எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் – விசேட வர்த்தமானி வெளியீடு

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அன்றையதினம் முற்பகல் 10 அளவில் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டுக்கான... Read more »

கட்சி மாறுபவர்களுக்கு 48 கோடியா? உடனடி விசாரணை நடத்தப்படும் என்கின்றார் நாமல்!

கட்சி மாறுபவர்களுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்படும் என நாடாளுமனற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்க தரப்பிற்கு மாறுவதற்காக 2.8 மில்லியன் அமெரிக்க... Read more »

ரணிலைத் தேடிச் சென்று சந்தித்தார் கோத்தாபய – மைத்திரியுடன் சஜித் பேச்சு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். எனினும்... Read more »

எஞ்சிய முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களுக்கும் விடுதலை – நாமல் உறுதி!

பிரதமர் மஹிந்த – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலானபுதிய அரசாங்கம் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வளிப்பதுடன் முன்னாள் போராளிகளுக்கான நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த உதவிபுரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த விடயம்... Read more »

பாராளுமன்றம் நவம்பர் 5 ஆம் திகதி கூட்டப்படும் – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

பாராளுமன்றத்தை நவம்பர் 5 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்கலைகழக பேராசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சாதாரணமாக 5 ஆம் திகதி கூடப்படும் பாராளுமன்றத்தை எதிர்வரும் 16 ஆம்... Read more »

மஹிந்தவிற்கே பிரதமர் ஆசனம்!- சபாநாயகர் உறுதி

நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு உரிய ஆசனத்தை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க சபாநாயகர் கரு ஜயசூரிய உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது பிரதமருக்கு உரிய ஆசனத்தை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் இடையூறாக விளங்கமாட்டார் என்றும் சபாநாயகர்... Read more »

ரணில் மீண்டும் பதவியேற்றால் அதிகாரத்தில் இருக்கப்போவதில்லை: மைத்திரி சூளுரை

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். ஜனாதிபதியின் செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களின் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், புதிய அரசாங்கத்தை... Read more »

நிதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த!

நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சராக பொறுப்பேற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பதவியேற்றது.... Read more »

ஜனாதிபதிக்கு எதிரான ஐதேகவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்!!!

அரசியலமைப்புக்கு முரணாக ஆட்சிக்கவிழ்ப்பை முன்னெடுத்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கும் மெரும் மக்கள் போராட்டம் கொழும்பில் ஆரம்பமாகி நடைபெற்று வருகி்றது. அலரிமாளிகைக்கு அருகாமையில் ஆரம்பமாகிய இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கான... Read more »

ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை!

நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் இந்த விசேட உரையை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்திற்குள் அண்மைய காலமாக இடம்பெற்று வந்த உட்பூசல் தீவிரமடைந்து வந்த நிலையில், நேற்றிரவு முன்னாள்... Read more »

வத்தளையில் தமிழ் மொழி மூல பாடசாலையை நிர்மாணிக்க அனுமதி!

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பிரதேசத்தில் தமிழ் மொழிமூல பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. களனி கல்வி வலயத்திற்குட்பட்டதாக அருள் மாணிக்கவாசகம் இந்து பாடசாலை எனும் பெயரில் இந்த தமிழ் மொழிமூல பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச மொழிகள்... Read more »

துமிந்த சில்வாவின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

பாரத லக்‌ஷ்மன் படுகொலை வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய தீர்ப்பாயம் வழங்கிய தூக்குத் தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள்... Read more »

தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது – இராணுவ தளபதி

யுத்தத்தில் உயிர்நீத்த தமிழ் மக்களை நினைவுகூருவதில் பிரச்சினை இல்லையென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் மறைவுகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில்... Read more »

இராணுவத்துக்கு அதிகாரத்தை வழங்குவது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல: ஜீ.எல்.பீரிஸ்

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கோருவது போன்று பொலிஸ் அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்க முடியாதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அது ஜனநாயகத்திற்கு ஏற்புடைய செயற்பாடு அல்லவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, பத்தரமுல்லையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற... Read more »

“ஜனபலய” ஒருவர் பலி ; மதுபோதையால் 81 வைத்தியசாலையில் அனுமதி!

கூட்டு எதிரணியின் “ஜனபலய” போராட்டம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்கார்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் மது அருந்தியதால் ஏற்பட்ட விளைவால் சுமார் 81 பேர் வைத்தியசாலையில்... Read more »

நோக்கமில்லாமல் சிதறியது மஹிந்தவின் ஆர்ப்பாட்டம் – அரசாங்கம் தெரிவிப்பு!

தெளிவான நோக்கம் இன்றி கூட்டு எதிரணியால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தோல்வியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். பணம் மற்றும் போதைப் பொருட்களை வழங்கி ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த போராட்டத்தில்... Read more »

ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட தமிழ், சிங்கள நண்பர்கள்!!!

வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் – சிங்கள நண்பர்கள் இருவர் ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அம்பாந்தோட்டையில் இடம்பெற்றுள்ளது. இருவரது உடலும் அங்குணுகொலபெலெஸ்ஸ பொது மயானத்தில் ஒரே குழியில் புதைக்கப்பட்டுள்ளது. அசாரிகம பிரதேசத்தை சேர்ந்த நாலக இரோஷன்( (Nalaka Roshan) (31 வயது)... Read more »

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் கொழும்பில் தற்கொலை!!

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது வெள்ளவத்தை பீட்டர்சன் வீதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான பிரியதர்சினி புஷ்பராஜா (வயது -46) என்பவரே... Read more »

ரயில் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது

ரயில் ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று (திங்கட்கிழமை) முடிவுக்கு வந்துள்ளதாக ரயில் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதனால் இன்று முதல் அனைத்து ரயில் சேவைகளும் வழமைப்போன்று இயங்குமெனவும் அத்தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தொழிற்சங்கத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற... Read more »

பொதுப் போக்குவரத்தில் இராணுவ பேருந்துகள்!

ரயில் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் பேருந்துகள் இன்று (வியாழக்கிழமை) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவசர சேவையாக இச்சேவை இடம்பெறுமென அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரயில்வே பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை... Read more »