யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் கொழும்பில் தற்கொலை!!

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது வெள்ளவத்தை பீட்டர்சன் வீதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான பிரியதர்சினி புஷ்பராஜா (வயது -46) என்பவரே... Read more »

ரயில் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது

ரயில் ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று (திங்கட்கிழமை) முடிவுக்கு வந்துள்ளதாக ரயில் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதனால் இன்று முதல் அனைத்து ரயில் சேவைகளும் வழமைப்போன்று இயங்குமெனவும் அத்தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தொழிற்சங்கத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற... Read more »

பொதுப் போக்குவரத்தில் இராணுவ பேருந்துகள்!

ரயில் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் பேருந்துகள் இன்று (வியாழக்கிழமை) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவசர சேவையாக இச்சேவை இடம்பெறுமென அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரயில்வே பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை... Read more »

அரசாங்கத்தின் பங்காளிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க முடியாது: சுமந்திரன்

அமைச்சரவையில் அங்கம் வகித்துக்கொண்டு அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு மஹிந்த அணியினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில்... Read more »

பொலிஸ் மா அதி­பர் பூஜித்த ஜய­சுந்­த­ரவை 100 தடவை பயிற்சி செய்­யு­மாறு பணித்த ஜனாதிபதி

பொலன்­ன­று­வை­யில் சில தினங்­க­ளுக்கு முன்­னர் உடற்­ப­யிற்சி, நடை­பாதை வளா­கத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால திறந்து வைத்த பின்­னர் பொலிஸ் மா அதி­பர் பூஜித்த ஜய­சுந்­த­ரவை 100 தடவை பயிற்சி செய்­யு­மாறு மைத்­திரி பணித்த காணொலி சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் வேக­மா­கப் பரவி வரு­கின்­றது. பொலன்­ன­றுவை அபி­வி­ருத்தி... Read more »

அமைச்சர்கள், எம்.பிக்களின் சம்பளம் 215 சதவீததத்தால் அதிகரிப்பு!!!

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளம் 215 சதவீததத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சம் 40 ஆயிரம் ரூபாவாகவும் பிரதி அமைச்சர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவாகவும்... Read more »

ரயில் சாரதிகள் அடையாள பணிப்புறக்கணிப்பு!

ரயில் சாரதிகள் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக ரயில் சங்கங்கள் அறிவித்துள்ளன. சம்பள முரண்பாடு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமுல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்பில்... Read more »

புலிகளின் சமாதிகளை புனரமைக்க அரசு திட்டம்!

விடுதலைப் புலிகளின் சமாதிகளை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மஹகரகம பிரதேசத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிசிர ஜயகொடி இதனை தெரிவித்தார். “முன்னாள் விடுதலை புலிகளின்... Read more »

சிறுவர்கள் மத்தியில் வாய்புற்று நோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை!

சிறுவர்கள் மத்தியில் வாய்புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர் பபா பலிஹவடன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகையிலை மற்றும் பாக்கு சார்ந்த உற்பத்திகளின் பாவனை அதிகரித்துள்ளமைக காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

ஆவா குழுவினர் தென் இந்தியத் திரைப்படங்களை பார்த்து செயற்பட்டுள்ளனர்

வடக்கில் ஆவா குழுவினர் தென் இந்தியத் திரைப்படங்களை பார்த்து, அதில் உள்ளவாறு செயற்பட்டுள்ளனர் என்று பிரதி அமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் நேற்று (17) தெரிவித்துள்ளார். வடக்கில் ஆவா குழு ஒரு பயங்கரவாத குழுவல்ல என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பத்ம... Read more »

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்!

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை நீக்கிவிட்டு, தினேஸ் குணவர்த்தனவை நியமிக்க வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சித் தலைவரான ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்... Read more »

விஜயகலாவிற்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு தெரிவித்த கூட்டு எதிரணியினர்!

விடுதலைப்புலிகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காதமைக்கு ஒன்றிணைந்த எதிரணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒன்றிணைந்த எதிரணியினர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டு நேற்று (புதன்கிழமை) காலி – சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்துள்ளனர்.... Read more »

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கொழும்பில் கழுத்தறுத்துக் கொலை

யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், கொழும்பு கொட்டாஞ்சேனையில் வீடொன்றில் வைத்து கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவர்களே இந்தக் கொலையை செய்துள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகப் பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம்... Read more »

அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் ஊடகங்கள் தண்டிக்கப்படும்: ராஜித சேனாரத்ன எச்சரிக்கை

அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்... Read more »

அங்கஜன் இராமநாதனுக்கு பிரதி அமைச்சர் பதவி!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் விவசாயத்துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான அங்கஜன் இராமநாதனுக்கு பிரதி சபாநாயகர் பதவியை வழங்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி முயற்சித்தது. அதற்கு தமிழ்... Read more »

கொழும்பு தாமரை கோபுர பணியில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி இளைஞர் மரணம்!!

இரண்டாம் இணைப்பு தாமரைக் கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த மாணவன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு உயர்தர பிரிவில் உயிரியல் பிாிவில் கல்வி கற்க்கும் கோனேஸ்வரன் நிதர்சன் 19 ஆவார். நண்பர்களுடன் இணைந்து மின் இணைப்பு பணிக்குச் சென்ற மாணவன் கொழும்பில்... Read more »

யாழ்ப்பாணம் உள்பட 12 மாவட்டங்களில் டெங்கு அபாயம் அதி உச்சம்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து அதி உச்சமாக உள்ள மாவட்டங்கள் என இலங்கை நோய்தொற்றியல் பிரிவு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் நோய்த்தொற்றியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை,... Read more »

வடக்கில் விஹாரைகள் அமைப்பதை விக்னேஸ்வரன் தடுக்க முடியாது: மைத்திரி

எந்த சமயமும் தீமையானவற்றை போதிப்பதில்லை. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வடக்கில் விஹாரைகளை அமைக்கக் கூடாதென தெரிவித்து வருவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார். சுகாதார மற்றும் பொருளாதார செயத்திட்டங்களை முன்னெடுக்கும் நிரோதா எனும் செயத்திட்டத்தின்... Read more »

கிரிக்கெட் வீரரின் தந்தையின் கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் கொலை தொடர்பிலான, முக்கிய தகவலொன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதாவது அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அவரது மார்பு பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார்... Read more »

ஹற்றன் நஷனல் வங்கியின் தன்னிலை விளக்கம்!

ஹற்றன் நஷனல் வங்கியின் சமூக ஊடகக் கொள்கையை மீறிய குற்றச்சாட்டிலேயே கிளிநொச்சிக் கிளையின் உதவி முகாமையாளருக்கும் உத்தியோகத்தர் ஒருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என வங்கி முகாமைத்துவத்தின் தகவல்கள் தெரிவித்தன. மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் ஹற்றன் நஷனல் வங்கியின் கிளிநொச்சி கிளையில்... Read more »