
கண்டி மாவட்டத்தில் அக்குறண, கட்டுகஸ்தோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றுபிற்பகல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால், பதற்றநிலை மோசமடைந்துள்ளது. கடந்த சில மணித்தியாலங்களில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அக்குரண, 8 ஆவது மைல் கல், கட்டுகஸ்தோட்ட பகுதிகளில் முஸ்லிம்களின் 25... Read more »

திகன நகரிலிருந்து இரு ஆண்களின் சடலங்களை, பொலிஸார் நேற்று காலை மீட்டுள்ளனர். 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உட்பட இருவரின் சடலங்களே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை திகன சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 24 பேரும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக,பொலிஸ்... Read more »

இனவாத, மதவாத வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய திட்டத்தை முன்வைக்காவிட்டால் முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை துறப்பார்களா? என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சவால் விடுத்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த சவாலை விடுத்தார். ஒரு இனம் அழிக்கப்படும்போது ஒரு... Read more »

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை 10 நாள்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இன வன்முறைகளைத் தடுக்கவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வௌயிடப்படும் என்றும் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற... Read more »

கண்டி தெல்தெனிய மற்றும் பல்லேகல பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நீடிக்கும் பதற்றத்தை தணிப்பதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல பகுதிகளிலும்... Read more »

அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்த்தப்படவுள்ளது. அரசாங்க ஊழியர்கள் முழு அளவில் ஓய்வுறுத்தப்படக்கூடிய வயது எல்லையை 67 ஆக நிர்ணயம் செய்வது குறித்த புதிய சுற்று நிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி என திகதியிடப்பட்டு... Read more »

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.00 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், குழப்பம் ஏற்பட்ட தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் தொடர்ந்தும் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினமும், நேற்றும்... Read more »

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊடரங்கு போடப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிவரை இந்த ஊடரங்கு நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கண்டி திகன நகரில் இன்று காலை முதல் ஏற்பட்ட அசாதாரண நிலமையை... Read more »

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தால் 15 வயதை அடைந்தவர்களும் தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக அத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில், “15 வயதை பூர்த்தியடைந்தவர்களும் இனிவரும் காலங்களில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பங்களை... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சகல கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் பெண் பிரதிநிதிகளின் பெயர் அடங்கிய தமது பெயர்பட்டியலை, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார். பெண் பிரதிநிதிகளை... Read more »

தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வூதியம் மற்றும் காப்புறுதி உட்பட்ட மேலதிக கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுத்த திட்டத்தில் விளைவே பேரூந்து குண்டுவெடிப்பிற்கு காரணம் என கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் தெரிவித்துள்ளார். அண்மையில் தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற... Read more »

தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் குறித்த பகுதியில் பேரூந்து ஒன்றில் கைக்குண்டு ஒன்று வெடித்தமை தென்னிலங்கையில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இன்று... Read more »

வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டத்திலும் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என... Read more »

உள்ளூராட்சி சபைகளை நிறுவும் தினம் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஏற்கனவே எதிர்வரும் 6ஆம் திகதி நிறுவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின்... Read more »

இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள தியத்தலாவ- கஹகொல்லவில் அண்மையில் படையினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில்... Read more »

மாற்றங்களுடனான புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. உட்பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக தொடர்ந்து தாமதிக்கப்பட்டுவந்த அமைச்சரவை மாற்றமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, மாற்றங்களுடனான புதிய அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதேவேளை,... Read more »

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றிவந்த உனா மக்கோலி திடீரென மரணமானார். கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுப்பில் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார்... Read more »

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தாமதிப்பதாகவும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட்... Read more »

தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பஸ் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு இராணுவ வீரர் ஒருவரே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பஸ்ஸில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இருந்த மூன்று ஆசன வரிசையில் மூவர் அமர்ந்திருந்ததாகவும், அதன் நடுவிலிருந்தவர் எழுந்தபோதே குண்டுவெடிப்பு... Read more »

2018ஆம் ஆண்டு, வரவு – செலவுத் திட்டத்துக்கு, ஆதரவு வழங்குவதற்காக, 20 மில்லியன் ரூபாயை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம், நாடாளுமன்றத்தில் நேற்று சூடுபிடித்திருந்தது. இந்தச் சலசலப்பையடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அமருமாறும்,... Read more »