இளைஞர் பாராளுமன்ற தேர்தல் 18ம் திகதி

நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 18ம் திகதி இடம்பெற உள்ளது. காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நாடு பூராகவும் 661 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவிக்கின்றது. தேர்தலுக்காக 916 இளைஞர்... Read more »

எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளுராட்சி தேர்தல்

எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும் என மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை அடுத்த 27 ஆம் திகதி கிடைத்ததும் 28 ஆம் திகதி அதனை வர்த்தமானியில் வெளியிட உத்தேசித்துள்ளதாகவும்... Read more »

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு?

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவது பற்றி பாராளுமன்றக்குழு ஆராயவுள்ளது. இதற்கென விசேட பாராளுமன்ற குழுஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழு இந்த விடயத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார். Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரலில்?

எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் இந்த ஆண்டில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு... Read more »

பெண்கள் அரசியலுக்கு அதிகமாக வாருங்கள் : யாழ்.மாவட்டச் செயலர்

யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதார முறையில் அரசியலிலும் பெண்களின் பங்களிப்பானது அதிகரிக்கப்படவேண்டும் என யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பாக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்.மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை... Read more »

18 வயது நிரம்பினாலும் வாக்குரிமை பெற தாமதமாகும் இலங்கை இளைஞர் யுவதிகள்

இலங்கையில் 18 வயது நிரம்பியதும் வாக்காளராகத் தகுதி பெறுகின்ற உரிமை அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், வருடத்திற்கு ஒருமுறை ஜுன் மாதம் முதல் திகதி மட்டும் வாக்காளராகப் பதிவு செய்யும் நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் வயதுக்கு வந்தும்கூட வாக்காளராகப் பதிவு செய்ய... Read more »

விரைவில் உள்ளூராட்சித் தேர்தல்கள்! முதற்கட்டமாக வடக்கு கிழக்கில்!!

உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை பகுதிபகுதியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பகமாகத் தெரியவருகிறது. அதன்படி எல்லை நிர்ணயப் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு அரசு பச்சைக்கொடி காட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் எல்லை நிர்ணயம் முடிவுற்றிருக்கும் வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல்களை விரைவில்... Read more »

வாடகை வீடுகளில் இருப்பவர்களும் வாக்காளர் இடாப்பில் பதிய முடியும்- தேர்தல் ஆணையாளர்

வாடகை விடுகளில் இருப்பவர்களும் வாக்காளர் இடாப்பில் பதிய முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பின் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் வீடுகளில் தங்கியிருப்பவர்களும் குறித்த... Read more »

உள்ளூராட்சி தேர்தலில் தனித்தே போட்டி- மஹிந்த அணி சற்றுமுன் திட்டவட்டமாக அறிவிப்பு

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி தனித்து போட்டியிட போவதாகவும் எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய போவதில்லை எனவும் கூட்டு எதிரணி சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது. கொழும்பில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கூட்டு... Read more »

வாக்காளர்களாக பதிவு செய்யுமாறு முதலமைச்சர் வேண்டுகோள்!

அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அதிகம் விரும்புகின்றனர். இதனால் வடக்கில் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைவடைகிறது. வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருந்தால் இந்த எண்ணிக்கை மேலும்... Read more »

ஆண்டின் இறுதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்!

இந்த ஆண்டின் இறுதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், எல்லை நிர்ணய சபையின்... Read more »

மீண்டும் வெற்றிலைச் சின்னத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது ஈபிடிபி!

அடுத்து வரப்போகும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஈபிடிபி கட்சி இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. தற்போதைய சிறீலங்காவின் அதிபரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவருமான மைத்திரிபாலசிறிசேனவின் ஆலோசனைக்கமைய, கட்சியின் பொதுச் செயலர் மகிந்த அமரவீர நட்புக் கட்சிகளுடன்... Read more »

அரசியல் காரணங்களுக்காக உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போடவில்லை – பிரதமர்

உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போடப்படுவது அரசியல் தேவையின் காரணங்களுக்காக அல்ல என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். நேற்று பாராளுமன்றில் தினேஷ் குணவர்தன உள்ளூராட்சிமன்ற தேர்தல் சம்பந்தமாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு உண்மையான தேவை இருப்பது... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜூன் மாதத்தில்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கலப்பு தேர்தல் முறை மூலம் எதிர்வரும் ஜூன் மாத முதல் வாரமளவில் இடம்பெறும் என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச்சில் நடத்தப்படமாட்டாது!

எல்லை நிர்ணயம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்தில் தொகுதிவாரி முறையில் நடத்துவதில் சிக்கல் உள்ளமையால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தது. அதேவேளை, எல்லை நிர்ணயங்கள் தொடர்பில் 700 இற்கு மேற்பட்ட... Read more »

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் இன்று

மூன்றாவது இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நாடு முழுவதும் சுமூகமாக இடம்பெற்று வருகின்றது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 160 தொகுதிகளில் 334 பிரதேச செயலகங்களில் வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றது. இதில் சுமார் 5 இலட்சம் இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.காலையில் ஆரம்பமாகி... Read more »

வாக்காளர் இடாப்பு இறுதிச் சந்தர்ப்பம்

2015-ம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கான பெயர்களை உள்வாங்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு பெயர் உள்வாங்கப்படாத, வாக்களிக்க தகுதியானவர்கள் இருப்பார்களாயின் அவர்கள் தமது உரிமை கோரிக்கை கடிதத்தை தேர்தல்கள் செயலகத்திற்கு எதிர்வரும்... Read more »

வரும் 7 திகதி இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்

தேசிய இளைஞர் சேவை சபை, இலங்கை இளைஞர் சமூக சம்மேளனம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு என்பன இணைந்து ஏற்படுத்தப்பட்டுள்ள இளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 3.00... Read more »

வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்பு கிட்டுமா?

வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு தேர்தல்களின் போது வாக்களிக்க வசதியேற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் சபாநாயகரிடம் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 22 பாரளுமன்ற உறுப்பினர்கள் குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். Read more »

வட கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்தவர்களும், புலம் பெயர்ந்தவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வேண்டும்! -டக்ளஸ்

வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து நாட்டின் ஏனைய பகுதிகளிலும், புலம் பெயர்ந்து உலகின் பல நாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்களும் வாக்களிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அன்மையில்... Read more »