புலிகளின் யோசனையை ஏற்றிருந்தால் ரணில் ஜனாதிபதியாகியிருப்பார்!

விடுதலைப்புலிகளின் இடைக்கால அரசு யோசனையை ஏற்றிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005 ஆம் ஆண்டே ஜனாதிபதியாகியிருப்பார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே... Read more »

மக்களின் நலனுக்காக ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டும்: சம்பந்தன்

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் தொடர்ந்தும் இணைந்து செயற்படவேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்... Read more »

பேதங்களற்ற வகையில் அரசியல் தீர்வு: பிரதமர்

எந்தவொரு நாட்டு பிரஜைக்கும் துளியளவேனும் பாகுபாடு காட்டாத வகையிலான அரசியல் தீர்வொன்றை இந்த நாடாளுமன்றத்துக்குள் அடைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) அரசியல் வாழ்வில் 40 வருடங்களை நிறைவு செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும்... Read more »

ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படும்: ஜனாதிபதி

ஆசிரியர்கள் நல்ல மனநிலையுடன் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் நிறைவுசெய்வதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுராதபுரம் வலிசிங்க சரத்சந்ர மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிட தொகுதியை இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு... Read more »

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது: மஹிந்த சமரசிங்க

மேற்கத்திய நாடுகள் தெரிவிப்பது போன்று வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு சரியானதா என்பது தொடர்பிலும் ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா... Read more »

தொலைக்காட்சி வாங்குவதை விடுத்து நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பொருத்துங்கள்!

“இன்று பலரும், நுண் நிதிக் கடன்களைப் பெற்று, வீட்டில் தொலைக்காட்சிகளையும் டிஸ் அன்டனாக்களையும் பொருத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை விட, வீட்டுக்கொரு வடிகட்டும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பொருத்துவதன்மூலம், சுத்தமான குடிநீரைப் பருகமுடியும்” என்று, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா... Read more »

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மட்டுமே நிரந்தர சமாதானம் ஏற்படும்: இரா.சம்பந்தன்

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டால் மட்டுமே நாட்டில் சமாதானம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது... Read more »

துப்பாக்கிதாரி நீதிபதியைக் கொலை செய்வதற்காகவே வந்தார்: ரெஜினோல்ட் குரே

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர் அவரைக் கொலை செய்வதற்காகவே வந்தார் என வட.மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைப் பிரிவின் ஏற்பாட்டில் சாதாரண தர பரீட்சையில் அதி உயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும்... Read more »

கலாசார சீரழிவு மலிந்த ஒரு இனமாக நாம் மாறியுள்ளோம்: வடக்கு முதலமைச்சர்

கலாசார சீரழிவு மலிந்த ஒரு இனமாக நாங்கள் மாறியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கும் விடயம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாவாந்துறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நூலகத் திறப்பு விழாவில் உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

வடமாகாணசபை வினைத்திறன் அற்றதென்று விமர்சிப்பவர்கள் அரசியல் உள்நோக்கத்துடனேயே அதைச் செய்கிறார்கள் : பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

வடக்கு மாகாணசபை மூன்றரை வருடங்களைக் கடந்துவிட்ட போதும் ஊழல்கள் செய்ததைத் தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை. பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளதே தவிர வினைத்திறனாகச் செயற்படல்லை என்று சிலரால் மாகாணசபையிலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவர்கள் மக்கள் மத்தியிலும் இதே கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். வடமாகாண சபை வினைத்திறன்... Read more »

அத்தியாவசிய சேவைகளுக்கு தடை ஏற்படுத்துவது ஜனநாயக விரோத செயல் : இரா. சம்பந்தன்

அத்தியாவசிய சேவைகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவது ஜனநாயக விரோத செயலென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அத்தியாவசிய மக்கள் சேவைகள் சட்டத்தின் கீழான ஏற்பாடுகள் மீதான விவாதத்தில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த சேவைகளை முடக்குவதன் மூலம் அரசாங்கத்தை... Read more »

