பெற்றோல் விநியோகம் இன்று முதல் வழமைக்கு!

பெற்றோல் விநியோகம் இன்று வழமைக்குத் திரும்பும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 40,000 மெட்ரிக் டொன் பெற்றோல் எரிபொருள் தாங்கிய “நவெஸ்கா லேடி” கப்பல் நேற்று முன் தினம் வந்ததுடன், முத்துராஜவளையில் நங்கூரமிடப்பட்டு பெற்றோலுக்கான மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவை நுகர்வுக்கு தகுதியுடையவை என... Read more »

வடக்கின் நுண்கடன் பிரச்சினைக்கு தீர்வு!

இலங்கையின் வடக்கு கிழக்கு மக்கள் முகங்கொடுத்து வந்த பாரிய பிரச்சினையான நுண்கடன் பிரச்சினைக்கு, 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இம்மக்களுக்கு உதவும் வகையில், குறைந்தளவான வட்டிகளில் கடன் வழங்குவதற்காக ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நுண்கடன் பிரச்சினையால் வடக்கில் கடந்த... Read more »

சைக்கிளில் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் : பாராளுமன்ற வளாகத்தில் சுவாரசியம்

நாட்டின் மிக முக்கியமான தருணத்திலும், கூட்டு எதிர்க் கட்சிகள் காலோசிதமாகத் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டத் தவறவில்லை. அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில் வாசிக்கப்படகின்றது. இந்த நிலையில், நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியினர்... Read more »

நான் தமிழ் என்பதால் இந்த நிலையா? அமைச்சராக இருப்பதில் பயன் இல்லை: இராதாகிருஸ்ணன்

கல்வி அமைச்சில் அதிகார பகிர்வு எதுவுமே இல்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு... Read more »

புலிகள் இயக்க சந்தேகநபருக்கு ஆயுள்தண்டனை!

பிலியந்தலவில் பேருந்து ஒன்றை இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எஸ்.ஆனந்த சுதாகர் எனப்படும், லோறன்ஸ் டேவிட் ராஜா என்ற சந்தேக நபருக்கே கொழும்பு மேல்... Read more »

வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் என்ற சுற்றறிக்கை வாபஸ்

வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோல் நிரப்புவதற்கான சுற்றறிக்கையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீளப் பெற, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டையடுத்து, வாகனங்கள் தவிர்த்து போத்தல்கள் போன்ற வேறு எவற்றிலும் பெற்றோல் வழங்கப்படாது என, சுற்றறிக்கை... Read more »

கர்பிணி தாய்மார்கள் தொலைபேசி ஊடாக போசாக்கு உணவு பொருட்களை பெறும் வசதி!

கர்பிணி தாய்மார்கள் எதிர்வரும் காலங்களில் வரிசையில் நிற்காமல், தொலைபேசி ஊடாக போசாக்கு பொருட்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதியினை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் சாகலரத்னாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை-தெனியாய பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற காணி உறுதிபத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக்... Read more »

அழிவை நோக்கிய பயணம் : யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு விட்டது!!

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதம் தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏதும் நிகழுமாக இருந்தால் பேரனர்த்தம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (புதன்கிழமை) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.... Read more »

சம்பந்தனுக்கு எதிராக சிவசக்தி ஆனந்தன் முறைப்பாடு

புதிய அரசமைப்பு தொடர்பில் தமது கருத்தை தெரிவிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அனுமதி மறுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனக்கு நீதியை... Read more »

பட்டதாரிகள் அரச நியமனங்களுக்காகக் காத்திருப்பது நியாயமற்றது: அமைச்சர் தயாசிரி ஜயசேகர

பட்டதாரிகள் அரச நியமனங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பது நியாயமற்றது. அனைவருக்கும் அரச நியமனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் எதிர்க்கிறேன் என்று விளையாட்டுத் துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான தயாசிரி ஜயசேகர தெரிவித்தார். நேற்று (01) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை... Read more »

டிசம்பரில் வேட்புமனு!! ஜனவரி இறுதிவாரம் தேர்தல் !

