சிங்களவர்கள் வெற்றி என்ற இறுமாப்பை களைய வேண்டும் என்கிறார் : ரெஜினோல்ட் குர்ரே

அரசியல் அமைப்பை கொண்டு இன ஒற்றுமையை கட்டியெழுப்புவதை விட பௌத்த தர்மத்தின் மூலம் சாந்தி சமாதானத்தினை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குர்ரே தெரிவித்துள்ளார். புத்தூர் மடிக்கே பஞ்ச ஹீத வித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட... Read more »

புதிய அரசியலமைப்பிற்கு மஹிந்த இடையூறாக இருக்க கூடாது: சம்பந்தன் கோரிக்கை!

இழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கான ஒரு மார்க்கமாக அரசியலமைப்பினைப் பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வரவுசெலுவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மஹிந்தவிடம்... Read more »

தமிழரசுக் கட்சி எடுத்த முடிவானது, தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும்!! : சுரேஷ் பிரேமசந்திரன்

“புதிய அரசமைப்புத் தொடர்பில் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவானது, தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும். அதனால் இனியும் அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது. அவர்கள் சின்னத்தில் (வீட்டுச் சின்னம்), தேர்தலில் போட்டியிடவும் முடியாது” என, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.... Read more »

தமிழ்த் தலைவர்களின் செயற்பாட்டால் அழிவுப் பாதையில் தமிழ் இனம்!! : சி.வி. விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டிகள், முரண்பாடுகள் காரணமாக, ஒட்டுமொத்த தமிழினமும் அழிவுப் பாதையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதென, வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பொதுநூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று (12) காலை இடம்பெற்ற, தமிழ்... Read more »

இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய கல்வித்திட்டம்

பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய கல்வித்திட்டம்அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஹம்பாந்தோட்ட சர்வதேச துறைமுகம் எக்காரணம் கொண்டும் சீனாவுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மாத்தறை ஒருங்கிணைப்பு அழுவலகத்தில்... Read more »

புதிய வரவு செலவுத்திட்டம் இளைஞர்களுக்கு இனிப்பானதாக அமையும்! : மங்கள

“2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம், இளைஞர்களுக்கு இனிப்பானதாக அமையும்” என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இணைய ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல், ஊடக அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றபோதே, அமைச்சர் மேற்படி தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “கொடும்... Read more »

தேசிய தலைவர் எம்முடனேயே இருக்கிறார்! : புலனாய்வுத் துறை தளபதி அன்பு தெரிவிப்பு

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் எங்கள் மத்தியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாக, விடுதலை புலிகளின் திருமலை மாவட்ட புலனாய்வு துறை தளபதிகளில் ஒருவராக இருந்த அன்பு என அழைக்கப்படும் இன்பராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை), புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளினால் நடத்தப்பட்ட... Read more »

அழிவை நோக்கிய பயணம் : யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு விட்டது!!

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதம் தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏதும் நிகழுமாக இருந்தால் பேரனர்த்தம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (புதன்கிழமை) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.... Read more »

சர்வகட்சி மாநாடு சர்வதேசத்தின் நன்மதிப்பை இழக்கச்செய்யும்! : மாவை

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சர்வகட்சி மாநாடு உள்ளிட்ட மூன்று விடயங்களை செயற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை, பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் செயற்பாட்டை இழுத்தடிக்கும் சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற... Read more »

அரசியல் அமைப்பு குறித்து சர்வகட்சி, சர்வமத மாநாடு : ஜனாதிபதி

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் அங்கத்துவத்துடனான சர்வகட்சி மற்றும் மதத்தலைவர்கள் உள்ளடங்கிய சர்வமத மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக காணப்படும் சில தவறான அபிப்பிராயங்களை நீக்கும் பொருட்டு... Read more »

