தெற்கில் பாரிய சப்தம்: எரிகல்லாக இருக்கலாம்?

தெற்குப் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய சப்தம் மற்றும் வெளிச்சம் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நேற்றிரவு 8.45 மணிக்கும் 9.15 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்ட, களுத்தறை, கொழும்பு பிரதேசத்துக்கும் இந்த சப்தம்... Read more »

நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாமல் குடும்பப் பெண் தற்கொலை!

நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன்களை மீளச் செலுத்த முடியாமல் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். திங்கட்கிழமை 16.10.2017 இடம்பெற்ற இச்சம்பவத்தில் வினாசியர் வீதி, சந்திவெளியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 26 வயதுடைய செல்வம் யோகேஸ்வரி... Read more »

விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை!: பொன்சேகா

சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு அரசியல் கைதிகளாக கருதமுடியும் என கேள்வி எழுப்பும் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார். தமிழ் அரசியல்... Read more »

அரசியல் கைதிகள் அல்ல அவர்கள் முன்னாள் போராளிகள்! அவர்களை விடுதலை செய்ய முடியாது : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் போராளிகள் எக்காரணத்தைக் கொண்டும் விடுதலைச் செய்யப்படமாட்டார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பியகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் கலந்து கொண்ட போது, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் வடக்கில்... Read more »

ரயில் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

ரயில் சாரதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஆரம்பித்துள்ள திடீர் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்றும் (12) தொடரும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை ரயில் சாரதிகள் போதியளவு வருகை தராவிடின் ரயில் சேவையை நடாத்த முடியாமல் போகும் என ரயில்வே கட்டுப்பாட்டுப்... Read more »

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்: நாமலுக்கு விளக்கமறியல்

நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரும், எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் கைதுசெய்யப்பட்ட இவர்கள், அம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவ் உத்தரவு... Read more »

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கைகள் நிறுத்தம்!

இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைத்துள்ளமையை அடுத்தே மேற்படி நடவடிக்கைகைள் கைவிடப்படுவதாக அச்சங்கம் அறிவித்துள்ளது. வைத்திய அதிகாரிகளின் நியமனம் தொடர்பில் இடம்பெற்றுள்ள... Read more »

மீட்கப்பட்ட துப்பாகி ஜனாதிபதி மைத்திரியை இலக்கு வைத்ததா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (திங்கட்கிழமை) கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை அதுமல்பிடிய வித்தியாலத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த துப்பாக்கியைக் கண்ட ஒருவர்... Read more »

சயனைட் இன்றி அஞ்சா நெஞ்சோடு போராடிய தலைவர் பிரபாகரன்!

எதிரிகளின் கையில் சிக்கும் நிலை வந்தால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சயனைட் குப்பிகளை விடுதலைப் புலி உறுப்பினர்கள் வைத்திருந்த போதும், அதன் தலைவர் பிரபாகரனிடம் சயனைட் குப்பி காணப்படவில்லையென முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர்... Read more »

தனியார் பேருந்துக் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும்?

பேருந்துக் கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்க நேரிடும் என்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் பேருந்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். பேருந்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்துச் சபை அனுமதி... Read more »

எதிர்வரும் நாட்களில் மழை தொடரும்

நாட்டின் பல பகுதிகளிலும், எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் இடையே இடையே மழை பெய்யுமெனவும் மேற்கு, வடமேற்கு மத்திய மாகாணம் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பல மழை பெய்யும்... Read more »

பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமே இந்து மதம் : அமைச்சர் விஜித் விஜயமுனி

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முதலிடம் கொடுத்து பௌத்த மதத்தை காப்போம் அதுபோன்று ஏனைய மதங்களுக்கும் பாதுகாப்பும் மதங்களை போதிப்பதற்கான உத்தரவாதமும் வழங்கப்படும் என்று நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி செய்சா தெரிவித்தார். மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின்... Read more »

யாழ்ப்பாணத்தில் பலம் பெறவுள்ளோம்!! பஷில் ராஜபக்ச

எம்மிடம் உள்ள மக்கள் பலத்தினை நிரூபிக்க நாம் யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளோம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் பஷில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இந்த அரசாங்கம்... Read more »

கொழும்பில் மணல் மழை!

கொழும்பில் காலிமுகத் திடலிலும், கோட்டை உலக வர்த்தக மையம் பகுதியிலும் மணலுடன் கூடிய மழை பெய்ததாகத் தெரியவருகிறது. மழை நீருடன் மணலும் கலந்திருந்ததால், மழையில் நனைந்தவர்கள் அசௌகரியங்களுக்கு உட்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, அப்பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மணல் படிந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more »

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!! நோயாளர்கள் சிகிச்சை பெறமுடியாத நிலை!!

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிமுதல் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம், நாளை காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.... Read more »

டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி!

நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று (புதன்கிழமை) சந்தித்துள்ளார். இது குறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சில கருத்துக்களையும் ஜனாதிபதி... Read more »

20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்!

மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 37 வாக்குகளும் அளிக்கப்பட்டதன் மூலம் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.... Read more »

மின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் கடந்த 8 நாட்களாக முன்னெடுத்து வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று ( புதன்கிழமை) இரவு நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை கூட்டுத் தொழிற்சங்க அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கை மின்சார சபை... Read more »

வைத்தியர்கள் சங்கம் நாளை 8 மணி முதல் வேலைநிறுத்தத்தில்!

மாலபே SAITM தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக நாளை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் நடாத்தும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் (GMOA) ஆதரவு வழங்கியுள்ளது. அதன்படி, நாளை காலை 08 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தை... Read more »

தமிழரசுக்கட்சி தனித்துப் போட்டியிடாது! -சம்பந்தன்

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றிரவு தமிழ் ஊடகவியலாளர்களை அழைத்து சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கலந்துரையாடடின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்... Read more »