Ad Widget

36 வகை பயிர்ச் செய்கைக்கு 4 சதவீத வட்டியில் 5 லட்சம் ரூபாய்வரை விவசாயக் கடன்

புதிய விரிவான (நவ சபிரி) கிராமிய கடன் திட்டத்தின் கீழ் 4 சதவீத வட்டியின் அடிப்படையில், 36 வகையான பயிர்களை பயிரிடுவதற்காக ரூபா 5 இலட்சம் வரையான வங்கிக் கடன் வழங்கப்படவுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் விடுக்கப்பட்டள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அச வங்கிகள் மூலம் வழங்கப்படவுள்ள இந்தக் கடனின் மீளச் செலுத்தும்...

பாடசாலை மாணவர் வாகன, முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் 5ஆயிரம் ரூபா

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வருமானமின்றியிருப்போருக்காக அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேபோன்று பாடசாலை மாணவர் வாகன சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனிடையே, பாடசாலை விடுமுறை காலத்தில் பாடசாலை...
Ad Widget

சுழற்சி முறையில் நடமாடும் வங்கிச் சேவை இன்று ஆரம்பம்!! எந்தவொரு வங்கி அட்டையையும் பயன்படுத்தி மக்கள் நன்மையைப் பெற்றுக்கொள்ள முடியும்!!

யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் நடமாடு வங்கிச் சேவையை ஹற்றன் நஷனல் வங்கி இன்று (ஏப்ரல் 14) செவ்வாய்க்கிழமை தொடக்கம் ஆரம்பித்துள்ளது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வங்கிகளுக்குச் சென்று பணத்தை மீளப்பெற முடியாதவர்களுக்கு வசதியாக இந்த நடமாடும் பணம் மீளப்பெறும் சேவையை நடத்துவதாக வங்கியின் வடபிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்திற் கொண்டு...

நாளை மாலை 6 மணிவரை வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டாம்!!!

காவல் துறை ஊரடங்கு உத்தரவினை மீறுகின்றவர்களை கைது செய்வது தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று மாலை 6 மணிமுதல் நாளை மாலை 6 மணிவரை சுமார் 24 மணித்தியாலங்கள் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி காவல் துறை மா அதிபர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். காவல் துறையினரின் இந்த...

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு!!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு...

வடக்கு மாகாணத்தில் 3200 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – அங்கஜன் இராமநாதன் ஏற்பாடு

தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரம்பலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை முழுவதும் தொழிலை இழந்துள்ள தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி...

முகக்கவசம் இன்றி பயணிக்கத்தடை

அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் வீதிகளில் பயணிப்போர் முகக்கவசம் அணிதல் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் வீதிகளில் பயணிப்போர் மற்றும் வாகனங்களில் பயணிப்போர் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில்...

மருத்துவத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு அனுமதி

சுதேச மருத்துவத் துறை உள்பட அனைத்து மருத்துவத் துறை உத்தியோகத்தர்களும் தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக (பாஸ்) பயன்படுத்த முடியும் என்று பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். இந்தத் தகவலை அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அத்தியாவசி சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் தமது அலுவலக அடையாள...

கடுமையான நோய் நிலை ஏற்பட்டால் 1990 அம்புலன்ஸ் சேவையை நாடுங்கள்; வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

தொற்றா நோயினையுடைய நோயாளர்கள் தமது நோய்நிலை தீவிரமடைகின்ற சந்தர்ப்பங்களில் உடனடியாக 1990 என்கின்ற அவசர அம்புலன்ஸ் இலக்கத்தை தொடர்புகொண்டு வைத்தியசாலைக்கு செல்லுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவரால் வெளியிடப்பட்டுள்ள அவசர ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடமாகாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தற்போதைய காலகட்டத்தில் இருதய நோய்,...

வேறு மாவட்டங்களுக்கு செல்வோர் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என எச்சரிக்கை!

ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வோர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும், அவ்வாறானவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தற்போது...

வாகனங்களுக்கான தண்டப்பணம் – செலுத்துவதற்கு நிவாரண காலம்

வாகனங்களுக்கான தண்டப்பணத்தை தபால் அலுவலகங்கள் மூலம் செலுத்துவதற்கான நிவாரண காலத்தை இலங்கை அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்தோடு இதனை செலுத்துவதில் ஏற்படும் தாமத்திற்கான மேலதிக தண்டப்பணமும் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: இலங்கை அஞ்சல் திணைக்களம் 2020.04.08 ஊடக அறிக்கை வாகனங்களுக்கான தண்டப்பணத்தை தபால் அலுவலகங்கள் மூலம் செலுத்துவதற்கான...

தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு!!

நாட்டில் கோரோனா பரம்பலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக தொழிலை இழந்துள்ள தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊரடங்கு அனுமதிக்கு நிறுவனத் தலைவரின் கடிதம் அவசியம்!!

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக தேசிய அடையாள அட்டைப் பிரதி மற்றும் கடமையில் உள்ளார் என்பதனை உறுதிப்படுத்தும் திணைக்களம் – நிறுவனத் தலைவர் அல்லது பிரதித் தலைவரின் முத்திரையிடப்பட்ட ஒப்பத்துடன் கூடிய கடிதம் வைத்திருத்தல்வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித்...

தற்போதைய நடைமுறையை இன்னும் 14 நாட்கள் பின்பற்றினால் இலங்கையிலிருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்கலாம்!!

நாட்டில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை எதிர்வரும் 14 நாட்களுக்கும் பின்பற்றினால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து நோயாளர்களும் இனங்காணப்படுவர். அவர்கள் அனைவருக்கும் முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு குணப்படுத்தப்பட்டால் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை முற்றாக ஒழிக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். முதலாவது இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியின் படையினரால் சிலாபம்...

அனைத்து மருந்தகங்களையும் நாளை திறக்க அனுமதி!!

நாடுமுழுவதும் உள்ள மருந்தகங்களை நாளை (ஏப்ரல் 9) வியாழக்கிழமை திறப்பதற்கான அனுமதியை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை அனைத்து மருந்தகங்களும் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கடுமையான நோய்களுக்குள்ளானோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும்; அச்சமடையத் தேவையில்லை – பணிப்பாளர்

கடுமையான நோய்ப் பாதிப்புக்குள்ளாகியவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும். கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தனியான பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். எனவே நோயாளர்களைப் பராமரிப்பதற்கு ஏனைய விடுதிகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். “எனவே பொது மக்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்தால்...

வட்டுக்கோட்டையில் அம்புலன்ஸ் வருவதற்கு தாமதம்!! ஒருவர் உயிரிழப்பு!!

வட்டுக்கோட்டை பகுதியில் உயிருக்கு போராடி ய நோயாளி ஒருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நோயாளர் காவு வண்டி தாமதித்த தால் நோயாளி உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். சமகால நிலைப்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு நடைமுறையில்...

19 மாவட்டங்களில் வியாழனன்று 10 மணிநேர ஊரடங்கு தளர்வு

கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். ஏனைய 19 மாவட்டங்களிலும் வரும் ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு...

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் – அஜித் ரோஹண!

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “யாருடன் எல்லாம் பழகினோம் என்பதை தயவு செய்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். விஷேடமாக மேல் மாகாணத்தின் கொழும்பு களுத்துறை,...

நாட்டில் இன்சுலின் பற்றாக்குறை!!

தற்போது நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குள் இன்சுலின் பற்றாக்குறை இருப்பதாக அனைத்து இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஜெயந்த பண்டார, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இன்சுலின் பயன்படுத்தப்படுகின்றது என்றும் இதற்கு அரச மருத்துவமனைகள் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறினார். இன்சுலின்...
Loading posts...

All posts loaded

No more posts