Ad Widget

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மாபெரும் மலர்க் கண்காட்சி : மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள்

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாபெரும் மலர்க் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், வடமாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் பங்கேற்கும் இம்மலர்க் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) நாளை வியாழக்கிழமை (05.11.2015) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதனை வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா சம்பிரதாயபூர்வமாகத் திறந்து...

ஆவணப்படம், குறும்படம் தயாரித்தல் தொடர்பான கருத்தரங்கு!

ஆவணப்படம், குறும்படம் தயாரித்தல் தொடர்பான கருத்தரங்கொன்று எதிர்வரும் டிசெம்பர் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. ஆசிய திரைப்பட மையத்தின் பங்களிப்புடன் இணைந்து தகவல் திணைக்களத்தின் அரசாங்க திரைப்பட பிரிவினரால் இதற்கென ஏற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நடைபெறவுள்ள இக்கருத்தரங்கு இந்தியாவின் சென்னை...
Ad Widget

வேமாக பரவி வரும் வயிற்றோட்டம்: மக்களை அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வயிற்றோட்டத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக நோய் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநோய் தொற்றுக்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாப்பதற்காக சுட்டாறிய நீரை பருகுமாறு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமாரன் பொதுமக்களிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்....

திராட்சைகளை உட்கொள்ள வேண்டாம்

தற்போது சந்தையில் மலிவு விலையில் விற்கப்படும் திராட்சைப் பழங்களை வாங்கி உட்கொள்ள வேண்டாமென கிண்ணியா பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி இன்று ஞாயிற்றுக்கிழமை மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். கிண்ணியாவில் சனிக்கிழமை (31) வாராந்தச் சந்தையில் ஒரு கிலோகிராம் திராட்சைப்பழம் 100 ரூபாய் படி விற்கப்பட்ட திராட்சைப்பழத்தை வாங்கி உட்கொண்ட சில மணி நேரங்களில் வாந்தியும் தலைச்சுற்றும்...

யாழ்.போதனா வைத்தியசாலை ‘பாஸ்’ நடைமுறை நீக்கம், பார்வையிடும் நேரங்களிலும் மாற்றம்!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் நாளை மறுதினம் தொடக்கம் நோயாளரைப் பார்வையிட வருவோர் மற்றும் சிகிச்சை பெறவருவோர் விடயத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இந்த நடைமுறைகளுக்கு பொதுமக்கள் அனைவரையும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிடுபவர்களுக்கான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 6மணிமுதல் காலை...

தீபாவளி கொண்டாட்டத்தை இந்துக்கள் புறக்கணிப்பர்! – இந்து மாமன்றம் எச்சரிக்கை!!

தமிழ் அரசியல் கைதிகளை தீபாவளிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தின் தீபாவளி தொடர்பான நிகழ்வுகளில் சுயகௌரவமுடைய எந்தவொரு இந்து மகனும் கலந்து கொள்ளமாட்டான் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் எச்சரித்துள்ளது. இது குறித்து இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன், பொதுச் செ லாளர் பொ.கதிர்காமநாதன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த...

யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு அதிகார சபையின் நடமாடும் சேவை!

புனர்வாழ்வு அதிகார சபையினரின் ஏற்பாட்டில் இம்மாதம் 29, 30 ஆந் திகதிகளில் உடுவில் மற்றும் கரவெட்டி பிரதேச செயலங்களில் நடமாடும் சேவைகள் இடம்பெறவுள்ளன. கோப்பாய், தெல்லிப்பளை, உடுவில் ஆகிய பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த பயனாளிகளுக்கு உடுவில் பிரதேச செயலகத்தில் இம்மாதம் 29 ஆந்ததிகதி மு.ப 8.00 மணிமுதல் பி.ப. 4.00 மணிவரையும் பருத்தித்துறை, மருதங்கேணி,...

இறைச்சி உணவுப் பிரியர்களுக்கு எச்சரிக்கை: ‘புற்றுநோய் ஆபத்து’

பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுவகைகளை உண்பது புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறுகின்ற உலக சுகாதார நிறுவனம், சிவப்பு இறைச்சி வகைகளை உண்பது அந்த ஆபத்தை அதிகரிக்கும் என்று முடிவு செய்துள்ளது. தினமும் 50 கிராம் அளவுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது குடல் புற்றுநோய் ஆபத்தை 18 வீதத்தால் அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது.

வடக்கு கிழக்கில் கடுமையான மழை பெய்யும் சாத்தியம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழை வீழ்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சுமார் 100 மில்லி மீற்றர் மழை பெய்கக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னரே...

சமூக வலை­த்த­ளங்­களில் தனிநபரை, இழி­வு­ப­டுத்தும் பதி­வேற்­றங்­க­ளுக்கு எதி­ராக புதிய சட்­ட­ம்

சமூக வலை­த்த­ளங்­களில் தனி நபரை இழி­வு­ப­டுத்தும் வகை­யி­லான பதி­வேற்­றங்­க­ளுக்கு எதி­ராக புதிய சட்­ட­மொன்றை அர­சாங்கம் கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார். மேலும் வழக்­கு­களின் கால­தா­மதத்தை குறைப்­ப­தற்கு விசேட நட­வ­டிக்­கை­களை அரசு முன்­னெ­டுக்­க­வுள்­ளது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார். நீதி அமைச்சில் நேற்று (19) இடம்­பெற்ற சட்டம் ஒழுங்­கு­ப­டுத்தல் ஆணைக்­கு­ழுக்­க ளின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான...

