பிரபாகரன் ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன்! : கிளிநொச்சியில் பாரதிராஜா

நிகழ்காலத்தில் வாழ்ந்த ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன் யாழ். மண்ணில் பிறந்தான். அவன் தமிழர்களுக்கு ஓர் அடையாளத்தினை சொல்லிவிட்டுச் சென்றான் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.... Read more »

மகிந்த என்ற பூச்சாண்டியைக் காட்டி தமிழர்களை வாய்மூடச்சொல்கிறது மைத்திரி அரசு! :பொ.ஐங்கரநேசன்

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைவு, தமிழ்மக்களின் தாயகம்,தேசியம், சுயநிர்ணயம் ஆகிய அரசியல் வேணவாக்களை மிக நாசுக்காக நிராகரித்துள்ளது. மாறாக, நாட்டில் ஏற்கனவே கோலோச்சுகின்ற பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை உறுதி செய்வதாகவே அமைந்திருக்கிறது. தமிழ்மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்தால் சிங்கள இனவாதத்தைத் தூண்டி மகிந்த ராஜபக்ச மீண்டும்... Read more »

பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமே இந்து மதம் : அமைச்சர் விஜித் விஜயமுனி

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முதலிடம் கொடுத்து பௌத்த மதத்தை காப்போம் அதுபோன்று ஏனைய மதங்களுக்கும் பாதுகாப்பும் மதங்களை போதிப்பதற்கான உத்தரவாதமும் வழங்கப்படும் என்று நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி செய்சா தெரிவித்தார். மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின்... Read more »

அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கி தண்டித்துவிட துடிக்கிறது சிறீலங்கா அரசு!! : ஐ.நா.ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார்

தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கி தண்டித்துவிட வேண்டுமென்ற நோக்கிலேயே சிறீலங்கா அரசு செயற்படுகின்றது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான அவையில் அம்பலப்படுத்தினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் விடையம் 5... Read more »

பல்கலைக்கழக பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகையில் வீழ்ச்சி!

பல்கலைக்கழகங்களுக்கான பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகை, கடந்த காலங்களை விடவும் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்திருப்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்துள்ளார். இந்த வீழ்ச்சிக்கு, தகவல் தொழில்நுட்பத்தை மாணவர்கள் தவறாக பயன்படுத்துவதும் காரணமாக அமையலாம் என்றும் அவர் கூறினார். இலங்கை பரீட்சைத்... Read more »

புதிய அரசியலமைப்பு 13ஆம் திருத்தத்தைவிடவும் மேம்பட்டதாக அமைந்தால் வரவேற்போம்

தமிழ் மக்கள் தாம் இலங்கையர்களாகவும், தமிழர்களாகவும் இருப்பதற்காக உணர்வுகளுடன் இருந்ததை முன்னாள் தமிழ்த் தலைவர்களும், சிங்களத் தலைவர்களும் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளாததன் விளைவாகவே எமது நாடு வெறுக்கத்தக்க வன்முறைகளையும், பிரச்சினைகளையும் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... Read more »

பிளவுபடாத ஐக்கிய இலங்கை என்ற உறுதியான கட்டமைப்புக்கு அமைய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் : சம்பந்தன்

பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத ஐக்கிய இலங்கை என்ற உறுதியான கட்டமைப்புக்கு அமைவாக, யாவரும் சுயமாக விரும்பி ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என எதிர்க கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று... Read more »

இலங்கையில் பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை: சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

இலங்கை அரசியலில் பெண்களுக்கான சந்தர்ப்பம் உரிய முறையில் வழங்கப்படுவதில்லையென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே... Read more »

சிறீலங்காவில் இடம்பெற்ற குற்றங்களை விசாரிக்க சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்குப் பரிந்துரை செய்ய வேண்டும் : ஐ.நாவில் கஜேந்திரகுமார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரின் பொது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை. இந்த அறிக்கையானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்... Read more »

நல்லிணக்கத்திற்கு உதவுங்கள்: உலக நாடுகளிடம் மைத்திரி கோரிக்கை

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், ஜனநாயக சுதந்திரத்தை மறுசீரமைத்தல், சட்டம் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டுதல் போன்றவற்றிற்காக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் செயற்பாடுகளுக்கு சர்வதேச சமூகம் பூரண ஆதரவை வழங்கவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபை அமர்வில் நேற்று (புதன்கிழமை) காலை... Read more »

