மருத்துவக் கல்விக்கான ஆகக்குறைந்த கல்வித்தகைமை

மருத்துவபீட கற்கை நெறியை தொடர்வதற்கு ஆகக்குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் ,பௌதீகவியல் ஆகிய பாடங்களில் ஆகக்குறைந்தது இரண்டு திறமை சித்தியும் சாதாரண சித்தியொன்றும் ஒரே முறையில் பெற்றிருக்கவேண்டும் என்று... Read more »

புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர்

புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர். அமைச்சரவை குழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. புகையிரத பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் நான்கு அமைச்சர்களைக் கொண்ட... Read more »

இலங்கையின் வான் பரப்பில் மாற்றம்!

இலங்கையின் வான்பரப்பில் தற்காலத்தில் எரிகல் வீழ்ச்சி இடம்பெறுகிறது. இதன் உச்சக்கட்டம் இன்று(13) இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை வரையில் தொடரும். 14ம் திகதி அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரையிலான காலப்பகுதியே இதனை சிறப்பாக பார்க்க உசிதமான காலம்... Read more »

ஜனாதிபதி மைத்திரி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் இயந்திர சாரதிகளை உடன் பணிக்கு திரும்புமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நிலையை கருத்திற்கொண்டு, இவர்களை சேவைக்கு திரும்புமாறு ஜனாதிபதி கோரயுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மாலை ஜனாதிபதி விடுத்துள்ள... Read more »

சருமத்தை அழகு படுத்த பயன்படுத்தும் பொருட்கள் குறித்து நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை!

சருமத்தை அழகுப்படுத்த பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருளுக்கு சந்தையில் பெரும் கிராக்கி உண்டு.இதனை பயன்படுத்துவதன் மூலம் மேனி அழகாக காட்சியளிக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கை. இதுதொடர்பில் சந்தையிலுள்ள பொருட்கள்குறித்து நுகர்வோர் அதிகார சபை பாவனையாளர்களின் கவனத்திற்கு பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு ஆரோக்கியத்திற்கு பாதிப்பு... Read more »

இடிமின்னலிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

நாட்டிலிருந்து 1100 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு திசை வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடமாகாணங்களிலும் , வடக்கு கிழக்கு கடற்கரையோர பிரதேசங்களிலும் இன்று முதல் காற்றின்... Read more »

ஓக்கி சூறாவளி 850 கிலோ மீற்றர் தொலைவில்

ஓக்கி சூறாவளி கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 850 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அரபுக் கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த சூறாவளி தொடர்ந்தும் நகர்ந்து செல்வதினால் இலங்கை;கு ஏற்படும் தாக்கம் குறைவடையும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் இன்று காலை அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு,... Read more »

பியர் விடயத்தில் பின்வாங்கமாட்டேன்: மங்கள உறுதி!

வரவு – செலவுத் திட்டத்தில் பியர் விலையைக் குறைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது என, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மதுபானங்களில் உள்ள மதுசாரத்தின் அளவுக்கு அமைய வரி விதிப்பது என்பது சர்வதேசத்தால் பின்பற்றப்படும் முறை என்றும், அதன் ஊடாக அரச... Read more »

காலியின் சில பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில்!!!

காலியின் சிலபகுதிகளில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக நேற்று இரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக கருவாதோட்டம், மாஹப்புகல, வெலிபிட்டிமோதர, உக்வத்த, ஜின்தோட்ட மற்றும் பியன்திகம கிராமசேவையாளர் பிரிவுகளில் இந்த ஊடரங்கு சட்டம்... Read more »

புதிய அரசியலமைப்பிற்கு மஹிந்த இடையூறாக இருக்க கூடாது: சம்பந்தன் கோரிக்கை!

இழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கான ஒரு மார்க்கமாக அரசியலமைப்பினைப் பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வரவுசெலுவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மஹிந்தவிடம்... Read more »

மஹிந்தவுடன் இணைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயார்!

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே... Read more »

ஜெனீவாவில் இலங்கை மீண்டும் வாக்குறுதி அளித்தது

ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சர்வதேச காலக்கிரம மீளாய்வு அமர்வில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் கேள்விகளுக்கு... Read more »

வடக்கு ரயில் சேவை பாதிப்பு

பரசன்கஸ்வெவ – மதவாச்சிக்கு இடையிலான ரயில் பாதையில் நேற்று இரவு 08.45 மணி அளவில் ரஜரட்ட ரெஜின ரயில் தடம் புரண்டமையால் வடக்கு ரயில் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை 05.10க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருத்த... Read more »

அரச ஊழியர்களின் சம்பளம் 15 வீதத்தினால் அதிகரிக்கப்படும்!!

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளங்கள் 15 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என பொதுநிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், அலுவலக உதவியாளர் ஒருவரின் சம்பளம்... Read more »

பெற்றோல் விநியோகம் இன்று முதல் வழமைக்கு!

பெற்றோல் விநியோகம் இன்று வழமைக்குத் திரும்பும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 40,000 மெட்ரிக் டொன் பெற்றோல் எரிபொருள் தாங்கிய “நவெஸ்கா லேடி” கப்பல் நேற்று முன் தினம் வந்ததுடன், முத்துராஜவளையில் நங்கூரமிடப்பட்டு பெற்றோலுக்கான மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவை நுகர்வுக்கு தகுதியுடையவை என... Read more »

வடக்கின் நுண்கடன் பிரச்சினைக்கு தீர்வு!

இலங்கையின் வடக்கு கிழக்கு மக்கள் முகங்கொடுத்து வந்த பாரிய பிரச்சினையான நுண்கடன் பிரச்சினைக்கு, 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இம்மக்களுக்கு உதவும் வகையில், குறைந்தளவான வட்டிகளில் கடன் வழங்குவதற்காக ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நுண்கடன் பிரச்சினையால் வடக்கில் கடந்த... Read more »

சைக்கிளில் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் : பாராளுமன்ற வளாகத்தில் சுவாரசியம்

நாட்டின் மிக முக்கியமான தருணத்திலும், கூட்டு எதிர்க் கட்சிகள் காலோசிதமாகத் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டத் தவறவில்லை. அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில் வாசிக்கப்படகின்றது. இந்த நிலையில், நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியினர்... Read more »

நான் தமிழ் என்பதால் இந்த நிலையா? அமைச்சராக இருப்பதில் பயன் இல்லை: இராதாகிருஸ்ணன்

கல்வி அமைச்சில் அதிகார பகிர்வு எதுவுமே இல்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு... Read more »

புலிகள் இயக்க சந்தேகநபருக்கு ஆயுள்தண்டனை!

பிலியந்தலவில் பேருந்து ஒன்றை இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எஸ்.ஆனந்த சுதாகர் எனப்படும், லோறன்ஸ் டேவிட் ராஜா என்ற சந்தேக நபருக்கே கொழும்பு மேல்... Read more »

வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் என்ற சுற்றறிக்கை வாபஸ்

வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோல் நிரப்புவதற்கான சுற்றறிக்கையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீளப் பெற, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டையடுத்து, வாகனங்கள் தவிர்த்து போத்தல்கள் போன்ற வேறு எவற்றிலும் பெற்றோல் வழங்கப்படாது என, சுற்றறிக்கை... Read more »