புதிய தேர்தல் முறையின் கீழ் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பில் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று (01) கைச்சாத்திட்டார். இந்நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், 2018 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதிக்கும் 31 ஆம்... Read more »

தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கு பல்கலை மாணவர்கள் பகிரங்க அழைப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாகாணசபை உறுப்பினர்களையும் கலந்துரையாடலுக்கு வருமாறு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 02 மணிக்கு யாழ் பல்கலைக்கழக... Read more »

பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழுக்கான புதிய கட்டண விபரம்!!

பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழை (Police Clearance Reports) பெற்றுக்கொள்வதற்காக அறிவிடப்படும் கட்டணம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண மறுசீரமைப்பு எதிர்வரும் 5 ஆம் திகதி (2017.11.05)முதல் நடைமுறைக்குவருவதாக பொலிஸ் தமைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழை இலங்கையிலிருந்து விண்ணப்பித்து... Read more »

பனை மற்றும் தென்னையிலிருந்து கள்ளை பெற்றுக்கொள்ள அனுமதிப்பத்திரம்

பனை மற்றும் தென்னையிலிருந்து கள்ளை சீவுவதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்த மதுவரி திணைக்கள கட்டளைச்சட்டத்தின் 15 ஆவது பிரிவில் (பாகம் 52) திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதற்கமைய தென்னை, பனை மரங்களிலிருந்து கள்ளை எடுப்பதற்கு மதுவரி... Read more »

வடக்கில் “கள்” இறக்கும் தொழில் செய்வோர் பாதிப்பு!

தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க தடை விதிக்கப்படவுள்ளதால், வடக்கில் கள் இறக்கும் தொழில் செய்வோர் சுமார் 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள்... Read more »

கரையோர மக்களை காப்பாற்றுங்கள்! : ஜனாதிபதிக்கு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் அவசர கடிதம்

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வேறு மாவட்டங்களில் இருந்து வடக்கிற்கு படையெடுக்கும் மீனவர்கள், தமது கரைவலைத் தொழிலுக்கு உழவு இயந்திரங்களை பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கந்தையா சிவநேசன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில்... Read more »

சகல இலங்கையரும் மாமிசம் புசிப்பதை நிறுத்த வேண்டும்!

இலங்கையில், திங்கட்கிழமைகளில் இறைச்சி தடை செய்யப்பட வேண்டுமெனக் கோரியுள்ள நான்கு பௌத்த மற்றும் விலங்கு உரிமைகள் நிறுவனங்கள், வெசாக் வரும் மே மாதத்தில் விலங்குணவுகள் உண்பதை, சகல பௌத்தர்களும் தவிர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளன. அநகாரிக தர்மபால மனிதாபிமான நிறுவனம், விலங்குகளுக்கான தர்மத்தின் குரல், போதிராஜா... Read more »

புதிய தேசிய அடையாள அட்டை

ஆட்பதிவு திணைக்களம் 45 வருடங்களின் பின்னர் புதிய தேசிய அடையாள அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தேசிய அடையாள அட்டைகள் நேற்று முன்தினம் முதல் வழங்கப்படுவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். இது ஸ்மார்ட் காட் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவரினதும்... Read more »

இன்னும் 20 வருடங்களில் தமிழிஸ் என்ற புதிய மொழி உருவாகும்! : முதலமைச்சர் சி.வி கவலை

இன்னும் இருபது வருடங்களில் தமிழ் மொழி மறைந்து தமிழிஸ் என்ற புது மொழி வழக்கத்திற்கு வந்துவிடும் நிலை உருவாகியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.... Read more »

பௌத்தத்துக்கு முதலிடம் என்பதில் மாற்றமில்லை : பிரதமர் ரணில்

இலங்கையில் பௌத்த மதத்துக்கு முதலிடம் என்பதில் மாற்றம் எதுவும் இல்லை. இதனை ஏனைய இனத்தவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று, ஏனைய மதங்களுக்கும் அவற்றுக்குரிய இடம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி, மடவல பிட்டியேகெதர ரஜமகா விகாரையில் நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற... Read more »