வடக்கு, கிழக்கு இணைப்பை சம்மதிக்க மாட்டோம் : எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கு, நாங்கள் ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம். இந்த விடயத்தில், நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம்” என்று, புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். “கிழக்கு, ஓர் இனத்துக்குச் சொந்தமானது அல்ல. அதேபோன்று வடக்கும் ஓர்... Read more »

புத்தூர் மக்கள் போராட்டத்தை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்

புத்தூர் மேற்கு பகுதியில் உள்ள இந்து மயானத்தை அகற்றக் கோரி அப்பகுதியில் முன்னெடுத்து வரும் சாத்வீக போராட்டத்துக்கு, வட மாகாண முதலமைச்சர் நேற்று (17) விஜயமொன்றினை மேற்கொண்டார். அத்துடன் அப்பகுதியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மயானத்தை பார்வையிட்ட பின் பொதுமக்கள் மத்தியில் தனது நிலைப்பாடு தொடர்பில்... Read more »

விடுதலைப்புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வாகக் கட்டமைப்புக்கள்: அங்கஜன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் நல்ல நிர்வாகக் கட்டமைப்புக்கள் காணப்பட்டன என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சாரமண்டபத்தில் சர்வதேச தொழிலாளர் சங்கமும் ஸ்ரீலங்கா சுதந்திர தொளிலாளர் சங்கமும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வுக்... Read more »

சம்பந்தன் தொடந்தும் இரட்டைவேடம் போடமுடியாது! : சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ச்சியாக இரட்டைவேடம் போடமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம், தண்ணீரூற்றில் சமூகசேவையாளர்கள் 63பேரைக் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு... Read more »

2020 இல் அரச ஊழியர்களுக்கான சம்பளம் பன்மடங்காக அதிகரிக்கும்!

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டளவில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் பன்மடங்காக அதிகரிக்கும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இதன்படி விசேட வைத்திய நிபுணர்களின் அடிப்படை சம்பளம் 1 இலட்சது 20 ஆயிரம் ரூபாவாகவும் சாதாரண... Read more »

சிநேகம் பேசி ஏமாற்றினார் மஹிந்த ; முதலமைச்சர் சி.வி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தன்னுடன் நட்பு பாராட்டுவது போலவும் அன்புடன் பேசுவது போலவும் வெளிப்படுத்தி, தான் விடுத்த கோரிக்கைகளைக் கணக்கிலெடுக்காமல் உதாசீனம் செய்தார் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளராக குசல் பெரேராவின், “மஹிந்த – சிங்கள... Read more »

வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு புதிய வழி: இராதாகிருஷ்ணன்

வடக்கையும் தெற்கையும் விளையாட்டுத்துறையின் ஊடாக இணைக்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வடக்கு, தெற்கு... Read more »

133 மில்லியன் வரிப்பணத்தை வட மாகாணசபைக்கு விடுவித்துக் கொடுங்கள் :நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி

இலங்கையில் முத்திரைத் தீர்வைக் கட்டளைச் சட்டம், முதல் முதலில் 1909ஆம் ஆண்டில் சட்டமாக்கப்பட்டது. அதன் பிறகு பாராளுமன்றம் 1982ஆம் ஆண்டின் முத்திரைத் தீர்வைச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தின் மூலம் சாதனங்களுக்கும் (Instruments), ஆவணங்களுக்கும் (Documents) அவற்றின் தொடர்பாகவும் தீர்வைகள் அறவிடப்பட்டன. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின்... Read more »

களுத்துறை சிறை தாக்குதலில் நான் ஒரு கண்பார்வையை இழந்தேன் : நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!

எனது தன் நம்பிக்கையும், நான் தப்பிப் பிழைக்க வேண்டும் என்று எமது மக்கள் எனக்காக செய்த பிராத்தனையும், வைத்தியவர்களின் அக்கறை மிகுந்த வைத்தியமும் என்னைக் காப்பாற்றியது. என்னை நாகொட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்த சிங்கள மொழி பேசுகின்ற நிபுணத்துவ... Read more »

உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு! : சம்பந்தன்

”உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வைக் காண்பதற்கே முயன்று கொண்டிருக்கின்றோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம்... Read more »