Ad Widget

டிசம்பரில் மாகாண சபைகளுக்கான தேர்தல்: தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி அறிவிப்பு!

ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருட நிறைவில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “சப்ரகமுவ, வட மத்திய, கிழக்கு ஆகிய மாகாண சபைகள் தற்பொழுது கலைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும்...

தொகுதிவாரி தேர்தல் முறை தவறானது – சுமந்திரன்

தொகுதிவாரி தேர்தல் முறை மிகவும் மோசமானது என்பதற்கு வவுனியா நகரசபையின் ஆட்சியதிகாரம் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி வசமானமை மிகச் சிறந்த உதாரணம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இந்த தேர்தல் முறையின் கீழ் நகரசபையில் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றிய கட்சி ஆட்சி அமைக்கமுடியாத...
Ad Widget

தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளின் ஒருங்கிணைவு தமிழ்த் தேசத்திற்கு ஆபத்தானது

நேற்றயதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுப்பிவைக்கப்பட் செய்தியறிக்கை... தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டுவருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து தமிழினத்திற்கு துரோகமிழைத்து வருகின்றது என்பதை நாம் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். அந்த வகையில் இன்றைய தினமும் இவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்து காண்பிப்பதற்காக தந்திரோபாய நடவடிக்கையாக யாழ் மாநகரசபை மற்றும் சாவகச்சேரி...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை புதன்கிழமை (21.03.2018) மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.

மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் உறுதியுடன் உழையுங்கள் : டக்ளஸ் தேவானந்தா

நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றங்களில் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வடக்கு கிழக்கு மாகாணங்களில் 38 சபைகளில் போட்டியிட்டு 98 ஆசனங்களை பெற்று எமது அரசியல் பலத்தை இதர தமிழ் அரசியல் தரப்பினருக்கும் தென்னிலங்கைக்கும் மக்கள் எம்மீது வைத்துள்ள உறுதிப்பாட்டின் வலிமையை வெளிப்படுத்திக் காட்டியுள்து என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம்!

நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (17) கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களில்...

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியானது!

உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 11 மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரம் நேற்று இரவு இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக தலைவர் லியனகே தெரிவித்துள்ளார். ஏனைய மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரம் இன்றைய தினத்திற்குள் வெளியிடப்படவுள்ளது.

புதிய உள்ளூராட்சி மன்ற சபைகளை நிறுவும் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து அதற்கான உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டங்களினதும் பெண் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் கிடைக்கத் தாமதமாகிது. இந்நிலையில் தற்போது 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

பெண் பிரதிநிதிகளின் பெயர் பெயர்பட்டியலை ஒப்படைக்க கால அவகாசம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சகல கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் பெண் பிரதிநிதிகளின் பெயர் அடங்கிய தமது பெயர்பட்டியலை, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார். பெண் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதில் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனைக்...

உள்ளூராட்சி சபைகளை நிறுவும் தினம் ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி சபைகளை நிறுவும் தினம் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஏற்கனவே எதிர்வரும் 6ஆம் திகதி நிறுவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,...

ஆனல்ட்டுக்குத்தான் ஆதரவில்லை, கூட்டமைப்பிற்கு ஆதரவுண்டு- ஈ.பி.டி.பி

யாழ் மாநகரசபையின் முதல்வராக ஆனல்ட் பரிந்துரைக்கப்பட்டால், த.தே.கூட்டமைப்புடன் எந்தவித பேச்சிலும் ஈடுபடுவதில்லையென ஈ.பி.டி.பி முடிவெடுத்துள்ளது. சொலமன் சிறில் முதல்வராக அறிவிக்கப்பட்டால், த.தே.கூட்டமைப்பை ஆதரிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபை முதல்வராக ஆனல்டை நியமிக்க சுமந்திரன் பகிரங்க பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளார். கட்சிக்குள் கணிசமான விமர்சனங்கள் எழுந்துள்ளபோதும், அதைப்பற்றி கவலைப்படாமல், ஆனல்டை முதல்வராக்க முயற்சித்து கொண்டிருக்கிறார். தேர்தல் முடிவுகள் திருப்திகரமாக...

