தமிழினி அடுத்த மாதம் விடுதலை, வடமாகாண தேர்தலிலும் போட்டி?

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இராணுவத்தினரால் வழங்கப்பட்டு வரும் புனர்வாழ்வுப் பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த மாதம் விடுதலையாகவுள்ளார். இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத்... Read more »

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு

வெளிநாடுகளிலும் அகதிகளாக வசிக்கும் தமிழ் மக்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்குரிய ஒழுங்குகள் புதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கூட்டமைப்பின் கோரிக்கையை அரசு உடனடியாக நிராகரித்துள்ளது. Read more »

வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் தமிழினி விடுதலை!– தயா மாஸ்டர்

வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி விடுதலை செய்யப்படுவார் என புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். Read more »

த.தே.கூட்டமைப்பு பதிவு செய்வது தொடர்பாக கட்சிகளுக்கிடையே இன்று கலந்துரையாடல்

தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது உள்ளிட்ட பல தரப்பட்ட விடயங்கள் தொடர்பாக கட்சிகளுக்கிடையே இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளன. Read more »

யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்கள் பூர்வீக இடங்களில் வாக்களிக்க வசதி

யுத்தம் நடை பெற்ற காலப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் தமது பூர்வீக வசிப்பிடங்களில் வாக்களிப்பதற்கு வசதியாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்த வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்ட மூலம் தொடர்பான பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read more »

முன்னாள் போராளிகளின் மறு வாழ்வுக்காகவே அரசியலில் குதிக்கின்றேன்!- தயா மாஸ்டர்

முன்னாள் போராளிகளின் மறு வாழ்வுக்காகவே அரசியல் களத்தை தான் தெரிவு செய்துள்ளதாக தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார் Read more »

தயா மாஸ்டரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தக்கூடாது!:- சரத் பொன்சேகா

புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்ரரை வடக்குத் தேர்தலில் அரசு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Read more »

வடக்கு தேர்தல் பிரசாரம் வந்த வேகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோடு மோதுகிறார் கே.பி

வடக்கு தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பிரநிதிகளுக்கிடையில் பல்வேறு போட்டி நிலைப்பாடுகள் உள்ள நிலையில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனும் யாழ்ப்பாணத்தில் தனது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார். Read more »

செப்ரெம்பர் 7ல் வடக்கு தேர்தல்?

வடமாகாணத் தேர்தலை செப்ரெம்பர் ஏழாம் திகதி நடத்த அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. Read more »

வட மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு வெற்றியீட்டும்!- புலனாய்வுப் பிரிவு

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டும் என புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more »

கூட்டமைப்பு சுயேட்சையாக களமிறங்கினால் ஆதரவு:-கஜேந்திரகுமார்

வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு போட்டியிடாமல் சுயேட்சைக்குழுவாக களமிறங்கினால் அந்த சுயேட்சைக்குழுவுக்கு நாம் ஆதரவளிக்கத்தயார் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். Read more »

வடமாகாண தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும் – பொன்சேகா!

வடமாகாண சபைத்தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். Read more »

வடமாகாண சபைத் தேர்தலில் சரியான தலைவரை தேர்ந்தெடுங்கள்!- டக்ளஸ் தேவானந்தா

நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய சரியான பிரதிநிதிகளையும் தலைவரையும் தெரிவு செய்யுமாறு Read more »

வட மாகாணசபைத் தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியம்!- சுமந்திரன்

வட மாகாணசபைத் தேர்தல்களின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more »

வடக்குத் தேர்தலில் ஈ.பி.டி.பி. அரசுடன் இணைந்தே போட்டியிடும் : பஷில்

எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் (ஈ.பி.டி.பி.) இணைந்து போட்டியிட்டாலும் ஐ.ம.சு. மு.வின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் குழு தனித்துவமானதாக இருக்கும் Read more »

த.தே.கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஐ.தே.கவில் இணைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை தலைவர் விஜயரட்ணம் எட்வின் டானியல் ஐ.தேக. உறுப்பினராக நியமனம் பெற்றுக் கொண்டார்.யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று(26) மாலை 5.30 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் யாழ்ப்பாணத்தில் !

வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில்... Read more »

முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்புக்கு அமைச்சர் டளஸ் பகிரங்க அழைப்பு

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும், கிழக்கை மேலும் அபிவிருத்தி செய்யவும் எம்முடன் ஒன்றுபடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்: சந்திரகாந்தன்

என்னை வீழ்த்த நினைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் என முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,நடைபெற்று முடிந்த... Read more »

கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க மும்முரம்!

கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நிலை தோன்றியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி 11 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேலதிக ஆசனங்கள் இரண்டு உட்பட 14 ஆசனங்கனை... Read more »