ஜல்லிக்கட்டு போராட்டம் தள்ளிவைப்பு: மெரினா போராட்டக்காரர்கள் 2 மாதம் காத்திருக்க முடிவு

மெரினா போராட்டத்தை தள்ளிவைப்பதாக இளைஞர்கள் அறிவித்துள்ளனர். மேலும், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். முன்னதாக, மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் திங்கள்கிழமை காலை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள்... Read more »

பெண்களின் உடைகளை கிழித்த போலீசார்! மாணவர்கள் குற்றச்சாட்டு

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பெண்களை வெளியேற்ற முயன்ற போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களின் ஆடைகளை போலீசார் கிழித்ததாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி சென்னை மெரினாவில் 7வது நாளாக இளைஞர்கள் மற்றும்... Read more »

மெரினா போராட்டக்களத்தில் உள்ள மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் போலீசார்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்நிலையில், காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்க மறுத்த இளைஞர்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். தற்காலிக தீர்வு... Read more »

தோற்றுப் போனார் ஓ.பி.எஸ்! வெறும் கையுடன் சென்னை புறப்பட்டார்

அலங்காநல்லூர் கிராம மக்கள் கடும் கொந்தளிப்புடன் இருப்பதாலும், ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாலும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் சென்னை திரும்புகிறார். மதுரையில் இருந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட அவர் எதுவும் பலன் தராமல் போனதால் சென்னை புறப்பட்டார். ஜல்லிக்கட்டு இன்று... Read more »

தமிழக மக்களுக்கு மரியாதையை உரித்தாக்குகிறேன்.. தமிழில் வாழ்த்திய சேவாக்

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு, கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார். இரு தினங்கள் முன்பே தமிழர்களின் அறவழி போராட்டம் பாராட்டுக்குறியது என கூறி, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு, சேவாக் தனது ஆதரவை அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று தமிழிலேயே, டிவிட் செய்து ஆதரவு தெரிவித்துள்ளார் சேவாக்.... Read more »

ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து ஓடும் : ஓ.பன்னீர்செல்வம்

நாளை அல்லது நாளை மறுநாள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து ஓடும் என்று தில்லியில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி அங்கு ஐந்தாவது நாளாக மாநிலத்தின் பல பகுதிகளில்... Read more »

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது: மோடி

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது எனவும் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் சந்தித்துப்... Read more »

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இலங்கை அகதிகள் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்குமாறு, தமிழகத்தில் பரவலாக போராட்டங்களும், மத்திய அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், இலங்கை அகதிகளும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.... Read more »

பள்ளிப்பேருந்து மீது லாரி மோதி 24 சிறுவர்கள் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஈடா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த பேருந்து இன்று காலையில் மாணவர்களுடன் வந்து கொண்டிருந்தது. ஆசாத்பூர் கிராமம் அருகே வரும் போது, திடீரென எதிர்பாரத விதமாக எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியதில், பேருந்தில் இருந்த 24க்கும்... Read more »

இலங்கை அகதி தற்கொலை

இந்தியாவின் இராயனூர் அகதிகள் முகாமில் இலங்கை அகதி குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. கரூர் – ராயனூர் இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்தவர் தர்மாகுமார் (31). இவர் ஒரு பெயிண்டராகும். கடந்த சில நாட்களாக... Read more »

எழுச்சி பெறும் மாணவர் போராட்டம்! கொந்தளிக்கும் தமிழகம்!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர் போராட்டம் வரலாறு காணாத வகையில் எழுச்சி பெற்றுள்ளது. இன்று 3வது நாளாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுவான போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சென்னை மெரினாவில் தொடங்கிய சிறு போராட்டம் அலங்காநல்லூரில் பரவி தற்போது மீண்டும் சென்னை மூலமாகவே விஸ்வரூபம்... Read more »

யாழ்ப்பாணத்தில் இந்தியா அமைக்கும் 3000 மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில், 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான உடன்பாட்டில், இந்தியாவும் சிறீலங்காவும் நேற்று கையெழுத்திட்டன. சிறீலங்காவின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி முன்னிலையில், பதில் இந்தியத் தூதுவர் அரிந்தம் பக்சியும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர்... Read more »

இந்தியாவிற்கு படகில் சென்ற இலங்கையர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து படகொன்றில் தமிழகத்தின் தனுஷ்கோடியை அடைந்த இலங்கை இளைஞனை கைதுசெய்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் மாவட்டம், பேசாலைப் பகுதியைச் சேரந்த 36 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். Read more »

40 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர்

தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் தங்கவைக்கபட்டிருந்த இலங்கை அகதிகள் 40 பேர் இன்று இலங்கையை வந்தடையவுள்ளனர். ஐக்கிய நாடுகளிள் அகதிகளுக்காக உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட நடவடிக்கைகையை அடுத்து இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 14 குடும்பங்களை சேர்ந்த இந்த அகதிகள், திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை... Read more »

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு... Read more »

புதுவருட பின்னிரவில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: நால்வர் கைது

புத்தாண்டு பின்னிரவில் வீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை பெங்களுர் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கர்நாடகா மாநிலம் பெங்களுர் நகரில் உள்ள கம்மனஹல்லி பகுதியில், புத்தாண்டு இரவில் வேலை முடிந்து வீடு திரும்பிய... Read more »

அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா இன்று அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொது செயலாளரருமான ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக காலமானார். அதனைத்தொடர்ந்து, புதிய தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.... Read more »

போலி கடவுச்சீட்டுடன் இலங்கையர் இருவர் இந்தியாவில் கைது

போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த இலங்கை பிரஜைகள் இருவர், கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த நிலையில், விமான... Read more »

காற்றழுத்தத் தாழ்வு நிலை : தெற்கு இலங்கை பகுதியில் நீடிப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை தெற்கு இலங்கை பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற இடங்களிலும், புதுச்சேரியிலும்... Read more »

பொறுப்பேற்க சம்மதம் தெரிவித்தார் சசிகலா: ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே.சசிகலா, பொது செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சென்னை வானரகத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த... Read more »