சிறந்த பண்ணையாளர் : விண்ணப்பங்கள் கோரல்

வட­மா­கா­ணத்தில் பாற்­பசு, ஆடு, கோழி ஆகிய கால்­ந­டை­களை வளர்க்கும் பண்ணை­யா­ளர்­களில் மாவட்ட ரீதி­யாக சிறந்த பண்­ணை­யா­ளர்­களைத் தெரிவு செய்­வ­தற்­கான போட்­டிகள் இடம்பெற்று அவர்கள் பரி­சில்கள் வழங்கிக் கௌர­விக்­கப்­ப­ட­வுள்­ளனர். இதற்­கான நிகழ்வை வட­மா­காண விவ­சாய கம­நல சேவைகள் கால்­நடை அபி­வி­ருத்தி கூட்­டு­றவு அபி­வி­ருத்தி உணவு வழங்கல் நீர்ப்­பா­சனம் மற்றும் சுற்­றாடல் அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது. இப்­போட்­டி­களில் கலந்­து­கொள்ள விரும்பும்...

அடையாள உண்ணாவிரத்திற்கு அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளையதினம் வெள்ளிக்கிழமை யாழ் முனியப்பர் கோவில் முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி போராட்த்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. காலம்: 16.10.2015 வெள்ளிக்கிழமை நேரம்: காலை 7.00 மணி இடம்: முனியப்பர் கோவில் முன்றல் (யாழ் பொது நூலகத்திற்கு அருகாமை) தமிழ்த்...

வடக்கு பிரதேச செயலகங்களில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்கள்

வடமாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களும் வடமாகாணத்திலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை பெற்றுக்ககொள்ள முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், கணினியின் உபயோகத்துடன் பிறப்பு,இறப்பு மற்றும் விவாக சான்றிதழினை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்,மன்னார்,வவுனியா,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய...

இன்டர்நெட்டில் மூழ்கினால் அதிக ரத்த அழுத்தம்!

அதிகமான இன்டர்நெட் பயன்பாட்டினால் ரத்தஅழுத்தமும், உடல் எடையும் அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் டெட்ராய்டு நகரிலுள்ள ஹென்றி போர்டு மருத்துவமனை டாக்டர்கள், 14 முதல் 17 வயதுடைய 335 பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்ததாவது: சராமரியாக வாரத்தில் 14 மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தும் 134 பேரில், 26...

விண்ணப்பம் கோரல்

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் 2016ஆம் ஆண்டுக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எந்திரவியல் தொழில்நுட்பவியலாளர் கற்கைநெறிகள் என்னும் வகைக்குள், படவரைவியலுக்கான தேசிய சான்றிதழ், குடிசார் எந்திரவியல், மின்னியல் மற்றும் இலத்திரனியல் எந்திரவியல், கனிய அளவையியல், பொறிமுறை எந்திரவியல் (ஓடோ மொபைல்) ஆகிய கற்கை நெறிகள் உள்ளன. வர்த்தகத்துறை கற்கை நெறிகள் என்னும் வகைக்குள் தேசிய கணக்கீட்டு...

அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பாக பட்டதாரிகளுக்கான அறிவித்தல்!

வடக்கு மாகாணத்தில் 2012 மார்ச் 30ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பில் எதிர்வரும் 9,10ஆம் திகதிகளில் நேர்முகப்பரீட்சை இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்தல் விடுத்திருக்கின்றமை யாவரும் அறிந்த ஒன்றே. மேற்படி நேர்முகத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு மாத்திரமே நேர்முகப் பரீட்சைக்கான அனுமதிக்கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. எனினும்...

வெற்றிடங்களை நிரப்ப யாழில் நேர்முகத்தேர்வு

முன்னணி தனியார் நிறுவனம் ஒன்றில் 500 வரையான வெற்றிடங்களுக்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு பொது மக்கள் தொழில் சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பொதுமக்கள் தொழில் சேவை நிலையமானது தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்காக நாடு முழுவதிலும் கிளைகளைக் கொண்டுள்ள முன்னணி தனியார் கம்பனியிடமிருந்து 500...

இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளது

உலக பார்வை தினத்தை முன்னிட்டு யாழ். அரிமாக்கழகத்தின் அனுசரணையுடனும் யாழ்.போதனா வைத்தியசாலையின் ஒத்துழைப்புடனும், யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் பார்வைக் குறைபாடுடைய தனது பயனாளிகளுக்கு கண் பரிசோதனைகளை மேற்கொண்டு இலவசமாக மூக்குக் கண்ணாடி வழங்கவுள்ளது. மேற்படி சிகிச்சை முகாமில் பங்கு கொண்டு பயன்பெற விரும்பும் யாழ்.ஜெய்ப்பூர் நிறுவனப் பயனாளிகள் எமது நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு நாளை...

வடக்கு மாகாணத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட புனர்வாழ்வு

வடக்கு மாகாணத்தில் போரினால் காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வடக்கு மாகாணத்தில் போரின் போது காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டமொன்றை வடக்கு மாகாண சுகாதார...

இலவச நீரிழிவு சிகிச்சை முகாம் :பொது அமைப்புக்களின் ஒத்துழைப்பு தேவை!

யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவினர் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தடன் இணைந்து யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் இலவச நீரிழிவுப் பரிசோதனை முகாம்களை நடாத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு அந்தந்தப் பிரிவில் உள்ள சனசமூக நிலையங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். ஒவ் வொரு பிரிவிலும் கண்டறியபடாமல் இருக்கும் நீரிழிவு நோய்,உயர் குருதி அமுக்கம், அதிகரித்த உடற்பருமன்,...
Loading posts...

All posts loaded

No more posts