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரச துறையில் தொழில்வாய்ப்பு

திறமையான விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரச துறையில் தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பத்தரமுல்ல அப்பேகம வளாகத்தில் நேற்று இடம்பெற்ற சர்வதேச வெள்ளைபிரபு தின நிகழ்வில் உரையாற்றிய சமூக வழுவுட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க இந்த விடயத்தை... Read more »

இன்னும் 20 வருடங்களில் தமிழிஸ் என்ற புதிய மொழி உருவாகும்! : முதலமைச்சர் சி.வி கவலை

இன்னும் இருபது வருடங்களில் தமிழ் மொழி மறைந்து தமிழிஸ் என்ற புது மொழி வழக்கத்திற்கு வந்துவிடும் நிலை உருவாகியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.... Read more »

தவறான அரசியல் தீர்மானமே பிரபாகரனை உருவாக்கியது: ஜனாதிபதி

தேவையான நேரத்தில் சரியான தீரமானங்களை எடுக்கத் தவறியதாலேயே இன முரண்பாடுகள் ஏற்பட்டன. அவ்வாறான தவறான அரசியல் தீர்மானங்களே விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் உருவாக்கியதென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடைபெற்ற தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வில்... Read more »

அடுத்த தீபாவளி ஒளிமயமாய் இருக்கும் என்கிறார் சம்பந்தன்

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டுள்ளதோடு, அடுத்த வருட தீபாவளி பண்டிகை இந்த வருடத்தை விட மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் அமையுமென்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற... Read more »

வடக்கு மாகாணத்தின் கலாசாரம் அபாய நிலையில் இருக்கிறது: சர்வேஸ்வரன்

வடக்கு மாகாணத்தினுடைய அடையாளம், கலாசாரம் என்பன தற்போது அபாய நிலையில் இருப்பதாக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ் வடமராட்சி கரவெட்டி வேதாரணியேஸ்வர வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதம விருந்தினராக கலந்து... Read more »

நீங்கள் உயர்த்தவேண்டியது கறுப்புக் கொடிகளை அல்ல, சமாதானத்திற்கான வெள்ளைக் கொடிகளையே!: ஜனாதிபதி

நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கவே என்னை ஜனாதிபதி ஆக்கினார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்திற்கு வரும் போது, சில பிரச்சினைகள்... Read more »

சமூகப் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்த இளைஞர்கள் முன்வரவேண்டும்: சீ.வீ.கே

சனசமூக நிலையங்களில் இளைஞர்கள் கூட்டாக செயல்படுவது போன்று சமூகப் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்தவும் இளைஞர்கள் அனைவரும் முன்வரவேண்டும் என வட.மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கைதடி மத்தி குமரநகர் சனசமூக நிலையத்தின் 61வது ஆண்டு விழாவில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு... Read more »

அரசியல் கைதிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்: அடைக்கலநாதன்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

போர் பாதித்த சமூகத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க வேண்டியுள்ளது : பொ.ஐங்கரநேசன்

ஆசிரியப்பணி மகத்தானது. அதுவும், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் ஆசிரியப்பணி அதிமகத்தானது. போர் சமூகக் கட்டுமானங்களைப் பாதித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் வகுப்பறையில் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க வேண்டியுள்ளது. தமது கற்பித்தல் கடமைகளுக்கு மேலதிகமாக, பெற்றோர்களது கடமைகளையும் சேர்த்தே மேற்கொள்ள வேண்டியுள்ளது. மனப்பூர்வமாக இந்தப் புண்ணிய... Read more »

அடுத்த தலைமைக்கு வழிவிடுதல் சிறந்த தலைமைத்துவப் பண்பு : ஐங்கரநேசன்

சனசமூக நிலையங்களின் தலைவர்கள் தொடங்கி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரை எங்களிடையே எண்ணற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களிற் பலர் ஆயுட்காலம் முழுவதும் தலைவர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். இயலாத நிலையிலும் பதவியை அடுத்தவர்களிடம் கையளிக்கும் மனப்பாங்கு இவர்களிடம் இல்லை. உண்மையில், அடுத்த தலைமைக்கு வழிவிடுதல்தான் சிறந்த... Read more »