Ad Widget

தொடரும் பயங்கரம் தமிழகத்தில் ஒரே நாளில் 10 பேர் படுகொலை

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் உயர்நீதிமன்ற வளாத்தில் வக்கீல் ஒருவர் வெட்டப்பட்டார். இந்தச் சம்பவங்கள் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. சென்னையில் வக்கீல்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டனர். அதன் உச்சக்கட்டமாக நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் இன்ஜினியர் சுவாதி...

ராஜீவ் கொலை வழக்கு: இலங்கைக்கு மாற்ற கோரிக்கை

இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்ற சாந்தன், தன்னை இலங்கைச் சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தூதரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதேவேளை, அவரது உணர்வை மதிக்க வேண்டும். செய்யாத குற்றத்திற்காக தழிழக சிறையில் உள்ள போது தனது தந்தையை இழந்துள்ளார். இலங்கை சிறையில் இருந்தால அவரது...
Ad Widget

இலங்கை அகதியை மனைவியுடன் தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவு

இலங்கை அகதி தம்பதியை பிரித்து தனித்தனி முகாம்களில் தங்கவைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இருவரையும் ஒரே முகாமில் தங்க வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இலங்கையைச் சேர்ந்த உதயகலா என்ற பெண் ஆள்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, மனுதாரர் மற்றும் அவரது கணவரை...

சொன்ன இடத்தில் பஸ்சை நிறுத்தாத நடத்துநர் கழுத்தை அறுத்த பயணி

விரும்பிய இடத்தில் பஸ்சை நிறுத்தாத நடத்துநரை பயணி ஒருவர் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், புத்தூரிலிருந்து, சென்னை கோயம்பேட்டுக்கு வந்த அரசு பஸ்சில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பஸ்சின் நடத்துனராக, திருத்தணி அருகே உள்ள செறுக்கலூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் ( 46) பணியில் இருந்துள்ளார். நடத்துநரின்...

ராம்குமார் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன..

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ராம்குமார் பற்றி வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் சுவாதி படுகொலை வழக்கில் போலீஸார் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால் மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது என வழக்கறிஞர் ராமராஜ் கூறியுள்ளார். நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் மென்பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை...

இலங்கை தம்பதிக்கு விளக்கமறியல் நீடிப்பு

தமிழகத்தில் அகதியாக இருந்து வந்த நிலையில், இலங்கைக்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயன்றபோது குழந்தையுடன் கைது செய்யப்பட்ட தம்பதியினரின் விளக்கமறியலை ஜூலை 20 ஆம் திகதி வரை நீடிப்பதாக வேதாரண்யம் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. வவுனியா, கல்விட்டை சந்தி, மகாரம்பைகுளம் பகுதியைச் சேர்ந்த துஷ்யந்த்தேவர் (23). அவரது மனைவி துவாரகா (24), ஒன்றரை...

மருத்துவமனை ஊழியர்களை மிரட்டி, தாக்க முயன்ற ஈழ அகதி கைது

இந்தியாவின் திருமங்கலத்தில் அரச மருத்துவமனையில் புகுந்து ஊழியர்களை மிரட்டி தாக்க முயன்ற, இலங்கை அகதியை பொலிசார் கைதுசெய்துள்ளனர். திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (32). இவரது மனைவி செல்வராணி (26). கடந்த 2ம் திகதி கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் செல்வராணி காயமடைந்தார். பின்னர் திருமங்கலம் அரசு...

காதல் விவகாரம் : இலங்கை அகதியான இளம் யுவதியை கழுத்தறுத்து கொல்ல முயற்சி

தமிழகத்தின் தாரமங்கலம் அகதிகள் முகாமைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து தமிழக ஊடகமான தினமணி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள பவளத்தானூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை வாழ் மக்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்....

சுவாதியை கொலை செய்த ராம்குமார் கைது

கடந்த 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் புகையிரத நிலையத்தில் படு கொலை செய்யப்பட்டார் சுவாதி என்ற தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர். இக் கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செங்கோட்டை மீனாட்சிபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான 24 வயது ராம்குமார், (தந்தை பெயர் பரமசிவம்) சுவாதி கொலை தொடர்பாக காவல்துறையினரால்...

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் தமிழக மீனவர்களின் 7 படகுகள் சேதம்

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஏழு படகுகள் சேதமடைந்துள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 2 ஆயிரத்து 148 மீனவர்கள் புதன்கிழமை இரவு மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகள் மீதே இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் மீனவர்களின்...

சுவாதியின் தோழர்களின் பரபரப்பு வாக்குமூலம்

பொறியலாளர் சுவாதியை கொன்ற கொலைகாரன் பற்றி சுவாதியின் தோழி பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். சுவாதியை கொலைகாரன் 2 நாட்கள் பின்தொடர்ந்து வந்ததை நேரில் பார்த்ததாக அவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் புகையிரத நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. சுவாதி கொல்லப்பட்ட சம்பவம் பற்றி தினம்தினம்...

