யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக இரண்டு நீர் சுத்திகரிப்பு கருவிகள் Reverse osmosis plant பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கருவிகளை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணவர்த்தன தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இதற்கு... Read more »

கலாசார மத்திய நிலைய கட்டடப் பணிகள் ஆரம்பம்

இந்திய அரசாங்கத்தின் 1.7 பில்லியன் ரூபாய் நிதியுதவியில் அமைக்க தீர்மானிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு அருகில் இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றது. இதனால், புல்லுக்குளத்துக்கு அருகிலுள்ள வீதி மூடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பின்னர்... Read more »

யாழ்ப்பாணத்தில் அடிப்படை வசதிகளுடனான வீடுகளை அமைக்க திட்டம்

யாழ்ப்பாணத்தில் வீட்டுத் தேவையைக் கொண்டுள்ள அனைவருக்கும் அடிப்படை வசதிகளுடனான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பவுள்ளன. உலக வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மூலோபாய வழிமுறையிலான நகரஅபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இதற்பான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைவாக உத்தேச புதிய வீடமைப்புத் திட்டத்திற்கான வீட்டுப் பயனாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கை... Read more »

சுகாதார திடக்கழிவு நிலநிரப்புத் திட்டம் கீரிமலையில் அமையவுள்ளது

கீரிமலையில் சுண்ணாம்புக்கல் அகழ்வால் ஏற்பட்டிருக்கும் பாரிய குழியைக்கொண்ட பிரதேசத்தில் சுகாதாரமான திடக்கழிவு நிலநிரப்புத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (06.09.2016) யாழ் பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபையின் கேட்போர்... Read more »

யாழ் குடாநாட்டில் தீவுப் பகுதிகளுக்கு பாதுகாப்பான புதிய படகு சேவை

யாழ் குடாநாட்டில் உள்ள தீவுப் பகுதிகளுக்கு படகு போக்குவரத்தை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கு புதிய படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த புதியத் திட்டத்திற்கு 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே... Read more »

26 வருடங்களின் பின்னர் ஆனையிறவில் உப்பு அறுவடை

கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தின் உப்பு அறுவடை, கடந்த 26 வருடங்களுக்கு பின்னர் நேற்று (திங்கட்கிழமை) முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், கண்டாவளை பிரதேச செயலர் ரீ.முகுந்தன் ஆகியோர் கலந்துகொண்டு அறுவடையினை ஆரம்பித்து வைத்துள்ளனர். இவ் வருடம் 800 மெற்றிக்தொன்... Read more »

இந்திய முதலீடு எமது உறவுகளான தமிழருக்கே!

இந்திய முதலீட்டாளர்களால் தெல்லிப்பளையில் அண்மையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட அலுமினியத் தொழிற்சாலையால் உடனடியாக 50 பெண்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளமுடிந்தது. அந்தத் தொழிற்சாலை மேலும் விரிவாக்கப்பட்டு இன்னும் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும்... Read more »

காக்கைதீவில் கழிவுநீர் பரிகரிப்பு நிலையம்:அமைச்சர் ஐங்கரநேசன் அடிக்கல் நாட்டி வைத்தார்

யாழ் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட வீடுகளில் இருந்தும் விடுதிகளில் இருந்தும் சேகரிக்கப்படும் கழிவுநீரைப் பரிகரிப்பதற்குரிய நிலையத்துக்கான அடிக்கல் காக்கைதீவில் நேற்று திங்கட்கிழமை (22.08.2016) நாட்டப்பட்டுள்ளது. ரூபா 18.5 மில்லியன் செலவில் அமையவுள்ள இக்கழிவுநீர் பரிகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல்லை வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக... Read more »

தெல்லிப்பளையில் அலுமினியச் தொழிற்சாலை திறந்துவைப்பு!

