இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும்!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட, வட மத்திய கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலேயே அதிக மழைவீழ்ச்சி காணப்படும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது Read more »

எதிர்வரும் சில நாட்களில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை

எதிர்வரும் சில நாட்களில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணத்திலும் இடைக்கிடையே மழை பெய்யலாம். நாட்டின் பெரும்பாலான இடங்களில்; மழை பெய்யும்.என்று திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும்... Read more »

தேர்தல் பிரசாரங்களில் பொலித்தீன் பாவனையை தடைசெய்ய ஜனாதிபதி உத்தரவு

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பொலித்தீன் பாவனையை தடை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொலித்தீன் பாவனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பாக... Read more »

பிரமிட்முறை வர்த்தகத்தில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு இடைக்காலத்தடை!

தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமையை ஒத்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று இடைக்கால தடைவிதித்துள்ளது. குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொண்ட போதே... Read more »

இலங்கையின் வான் பரப்பில் மாற்றம்!

இலங்கையின் வான்பரப்பில் தற்காலத்தில் எரிகல் வீழ்ச்சி இடம்பெறுகிறது. இதன் உச்சக்கட்டம் இன்று(13) இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை வரையில் தொடரும். 14ம் திகதி அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரையிலான காலப்பகுதியே இதனை சிறப்பாக பார்க்க உசிதமான காலம்... Read more »

சருமத்தை அழகு படுத்த பயன்படுத்தும் பொருட்கள் குறித்து நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை!

சருமத்தை அழகுப்படுத்த பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருளுக்கு சந்தையில் பெரும் கிராக்கி உண்டு.இதனை பயன்படுத்துவதன் மூலம் மேனி அழகாக காட்சியளிக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கை. இதுதொடர்பில் சந்தையிலுள்ள பொருட்கள்குறித்து நுகர்வோர் அதிகார சபை பாவனையாளர்களின் கவனத்திற்கு பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு ஆரோக்கியத்திற்கு பாதிப்பு... Read more »

வெளிநாடு செல்லும் மக்களுக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் எச்சரிக்கை!

தரகர்களால் தரப்படும் வீசா மற்றும் விமான பயணச் சீட்டை பயன்படுத்தி சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக வெளிநாடு செல்பவர்கள் அவதானமாக இருக்குமாறு, யாழ்ப்பாணப் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலாவுக்காக வெளிநாடு செல்ல முற்பட்ட பலர் ஏமாற்றப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமையவே பொலிஸார்... Read more »

இடிமின்னலிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

நாட்டிலிருந்து 1100 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு திசை வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடமாகாணங்களிலும் , வடக்கு கிழக்கு கடற்கரையோர பிரதேசங்களிலும் இன்று முதல் காற்றின்... Read more »

வளிமண்டலத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு : மக்களே எச்சரிக்கை !

தெற்கு அந்தமான் தீவு கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக உருவாகலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, குறித்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை 5 ஆம் திகதி மேலும் வலுவடைய... Read more »

யாழில் மாணவர்களை இலக்குவைத்து “ஹெரோய்ன் ரொபி“

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதெனக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, யாழ்ப்பாணத்தில் “ஹெரோய்ன் ரொபி” விற்கப்படுவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திரண எம்.பி, கல்வியமைச்சரிடம் கேள்விகளை கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு... Read more »

வடக்கில் நாளை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்கள் அனைவரும் நாளைக் காலை 7 மணி முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அரச தாதியர்கள், துணைமருத்துவ... Read more »

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் விஷேட ஒருநாள் சேவை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டையை விரைவாக பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் 25ம் திகதி விஷேட ஒருநாள் சேவை திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது. அன்றைய தினம் பாடசாலை விண்ணப்பதாரிகள்... Read more »

அரசின் பியர் வரிக்குறைப்பிற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

இளைஞர்களை மது பாவனைக்கு தூண்டிவிடும் அரசின் பியர் வரிக் குறைப்பு யோசனைக்கு எதிர்ப்பு குரல் கொடுக்க ஒன்றிணையுமாறு யாழ். போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். மாவட்ட ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் இடம்பெறவுள்ளது. அதன்போது ஆளுநர் மற்றும்... Read more »

வடக்கு ரயில் சேவை பாதிப்பு

பரசன்கஸ்வெவ – மதவாச்சிக்கு இடையிலான ரயில் பாதையில் நேற்று இரவு 08.45 மணி அளவில் ரஜரட்ட ரெஜின ரயில் தடம் புரண்டமையால் வடக்கு ரயில் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை 05.10க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருத்த... Read more »

அரச ஊழியர்களின் சம்பளம் 15 வீதத்தினால் அதிகரிக்கப்படும்!!

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளங்கள் 15 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என பொதுநிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், அலுவலக உதவியாளர் ஒருவரின் சம்பளம்... Read more »

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி!

சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அவர்களின் விடுதலையை விரைவு படுத்த வலியுறுத்தியும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் இருந்த தமிழ்... Read more »

அரச சேவைக்கான கட்டணங்கள் அனைத்தும் நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பு!!!

2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய அரசாங்க சேவைகளுக்காக அறிவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச சேவைக்கான கட்டணமாக நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டணம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய கடவுச்சீட்டு, அடையாள அட்டை,... Read more »

யாழில் கனமழை!! மக்களை விழிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை!!

யாழில் பெய்து வரும் கன மழை காரணமாக தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதனைச் சூழவுள்ள கிராம மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. யாழில்.கடந்த 24 மணிநேரமாக மழை பெய்து வருகின்றது. இந்த மழை தொடர்ந்து நீடிக்குமாயின் தொண்டமனாறு... Read more »

பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம் காணப்படின் அதற்கு பாடசாலை அதிபர்களே பொறுப்பு!!!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கல்வி அமைச்சின் அறிவித்தலுகமைய நேற்று ஆரம்பமானது. இவ் வேலைத்திட்டம் இன்றும் தொடரும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம் காணப்படின் அதற்கு பாடசாலை அதிபர்களே பொறுப்பு கூற வேண்டும் என்று மேலும்... Read more »

வவுனியா வளாகம் நடத்தும் தொழிற்சந்தை!

யாழ் பல்கலைக்கழகத்தின், வவுனியா வளாகம் நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகின்றது. இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வானது யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தலைமையில் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் இரு நாட்களும் காலை 9.00 மணிதொடக்கம்... Read more »