உள்ளூராட்சி மன்றங்களில் பெண் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் சிக்கல்!

உள்ளூராட்சி மன்றங்களில் ஏறக்குறைய 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் சிக்கல் நிலை நிலவுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 20 உள்ளூராட்சி மன்றங்களிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை வழங்க முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே உள்ளூராட்சி மன்றங்களில் நியமிக்கப்படவிருந்த 8356 உறுப்பினர்களின் எண்ணிக்கை...

மாகாணசபைத் தேர்தல்கள் செப்டம்பர் மாதம் நடைபெறும்?

மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்த முடியும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் எதிர்வரும் மே மாதமளவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். குருநாகலவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடவியலாளர்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, ஏதேனும் அரசியல் கட்சி...

மத்தியில் எமக்கு கூட்டமைப்பு ஆதரவளிப்பதால் யாழ் மாநகரசபையில் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம்!

யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஈபிடிபி ஆதரவளித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மத்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதால், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, யாழ்....

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானம்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பு வட மாகாணத்தில் தனித்து ஆட்சியமைக்க முடியாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஆதரவினை வழங்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளது.கடந்த தினத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் படி , வட மாகாணத்தின் சில உள்ளூராட்சி மன்றங்களை தவிர மற்றைய உள்ளூராட்சி மன்றங்களில் தனித்து ஆட்சியமைக்க எவ்வித கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை...

கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் : சிறிகாந்தா வேண்டுகோள்

வடக்கு – கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான சிறீக்காந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார் . யாழ். தனியார் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டு கருத்து...

யாழ். மாநகர சபை மேயராக மணிவண்ணன்!- சந்தர்ப்பத்தை வழங்குவாரா டக்ளஸ்?

யாழ். மாநகர சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆட்சிக்கு ஈ.பி.டி.பி. யினர் வெளியிலிருந்து ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையை ஆட்சியமைப்பதற்கு எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொள்ளாத நிலையில், ஈ.பி.டி.பி. கைப்பற்றியுள்ள 10 ஆசனங்களே ஆட்சியை தீர்மானிப்பவையாக அமைந்துள்ளன. இந்நிலையில், கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்திறன்...

தேர்தல் முடிவுகள் !

உள்ளுராட்சி சபைகள் தேர்தல் முடிவுகள் : யாழ் மாவட்டம் (நன்றி:  வாகீசம் இணையம்) கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 21 வட்டாரங்களில் 16 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், 05 வட்டாரங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரின் சுயேட்சைக் குழுவும் வெற்றிப்பெற்றுள்ளது. பச்சிலைப்பள்ளியில் எட்டு வட்டாரங்களில் 6 வட்டாரங்களில் தமிழ் தேசியக்...

வடக்கு கிழக்கில் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு

நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சிசபைத்தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளனர்.  வாக்களிப்புக்கள் அசம்பாவிதங்கள் இன்றி சுமுகமாக இடம்பெற்றது. வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு முடிவுகள் வெளியாகும். மக்களின் வாக்களிப்பு வீதம் வருமாறு யாழ்ப்பாணம்: 62% கிளிநொச்சி : 76% முல்லைத்தீவு:78% மன்னார்: 80% வவுனியா : 70% திருகோணமலை : 85%...

த.தே.கூ- ஜ.தே.க கட்சிக்கும் இடையில் முறுகல்!!!

காரைநகர் பகுதியில் வாக்களிக்கச் சென்ற மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஜக்கிய தேசிய கட்சிக்ளும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. காரை நகர் பகுதியில் இன்று வாக்களிக்கச் சென்ற மக்களிடம் ஜக்கிய தேசிய கட்சியினர் தமது தேர்தல் பிரச்சாரத்தை செய்ததுடன், தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தனர். இதன் போது அவ்வழியாக வந்த...
Loading posts...

All posts loaded

No more posts