குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் : வட.மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்

யாழில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொதுமக்களும் தங்களின் ஆதரவினை முழுமையாக வழங்க வேண்டுமென வட.மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்ணான்டோ பொதுமக்களிடம் இன்று (சனிக்கிழமை) கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த செயற்பாட்டுக்கு மக்களும் தங்களது முழு பங்களிப்பினை வழங்குவார்களாயின் குற்றச் செயல்களுடன்... Read more »

நாளையதினம் வடக்கில் வைத்திய சேவைகள் முடக்கம்?

யாழ். போதனா வைத்தியசாலை நீங்கலாக யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பிராந்தியத்திற்குட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய்ப்பிரிவு சேவையாற்றி வருகின்றது. குறித்த வைத்தியசாலையில்... Read more »

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம்!!! : பிரதமர்

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.... Read more »

நிற­மூட்­டப்­பட்ட போலிப் பருப்பு சந்தைகளில் தாராளம்!! பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்­க­ளுக்கு முறை­யி­டு­மாறு அறிவுறுத்தல்!!

நிற­மூட்­டப்­பட்ட தர­மில்­லாத பருப்பு வகை­கள் சந்­தை­யில் விற்­பனை செய்­யப்­ப­டு­வது தெரி­ய­வந்­துள்­ளது என்று பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்­கள் சங்­கம் தெரி­வித்­துள்­ளது. இவ்­வா­றான பருப்பு வகை­கள் இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தில் விற்­பனை செய்­யப்­பட்­டது தற்­போது அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தப் பருப்பை கழு­வும் போது நீர் சிவப்பு நிற­மாக மாறு­வ­து­டன் வேக­வைக்க... Read more »

இருதய நோய் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் இருதய நோய் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் இருதய நோய் காரணமாக 24 மணித்தியாலங்களுக்குள் 150 பேர் வரை உயிரிழக்கின்றனர். வருடத்திற்கு... Read more »

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிராக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்புஎதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட வைத்தியர்களுடன் தொடர்பற்ற அரசாங்கத்தின் உடன்படிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்... Read more »

சிறுவர்கள் மத்தியில் வாய்புற்று நோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை!

சிறுவர்கள் மத்தியில் வாய்புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர் பபா பலிஹவடன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகையிலை மற்றும் பாக்கு சார்ந்த உற்பத்திகளின் பாவனை அதிகரித்துள்ளமைக காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

போலி வைத்தியர் குறித்து எச்சரிக்கை!

கிளிநொச்சி – அக்கராயன் பிரதேசத்தில் நடமாடுகின்ற போலி வைத்தியரொருவர் தொடர்பில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென, அக்கராயன் பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த நபர், அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் வைத்தியராகப் பணியாற்றாத நிலையில், அந்த வைத்தியசாலையில் தான் பணியாற்றுவதாகக் கூறி, கிராம மக்களிடம்... Read more »

இனி இணையம் ஊடாக இ.போ.சபை பேருந்துக்கான முற்பதிவை மேற்கொள்ளலாம்

இந்த திட்டத்தை இலங்கை போக்குவரத்துச் சபை தனது இணையத்தளம் ஊடாக நேற்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. பயணிகள் தாம் பயணிக்க விரும்பும் மாவட்டத்தைத் தெரிவு செய்து தமது ஆசனத்தை முற்பதிவு செய்து கொள்ளலாம். கட்டணத்தை இணையம் ஊடாக செலுத்தும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இணையத்தள முகவரி வருமாறு:... Read more »

புகைப்பரிசோதனை சான்றிதழை விட்டுச் சென்றால் ரூபா 500 தண்டம்!!

வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் 33 தவறுகளுக்காக சம்பவ இடத்திலேயே விதிக்கப்படும் தண்டப்பணம் நேற்று 15ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் அதிகரிக்கப்படுகின்றன. வாகான புகைப் பரிசோதனைச் சான்றிதழை எடுத்துச் செல்லத் தவறினால் 500 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என புதிய போக்குவரத்து விதியும்... Read more »

போக்குவரத்து விதி மீறல்கள் மீதான தண்டப் பணம் 15ஆம் திகதி முதல் உயர்வு

வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் 33 தவறுகளுக்காக விதிக்கப்படும் தண்டப்பணம் இந்த மாதம் 15ஆம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வாகன போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார். வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்துவதற்கான... Read more »

வடக்கில் இந்தியாவின் அவசர அம்புலன்ஸ் சேவை ஆரம்பம்!

இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் வடக்கில் அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். குறித்த சேவை எதிர்வரும் 21 ஆம் திகதி வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தவகையில் வடமாகாணத்திற்கு 20... Read more »

பொதுமக்களுக்கு தேர்தல் திணைக்களம் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளர்கள் தமது வாக்குரிமை பத்திரத்தை பூரணப்படுத்தி கிராம சேவையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென தேர்தல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலின்போது தமது வாக்குரிமையை உறுதிசெய்யும் பொருட்டு குறித்த வாக்குபத்திரத்தை விரைவாக பூரணப்படுத்தி கையளிக்குமாறு தேர்தல் திணைக்களம்... Read more »

சுழிபுரம் சிறுமிக்கு நீதிகோரி நாளை கடையடைப்பு

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட 6 வயதுச் சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி நாளை யாழ்ப்பாணத்தில் முழுக்கடையடைப்பை நடத்த அனைவரையும் ஒத்துழைக்குமாறு அந்தப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுழிபுரம் பிரதேச மக்கள் மற்றும் மாணவர்கள் தற்போது வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், நாளை... Read more »

தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியும்!

போக்குவரத்து விதிமீறலுக்கான தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியுமென போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர். போக்குவரத்து விதி மீறலுக்கான தண்டப் பணத்தை 14 நாட்களுக்குள் தபாலகங்களில் செலுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. எனினும் தபால் ஊழியர்கள் கடந்த எட்டு நாட்களாக முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக... Read more »

வடக்கு பட்டதாரிகளுக்கு அவசர அழைப்பு

திர்வரும் 20/06/2018 புதன்கிழமை காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலகம் முன்பாக ” அபிவிருத்தி உதவியாளர் நியமனம் ” தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் அபிவிருத்தி உதவியாளருக்கான நேர்முகத்தேர்வை எதிர் கொண்ட வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளை... Read more »

ஓட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் வருகிறது!

முச்சக்கர வண்டிகள் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்திலேயே பயணிக்க முடியும் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளுடனான போக்குவரத்துத்து விதிமுறைகள் இந்தவாரம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. “இந்த ஆண்டின் முதல் 120 நாள்களில் முச்சக்கர வண்டி சாரதிகளின் பொறுப்பற்ற சாரதியத்தால் 117... Read more »

இளைஞர்கள் விழிப்படைந்தால் குற்றச்செயல்களை முற்றாக கட்டுப்படுத்த முடியும்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத் தக்கது. இளைஞர்கள் விழிப்படைந்தால் குற்றச்செயல்களை முற்றாக கட்டுப்படுத்த முடியும்” இவ்வாறு வடக்கு மாகாண சிறப்பு பொலிஸ் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்தார். குற்றச்செயல்களை... Read more »

நல்லூர் போராட்டத்துக்கு அணிதிரள இந்துக்களுக்கு சைவ மகா சபை அழைப்பு!

இந்துமத விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமையை எதிர்த்து இன்று (13) புதன்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. அரசால் இந்து மக்கள் அவமதிக்கப்பட்மையைக் கண்டித்து அகில இலங்கை சைவ மகா சபையால்... Read more »

வாக்காளர் பெயர்ப் பதிவு படிவத்தை கையளித்துவிட்டீர்களா?

018ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை (பிசி படிவம்) துரிதமாக முழுமை செய்து, கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் செயலகம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை கிராம அலுவலர்கள் தற்போது வீடுகளுக்கு விநியோகித்து வருகின்றனர்.... Read more »