தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மூன்று வருடத்திற்குள் தீர்வு: சுவாமிநாதன்

இன்னும் மூன்று வருடத்திற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைத்துவிடுமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை நேற்று (புதன்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அவர் மேலும்... Read more »

இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றம் -பொ.ஐங்கரநேசன்

என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த குழு தனது அறிக்கையில் நான் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவோ, இலஞ்சம் வாங்கியதாகவோ, ஊழல் புரிந்ததாகவோ எங்கும் குறிப்பிடவில்லை. இவையெவையும் நிரூபிக்கப்படவில்லை என்று தங்களது அறிக்கையில் தெரிவித்திருக்கும் விசாரணைக்குழு, கடைசியில் இதற்கு முரணான வகையில் என்னைப் பதவி நீக்கம் செய்ய... Read more »

மகாத்மாக்களின் மொழியைப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளாததாலேயே கிட்டுகள் வேறு மொழியில் பேசத் தொடங்கினார்கள் : பொ.ஐங்கரநேசன்

மகாத்மா காந்தி அகிம்சை மொழியில் பேசினார். அதனை இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் புரிந்து கொண்டார்கள். அவரைப் பின்பற்றி, ஈழத்துக் காந்தி செல்வநாயகமும் சிங்கள ஆட்சியாளர்களுடன் அகிம்சை மொழியிலேயே பேசினார். ஆனால், மகாத்மாக்களின் மொழியைப் சிங்களப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்த கொள்ள மறுத்தார்கள். இதனால்தான்... Read more »

பிழை­யான அத்­தி­வா­ரத்தில் சரி­யான கட்­டடம் காலா­கா­லத்தில் நிறுவப் படலாம் என்று எண்­ணு­வ­து ­ம­ட­மை; வடக்கு முதல்வர் சி.வி

நாங்கள் கோருவதில் எதனையுமே தராது ஒரு தீர்வைப் பெற எத்தனிப்பதே எமது கொழும்புப்பார்வையாகும். எமது இனப்பிரச்சினையைத் தீர்க்க கொழும்பின் ஜன்னல், கொழும்புப் பார்வை என்பன ஒருபோதும் உதவாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்­பாணம் மத்­திய கல்­லூ­ரியில் ஆறு­மு­க­நா­வலர் சிலை திறப்பு விழா... Read more »

மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்தவதில் ஆசிரியர்களும்,அதிபர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்

மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்தவதில் ஆசிரியர்களும்,அதிபர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ் தீவக வலய பாடசாலைகளுக்கான E Learning கற்றல் இறுவட்டுக்கள் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ் தீவக வலய அதிபர்கள்,கணித,விஞ்ஞான... Read more »

மத்திய- மாகாண அரசுகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: வடக்கு ஆளுநர்

நாட்டினதும், மக்களினதும் அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கமும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என வட. மாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் தெரிவித்த அவர்,... Read more »

அரசியல்வாதிகள் என்ன கூறினாலும் தமிழர்கள் நல்லவர்கள்: வடக்கு ஆளுநர்

தமிழ் மக்களின் சமயம், கலாசாரம் மட்டுமன்றி சிங்கள மக்களின் சமயம் மற்றும் கலாசாரமும் இந்தியாவிலிருந்தே வந்ததென குறிப்பிட்டுள்ள வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே, அரசியல்வாதிகள் என்ன கூறினாலும் தமிழ் மக்கள் நல்லவர்கள் என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத்... Read more »

ஆசிரிய நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பில் அதிரடி நடவடிக்கை : ஜனாதிபதி

ஆசிரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கையை இவ்வாண்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். புதிய கொள்கைக்கமைய எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியகள் மேலதிகமாக இருக்க முடியாதென்பதுடன், மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற வேண்டுமென சுற்றறிக்கை வெளியிடப்படும்... Read more »

வடமாகாணத்தைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உண்டு! : இராதாகிருஷ்ணன்

தமிழர்கள் செறிந்துவாழும் வடமாகாணத்தை நாம் நழுவவிட்டால் ஏனைய மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கும் சாத்தியக்கூறு உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரன் மதிப்புக்குரிய ஒரு தலைவர், அதேபோல் இரா.சம்பந்தனும் மரியாதைக்குரியவர். இந்நிலையில் இவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த பல்வேறு... Read more »

அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை மக்கள் நலனுக்காக முறையாக பயன்படுத்துவது அவசியம் : ஜனாதிபதி

உரிய அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மக்கள் நலன்கருதி முறையாக செலவளிப்பது அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கில் அமுலாகும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் எதிர்கால திட்டங்கள் போன்றவை பற்றி ஆராயும் நோக்கில் யாழ்... Read more »

வடக்கில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பசுபதிபிள்ளை

எமது மக்களை அழிக்கும் நோக்குடனேயே கடன் வழங்கும் நிறுவனங்கள் எமது பிரதேசத்துக்குள் நுழைந்திருக்கின்றன அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் உடனடியாக வடக்கு மாகாணசபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு. பசுபதிபிள்ளை தெரிவித்தார். நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பொதுச் சந்தை... Read more »

தூர இடங்களில் சென்று கற்பிக்காதவர்களின் நியமனம் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்படும் : வடக்கு முதலமைச்சர்!

நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் அனைவரும் தூர இடங்களில் சென்று பணியாற்றவேண்டும். இல்லையேல் அவர்களது நிரந்தர நியமனம் மீள் பரிசீலனைக்குட்படுத்தப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கணித, விஞ்ஞான, தொழிநுட்ப பட்டதாரிகள் 212 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்.மத்திய கல்லூரி சபாலிங்கம்... Read more »

அதிகார வரம்பை மீறுவது சட்டத்தின் பார்வையில் குற்றமானாலும் எமது சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் அரசியல்வாதிகளுக்குத் தவிர்க்க முடியாது : பொ.ஐங்கரநேசன்

மாகாணசபைகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விடயங்களில் அதிகாரம் தரப்படவில்லை. அந்தவகையில்,மத்திய அரசுக்குரிய சூழல் பாதுகாப்பு விடயங்களில் மாகாண அமைச்சு தலையிட முடியாது என்று சொல்லப்படுகிறது. எமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், இயற்கை வளங்களைப் பேணுவதில் அதிகார வரம்பை மீறுவது அல்லது அதிகாரங்கள் இல்லாத விடயங்களில் தலையிடுவது சட்டத்தின்... Read more »

சம்பந்தரும் விக்கியும் தமிழினத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக மாற வேண்டும் : சிவாஜிலிங்கம்

“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், வட. மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவும் எங்களுடைய இனத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக மாற வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல்... Read more »

பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று எமது மனங்களிலேயே இருக்கிறது :வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

பிளாஸ்ரிக் பைகளின் சொகுசுக்குப் பழக்கப்பட்ட எங்களுக்கு அவற்றைக் கைவிடுவதற்கு மனம் இல்லாமல் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று சந்தைக்கு வராமல் அவற்றைக் கைவிட முடியுமா என்றும் பலர் கேட்கிறார்கள். பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று வேறு எங்கேயும் இல்லை. எமது மனங்களில்தான் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளைக்... Read more »

அழிவுக்கு காரணமானவர்களை அடையாளம் காணும் பொறிமுறை வேண்டும்: தவராசா

முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பண்பாட்டு அழிப்பு முதல் அதன் பின்னரான இன அழிப்பு வரை, அவற்றை மேற்கொண்டவர்களை அடையாளம் காண்பதற்கான பொறிமுறைகளேனும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். யாழ். பொது நூல் நிலையம்... Read more »

இராணுவத்தால் வடக்கில் பெண்கள் படும் அவலத்தை நாம் அறிவோம்: மாவை

வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் மத்தியில் பெண்கள் படும் அவலத்தை அறிந்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். தென்னிலங்கையில் இருந்து ஆடை... Read more »

கடந்த ஆட்சியில் இருந்த அடக்குமுறை நல்லாட்சியில் இல்லை: விஜயகலா

நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் காணப்பட்டிருந்த அடக்குமுறை ஆட்சியானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற பெண்கள் வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்களில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்... Read more »

கடந்த ஆட்சிக்கால அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது: சம்பந்தன்

கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சகல இனங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.... Read more »

சாதனைகளே இனத்திற்கு பெருமை: நீதிபதி இளஞ்செழியன்

பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்கள் சிறந்த சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் அந்த சாதனைகளே இனத்திற்கும் மொழிக்கும் பெருமை தேடித் தரும் என்றும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற கொழும்பு... Read more »