ந்தியத் தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்று இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் தெல்லிப்பளை அம்பனைப் பிரதேசத்தில் அலுமினியத் தொழிற்சாலையொன்றை திறந்துவைத்துள்ளது. இந்நிகழ்வானது, பிரபல இந்திய, இலங்கை கம்பனிகளின் இயக்குனர் தி.தில்லைராஜ் தலைமையில் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு... Read more »

நாட்டின் முன்னேற்றத்திற்கு நோர்வே அரசாங்கம் தொழில்நுட்ப உதவி

நாட்டின நீர் மின்சார உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு தொழிநுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு நோர்வே பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க் நேற்று (12)... Read more »

கிளிநொச்சியிலும் லைக்காவின் நிதிப் பங்களிப்புடன் மழை நீர் சேகரிப்புத் திட்டம் ஆரம்பம்

கிளிநொச்சி பூநகரி மக்களிற்கான மழைநீர் சேமிப்பு திட்டத்தினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. விசேட வானூர்தியில் வந்திறங்கிய முன்னாள் ஜனாதிபதி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து... Read more »

கிழக்கில் எதிர்ப்பு: நீரியல் வளப்பண்ணை வட மாகாணத்திற்கு மாற்றப்பட வாய்ப்பு

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மத்திய அரசினால் அமைக்கப்படவுள்ள நீரியல் வளப் பண்ணைக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகள் காரணமாக அப்பண்ணை வட மாகாணத்திற்கு மாற்றப்படலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு அறிவித்துள்ளது மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இப்பண்ணைக்கு மாவட்ட... Read more »

வடக்கில் முதலீட்டாளர் மாநாடு : புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடல்!

சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் வடக்கில் முதலீட்டாளர் மாநாடொன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அது தொடர்பாக புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நல்லூர் உற்சவத்தின்போது வடக்கிற்குப் பயணம் செய்யும் புலம்பெயர் சமூகத்துடன் இது குறித்துக்... Read more »

முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் திறந்துவைப்பு

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் நேற்று புதன்கிழமை (20.07.2016) திறந்துவைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் பிறைஸ் கட்செசன், இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன், வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இணைந்து இதனைத் திறந்துவைத்துள்ளனர். போரின் காரணமாகச் செயற்பாடுகள் அற்றிருந்த... Read more »

பிராந்திய விமான நிலையமாக பலாலியை மாற்றுவதில் இந்தியா தீவிர

பலாலி விமானத்தளத்தை பிராந்திய விமான நிலையமாக பயன்படுத்துவது தொடர்பில் களஆய்வை இந்தியா மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாலி விமானத்தளம் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பலாலி விமானத்தளத்தை அபிவிருத்தி செய்வதற்கான களஆய்வுகளை இந்திய விமான நிலைய அதிகார சபை மேற்கொண்டு வருவதாக... Read more »

யாழில் தொழில் அலுவலகம் அங்குரார்பணம்

யாழ்ப்பாணம் தொழில் அலுவலகத்தின் புதிய அலுவலக அங்குரார்பண நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை (08), யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க... Read more »

ஆனையிறவில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை

கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான... Read more »

தனிமனித முயற்சியில் தலா 3 மில்லியனில் 15 வீடுகள்!!

இராசையா குவேந்திரன் எனும் தனிமனிதனின் முயற்சியாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள ராஜா பிளாசா மாதிரிக்கிராமம் பயனாளிகளிற்கு எதிர்வரும் 23ம் திகதி வியாழக்கிழமை கையளிக்கப்படவுள்ளது. கோண்டாவில் கிழக்கை சேர்ந்த அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையம், குமரன் விளையாட்டுக்கழகம் என்பவை இணைந்து உயர்த்தும் கைகள் வேலைத்திட்டத்தின் கீழ் நிலாவரை... Read more »

துரையப்பா விளையாட்டரங்கம் திறந்துவைப்பு

இந்திய நிதியுதவியுடன் புதுப்பித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள துரையப்பா விளையாட்டு மைதானத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கூட்டாக இணைந்து திறந்துவைத்துள்ளனர். யாழ். நகர முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவின் பெயர் சூட்டப்பட்ட குறித்த மைதானம் கடந்த கால யுத்த சூழ்நிலை... Read more »

நல்லூர் பிரதேச சபையால் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

நல்லூர் பிரதேச சபையின் 10 மில்லியன் ரூபாய் நிதியிலிருந்து திருநெல்வேலி பொதுச்சந்தையின் வாகனத்தரிப்பிடம் அமைத்தல் மற்றும் கொக்குவில் பொதுநூலகம் அபிவிருத்தி பணிகள் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன. திருநெல்வேலி சந்தைக் கட்டடத்தின் தரைப் பகுதியிலுள்ள வாகனத் தரிப்பிடம் சிறிய இடத்தில் வசதியீனங்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. நாளாந்தம்... Read more »