் பார்வைக்கு, திருத்தம் இருப்பின் அறிவிக்கவும்

புதிய வாக்காளர் இடாப்பு பிரதேச செயலகங்களிலும், கிராம உத்தியோகத்தர் அலுவலங்களிலும், மாகாண சபை அலுவலகங்களிலும் நாளை (10) முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்காளர் இடாப்புக்களில் பொருத்தமற்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தாலோ அல்லது பெயர்ப் பட்டியலில் தமது பெயர் இடம்பெறாதிருந்தாலோ அது தொடர்பான எதிர்ப்புக்களை... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் தேர்தல்கள்... Read more »

புதிய முறையில் உள்ளூராட்சி தேர்தல்: அரசாங்கம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன ஒருமனதாக தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் இந்த... Read more »

புலம்பெயர் இலங்கையர்களுக்கு தேர்தல் திணைக்களம் முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளில் இலங்கைக் குடியுரிமையுடன் வசிப்பவர்களது பெயர்களை வாக்காளர் பெயர்ப்பட்டியலில் இங்குள்ள அவர்களது உறவினர்கள் இணைத்துக்கொள்ள முடியும்என தேர்தல்கள் திணைக்களத்தின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நடப்பு ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று... Read more »

2017 ஆம் வருடத்திற்குரிய வாக்காளர் இடாப்புத் திருத்தம் ஆரம்பம்!

2017 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்புத் திருத்தம் ஆரம்பிக்கப்படுகின்றது. அதற்கமைய, வாக்காளர் திருத்தத்திற்கான படிவங்களை நேற்றுமுதல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் குறித்த படிவங்கள் கிராம சேவை உத்தியோகஸ்தர்களூடாக மீள சேகரிக்கப்படும்... Read more »