சுவாதி கொலை வழக்கு-கொலைகாரன் அடையாளம் காணப்பட்டார்

சென்னை பெண் பொறியியலாளர் சுவாதியை கொலை செய்த கொலைகாரனை நுங்கம்பாக்கம் புகையிரத நிலைய `கேன்டீன்’ ஊழியர் காவல்துறைக்கு அடையாளம் காட்டினார். கொலை நடந்தது எப்படி? என்பது பற்றி அவர் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்து உள்ளார். கடந்த 24-ந் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் புகையிரத நிலையத்தில் சுவாதி யை துடிக்க, துடிக்க வெட்டி...

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 9 இலங்கையர் கைது

சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்லத் திட்மிட்டிருந்த 09 இலங்கையர்கள், தமிழ்நாடு, திருச்செந்தூர் தூத்துக்குடியில் இன்று செவ்வாய்க்கிழமை (28) கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுற்றுலா விசாவில் தமிழ்நாடு வந்துள்ள இந்த இலங்கையர்கள், அவுஸ்திரேலியா செல்ல முடியுமென நம்பவைக்கப்பட்டுள்ளனர் என ஓர் உயர் பொலிஸ் அதிகாரி, இந்திய ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இவர்களை, திருச்செந்தூரில் உள்ள ஒரு விடுதியில்...

சிறுமியை கடத்த முயன்ற வாலிபர் அடித்து கொலை

வடக்கு டெல்லியில் வீட்டில் இருந்த சிறுமியைகடத்த முயற்சித்த இளைஞரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடக்கு டெல்லியில் உள்ள கஜோரி காஸ் பகுதியில் இ பிளாக் வீட்டில் இருந்த ஒரு சிறுமியை இளைஞர் ஒருவர் கடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சுற்றி வளைத்த அக்கம் பக்கத்தினர் குழந்தை...

 நளினியை முன்விடுதலை செய்ய அதிகாரமில்லை: தமிழக அரசு பதில்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினியின் முன்விடுதலை கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்யுமாறு தமிழக அரசு கூறியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள தம்மை முன்விடுதலை செய்யுமாறு கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில்...

KFC உணவுகளுடன் இப்போது செல்போன் சார்ஜர் இலவசம்!

வறுக்கப்பட்ட சிக்கன் உணவுகளுக்கு உலகளவில் புகழ் பெற்ற நிறுவனமான கே.எப்.சி வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் பல்வேறு புதிய உத்திகளை கையாண்டு வருகிறது. சிக்கன் உணவுகளுக்கு உலகளவில் புகழ் பெற்ற நிறுவனமான கே.எப்.சி நிறுவனம் “5 in 1” திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. “Watt a Box” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள கே.எப்.சியின்...

பாரியளவு போதைப் பொருளுடன் இரு இலங்கை இளைஞர்கள் இந்தியாவில் கைது

இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் சுமார் 06 கோடி இந்திய ரூபா மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளுடன் 2 இலங்கை வாலிபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இலங்கைக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தில் போதைப் பொருள்...

பிரபாகரனை சந்திக்க விரும்பினாரா வீரப்பன்?

தமிழக, கர்நாடகா வனப்பகுதிகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த வீரப்பனை, தருமபுரியில் வைத்து, கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி சுட்டுக் கொன்றது தமிழக அதிரடிப்படை. வீரப்பன் கதையை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் விஜய்குமார் ஐ.பி.எஸ். இவர் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக...

செல்பி புகைப்படத்தால் 7 பேர் பலி -மிகப்பெரும் சோகம்!

கான்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜுகி மற்றும் கொலோன்கஞ்ச் பகுதிகளை சேர்ந்த 7 நண்பர்கள் கங்கை நதிக்கு குளிக்க சென்றனர். அங்கு கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நண்பர்களில் சிவம் என்ற வாலிபர் குளித்து கொண்டிருக்கும் போதே தனது ஸ்மார்ட்போனை கொண்டு ‘செல்பி’ எடுக்க முயன்றார். அப்போது...

பிரபாகரன் கொல்லப்பட்டபோது யார் ஆட்சி?

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் நேற்றய (21) அமர்வின் போது, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரம்பூர் மாவட்ட சட்டசபை உறுப்பினர் வெற்றிவேல், 'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட அவ்வமைப்பின் உறுப்பினர்கள் கொல்லப்படும்போது, தமிழகத்தின் ஆட்சியில் இருந்தவர்கள் யார்?' என்று கேள்வி எழுப்பியதை அடுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கடும்...
Loading posts...

All posts loaded

No more posts