கொழும்பு வாழ் மக்களுக்கு சின்னத்தெரிவு சேவலாக தான் இருக்க முடியும் : டர்சன்

கடந்த காலங்களில் இனவாதம் பேசி மக்களை உசுப்பேத்தி வாக்குப்பெற்று மாநகரசபை உறுப்பினரானவர்கள் இதுவரை என்ன செய்தார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர். கடந்த காலங்களில் வெறுமனே ஆசனத்தையும் தமது சட்டைப்பையையும் நிரப்பியவர்கள் மீண்டும் என்ன முகத்தோடு மக்கள் முன் வாக்கு கேட்டு வருகின்றார்கள். கடந்த... Read more »

தமிழ்த் தேசியப் பேரவைக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு வலி வடக்குபிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் வலிவடக்கு பிரதேச உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளருமான சுகிர்தன் ஊடாக தமிழரசுக் கட்சி தாக்கல் செய்திருந்தது.... Read more »

2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறும் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : சுமந்திரன்

2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், சட்ட நடவடிக்கை தொடர்பான அறிவித்தலை சட்டத்தரணிகள் அறிவிப்பார்கள் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன்... Read more »

வடக்கு- கிழக்கில் வன்முறைகளை கண்காணிக்க பொலிஸார் குவிப்பு!

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சமீபகாலங்களில் அதிகரித்து வரும் தேர்தல் வன்முறைகள் காரணமாக இவ்வாறு பொலிஸாரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. மேலும் நடைபெற இருக்கின்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மற்றும்... Read more »

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட மக்கள் சந்திப்பு!

நிரந்தரத் தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் வகிபாகம்’ என்ற தலைப்பிலான மக்கள் சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களை இலக்காகக் கொண்டு இச்சந்திப்பு நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் வண்ணார்பண்ணை... Read more »

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு நாளை யாழில்!

உள்ளுாராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பொன்று, நாளை (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. ‘நிரந்தரத் தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் வகிபாகம்’ என்ற தொனிப்பொருளிலான குறித்த சந்திப்பு, யாழ். இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் காலை... Read more »

யாழில் தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட இடங்களில் விழிப்புணர்வு சுவரொட்டிகள்!

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட பின்னர் அவ்விடத்தில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றுக்கான அலுவலகர்களின் அமைப்பினானாலேயே குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. குறித்த இடங்களில் ‘சட்டமுரணான அறிவித்தல்’, ‘தேர்தல் சட்டங்களை பாதுகாப்போம்! சட்டமீறலை எதிர்ப்போம்! போன்ற சுவரொட்டிகள்... Read more »

வடக்கின் அடுத்த முதலமைச்சரும் விக்னேஸ்வரன்தான் :ஐங்கரநேசன்

வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களே இலங்கை அரசியலில் இன்று அதிகம் பேசப்படும் தமிழ் அரசியல் தலைவராக உள்ளார். ஒரு புறம் அவரது அரசியல் எதிராளிகள் அவரை அரசியல் அனுபவம் இல்லாதவர் என்றும், நிர்வாகம் தெரியாதவர் என்றும், அபிவிருத்திக்கு எதிரானவர் என்றும், வடக்கு மாகாணத்துக்கு... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றவர்களுக்கு நடந்த சோதனை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரசார கூட்டத்துக்கு வருகைதந்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் பொலிஸார் தீவிர பரிசோதனையின் பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதித்த செயற்பாடு பலர் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும்... Read more »

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கையை நிராகரித்து பணிப்புறக்கணிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் மற்றும் ரயில்வே இயந்திர பொறியியலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிமுதல் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதோடு, காலை 9 மணிமுதல் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை... Read more »

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு 2கோடி!! முன்னாள் போராளிகளோ ஒரு சைக்கிள்கூட இல்லாத நிலையில்!!

இனத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் இன்று புனர்வாழ்வளிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா ஆதங்கம் வெளியிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், முன்னாள் போராளிகளோ... Read more »

இலங்கை அரசாங்கத்துடன் பேசிப்பலனில்லை என்பதில் தலைவர் பிரபாகரன் உறுதியாக இருந்தார்!

இலங்கை அரசாங்கத்துடன் பேசிப்பலனில்லை, அடித்துத்தான் பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டில் எம்மை வலுப்படுத்திக் கொள்வதற்கான இடைக்கால ஏற்பாடாகவே தலைவர் பிரபாகரன் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை வழிநடத்தியிருந்தார் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல்... Read more »

கூட்டமைப்பின் மீது பழிபோடுபவர்கள் இனத்தின் விடுதலைக்கு பொருத்தமற்றவர்கள்: மாவை

அரசாங்கத்திடமிருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பழிபோடுபவர்கள், தமிழினத்தின் விடுதலைக்கோ தேசத்தை கட்டியெழுப்புவதற்கோ பொருத்தமற்றவர்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக... Read more »

வாக்குச்சீட்டுகளில் VIP என்று எழுதி வாக்குகளை செல்லுபடியற்றதாக்குவோம் : வேலையற்ற பட்டதாரிகள்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் வாக்குரிமையினை போராட்ட ஆயுதமாக பயன்படுத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

வேட்பாளர்கள் மீது தாக்குதல்: பொலிஸில் முறைப்பாடு!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கட்சியில் சாவகச்சேரி பிரதேச சபையின் 16 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் குமாரவேல் மற்றும்... Read more »

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் : சுகாஸ்

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் என சட்டத்தரணி சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று (26.01.2018) கரவெட்டியில் நடைபெற்றது. அங்கு... Read more »

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான அணியை உருவாக்க அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும் : அங்கஜன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் கைகோர்க்க முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு... Read more »

முல்லைத்தீவில் வாக்கு அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டமை தொடர்பாக இருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த வாக்காளர் அட்டைகள் புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டிலே இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டே கைப்பற்றப்பட்டன. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு... Read more »

கூட்டமைப்பின் வேட்பாளர் உதயசிறி உள்ளிட்ட அறுவர் கைது!!!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயசிறியை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே உதயசிறி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “யாழ்ப்பாணம்... Read more »

போலி வாக்குச் சீட்டுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் கைது!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற பெண்வேட்பாளர் ஒருவர் சட்டவிரோத போலி வாக்குச் சீட்டுடன் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கரைச்சி பிரதேச சபைக்கு பரந்தன் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான... Read more »