தீர்வு கிடைக்கும் என்று நம்பியே இந்த ஆட்சியைக் கொண்டு வந்தோம்: மாவை

நாம் இந்த ஆட்சியை கொண்டு வந்த பொழுது எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றே நம்பியிருந்தோம் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். வவுனியாவில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்... Read more »

வட மாகாண சபையின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு : எதிர்க்கட்சித் தலைவர் ஆற்றிய உரை

கௌரவ அவைத் தலைவர் அவர்களே, எமது சபையின் நூறாவது அமர்வுக்கு முன்பாக இன்றைய 99வது அமர்வில் வட மாகாண சபையின் ஆயுட் காலத்திற்கு இன்னும் பதினைந்து மாதங்களே இருக்கின்ற நிலையில் கடந்த கடந்த மூன்று வருடம் 9 மாதத்தில் ஒட்டு மொத்த வட மாகாண... Read more »

ஓட்டிசம் வடக்கு இளம் பராயத்தினரிடையே அதிகரிப்பதாக முதல்வர் கூறுகிறார்

ஓட்டிசம் என்பது பிள்ளைகளின் விருத்தியோடு தொடர்புடைய உளத் தொழிற்பாடுகளை பாதிப்படையச் செய்கின்ற ஒரு நிலையாகும் என வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அப்பலோ வைத்தியசாலையில் ஐந்து... Read more »

இளைஞர் யுவதிகள் சமூக வலைத்தளங்களில் காட்டும் ஆர்வம் தேர்தல்களில் இல்லை!

நாட்டின் இளைஞர் யுவதிகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு பிரச்சினைகள் விடயத்தில் ஆர்வம் காட்டுகின்ற போதிலும் தேர்தல்களில் வாக்களிப்பதில்லை என ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார். கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிறுவனத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை)... Read more »

வித்தியா படுகொலை போன்றதொரு சம்பவத்தை இனியும் அனுமதியோம்: ஜனாதிபதி

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவம் போன்ற நிகழ்வுகள் துயரம் மிகுந்தவையென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாறான சம்பவங்களை இனியும் அனுமதிக்க முடியாதென தெரிவித்துள்ளார். நாட்டை மிரட்டும் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவையாக இவ்வாறான செயல்கள் அமைந்துள்ளதென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இவ்வாறான பல குற்றச்செயல்கள் கடந்த... Read more »

வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டும்: இராதாகிருஸ்ணன்

2025 ஆம் ஆண்டில் மலையத்தில் வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கூறியுள்ளார். லிந்துல்ல பம்பரகல்ல தோட்டம் அப்பர்கிரன்லி பிரிவில் 30 வீடுகளுக்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இதனைத்... Read more »

கலைத் துறையைக் கற்று வேலையில்லாத பிரச்சினையில் சிக்கிக் கொள்கின்றனர் : மாவை

“அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டுமானால், தனியே அரசியல் ரீதியிலான விடுதலை மட்டுமல்லாது, போதைவஸ்தில் இருந்தும் மதுபாவனையில் இருந்தும் எங்கள் குடும்பங்கள் விடுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இந்த மாணவ சந்ததி, இவற்றைக் கிரகித்துக் கொண்டு, ஒழுக்கமுள்ள சந்ததியாக, எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு பெற்றோர்கள்... Read more »

ஒற்றையாட்சி, சமஸ்டி சொற்கள் இல்லாமல் அதிக கூடிய உறுதியான அதிகார பகிர்வு : சம்மந்தன்

ஒற்றையாட்சி எனும் சொல்லோ அல்லது சமஸ்டி எனும் சொல்லோ இல்லாமல் அதி கூடிய உறுதியான மத்திய அரசினால் மீளப்பெறப்பட முடியாத அதிகார பகிர்வு புதிய அரசியல் சாசனத்தின் மூலம் கொண்டுவரப்படுமானால் அதனை நாங்கள் பரிசீலிப்போம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான... Read more »

எதிர்காலத்தில் கிளிநொச்சி முக்கியம் ஒரு மாவட்டமாக திகழும்: சம்பந்தன்

கிளிநொச்சி மாவட்டம் எதிர்காலத்தில் ஓர் முக்கியம் இடம்பெற்ற மாவட்டமாக திகழும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி வைர விழாவும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்... Read more »