புதிய அமைச்சர்கள் 10 பேர் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம்

இலங்கையின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. Read more »

இராணுவ விசாரணை சபையின் பரிந்துரைகள்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைச் சபையின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, பாதுகாப்பு செயலாளரிடம் வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. Read more »

சவூதிக்கான பணிப்பெண் வயது 25 ஆகவும், சிங்கப்பூருக்கு 21 ஆகவும் வரையறை!– அமைச்சர் கெஹலிய

இலங்கையில் இருந்து சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்களாக செல்வோருக்கான வயது எல்லை குறைந்தது 25 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். Read more »

பிரபல தமிழ் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசாமி கைது! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

கொழும்பிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்விகற்கும் இரு மாணிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த கல்லூரி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read more »

இறுதிப்போரில் காணாமல் போனவர்களுக்கு, இந்தியா மற்றும் ஐ.சி.ஆர்.சி.யே பொறுப்பு: பாதுகாப்பு செயலாளர்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும் காணாமல் போகவில்லை’ என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். Read more »

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க அழைக்கவில்லை: அமைச்சர் ஜோன் செனவிரத்ன

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்காக அவர்களை நாம் கொழும்புக்கு அழைக்கவில்லை என்று அமைச்சர் ஜோன் செனவிரத்ன இன்று தெரிவித்தார் Read more »

கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்!

பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கும் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more »

திருமணப்பதிவு வரியிலிருந்து விலக்களிக்கவும்: ஆதிவாசிகளின் தலைவர்

திருமணப்பதிவிற்கென புதிதாக அறவிடப்படும் வரி அறவீட்டுக்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ள ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலேத்தோ அந்த வரியை ஆதிவாசிகளிடம் அறவிடக்கூடாது எனவும் கோரியுள்ளார்.பிரித்தானிய ஆட்சிக்காலத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட சகல வரிகளில் இருந்தும் ஆதிவாசிகள் விலக்களிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வரியையும் தங்களிடமிருந்து அறவிடக்கூடாது என்றும் கோரியுள்ளார். Read more »

தேசிய பாதுகாப்பு இணையத்தளம் முடக்கம்

இலங்கை அரசின் முக்கிய பரப்புரை இணையங்களில் ஒன்றான, தேசிய பாதுகாப்புக்காக ஊடகத் தகவல் மையத்தின் இணையத்தளம், “கேம்ஓவர்” என்று அறியப்பட்ட ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றாகச் செயலிழந்துள்ளது. Read more »

பிரதம நீதியரசராக மொஹான் பிரீஸ் சத்திய பிரமாணம்

44ஆவது பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பிரீஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் சத்திய பிரமாணம் செய்துகொண்டுள்ளார். Read more »

பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்க பதவி நீக்கம்

இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரதம நீதியரசரை பதவி நீக்குவதற்கு நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கி அதனை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது.அதன்படி அங்கீகார ஆவணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை கையெழுத்திட்டுள்ளார். Read more »

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் குற்றப் பிரேரணை சபையில் வெற்றி; நாடாளுமன்றில் நேற்று கடும் வாதப்பிரதிவாதங்கள்

இலங்கை ஜன நாயக சோஷலிசக் குடியரசின் முதல் பெண் பிரதம நீதியரசரான கலா நிதி ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவிநீக்கம் செய்யும் குற்றவியல் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. Read more »

நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம் – ஜனாதிபதி

நாட்டின் இறைமையைப் பாதுகாத்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் போது எந்த அழுத்தங்களுக்கும் இடமளிக்கக் கூடாது. மக்கள் ஆணையையும் அவர்களுக்கான உரிமையையும் எவரும் காட்டிக்கொடுக்க இடமளிக்க முடியாது மக்கள் எதிர்பார்ப்பையும் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவது முக்கியமென தெரிவித்த ஜனாதிபதி எமக்காக மக்கள் என்றில்லாமல் மக்களுக்காக... Read more »

சர்வாதிகாரச் சட்டமே திவிநெகும – தமிழ்க் கூட்டமைப்பு கண்டணம்

மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதான 15 அதிகாரங்கள் “திவிநெகும’ சட்டத்தின் மூலம் பலவந்தமாகப் பறிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த தமிழ்க் கூட்டமைப்பு, தமிழர்களை அடிமைப்படுத்தும் சர்வாதிகாரச் சட்டமே இது என்றும் Read more »

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சூடான விவாதங்கள்

திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றம் திவிநெகும சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. Read more »

அரச மருத்துவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்ற தடை!

அரசாங்க மருத்துவ நிர்வாக சேவையில் கடமையாற்றும் மருத்துவ நிபுணர்கள் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றுவதைத் தடை செய்யப்படும் இது தொடர்பாக விசேட சுற்றறிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயத்திலக்க தெரிவித்தார். Read more »

இரட்டைக் குடியுரிமை; இனிமேல் புதிய நடைமுறை கோத்தபாய அறிவிப்பு

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க, இந்த ஆண்டில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்த பாய ராஜபக்ஷ தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரி வித்துள்ளார். Read more »

தனது கணவரை வங்கியின் தலைவராக்குமாறு பிரதம நீதியரசர் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தார்: அமைச்சர் திஸ்ஸ விதாரண

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் கொடுத்து வந்த வலியுறுத்தல் காரணமாகவே அவரின் கணவரை ஜனாதிபதி தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமித்தார் என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். Read more »

ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அதிகாரமில்லை: மேன்முறையீட்டு நீதிமன்றம்

ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்றத் நிலையியற் கட்டளைக்கு அதிகாரமில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளை ரத்து செய்யுமாறு கோரி, பிரதம நீதியரசர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். Read more »

சம்பந்தர், ஹேரத் நீதிமன்றத்தில் வியாழனன்று ஆஜர்

இலங்கையின் தலைமை நீதிபதியை குற்றஞ்சாட்டி பதவி நீக்கம் செய்ய எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் தொடர்பில், நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் சிலர் நீதிமன்றத்தின் அறிவிப்பை ஏற்று தமது கருத்துக்களை தெரிவிக்கவுள்ளனர். Read more »