வீதி புனரமைப்புக்கு 27 மில்லியன் ஒதுக்கீடு: நல்லூர் பிரதேச சபை தவிசாளர்

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட 56 வீதிகள் 27 மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.வசந்தகுமார் வியாழக்கிழமை தெரிவித்தார். Read more »

யாழ். நாவாந்துறை வீதி புனரமைப்பு

யாழ். நாவாந்துறை பகுதி வீதிகளுக்கு தார்ரிட்டு செப்பனிடும் பணி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.புறநெகும ‘நெல்சிப்’ திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள், வடிகால்கள் அபிவிருத்தி பணிகளின் கீழ் யாழ். மாநகர சபையினால் நாவாந்துறை கமால் வீதி, வைரவர் வீதி, மாவடி வீதி போன்ற வீதிகள் தார் இட்டு... Read more »

குடிநீர் தாங்கி அமைப்பதற்கு அடிக்கல்

கொழும்புத்துறை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் நோக்கில் பிறவுண்ஸ் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் குடிநீர் தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றுள்ளது. கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் ஐந்து இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள தண்ணீர் தாங்கி அடிக்கல் நடும்... Read more »

ஏ – 9 வீதி புனரமைப்பு பெப்ரவரிக்குள் நிறைவு

ஏ – 9 வீதி புனரமைப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாத்திற்குள் நிறைவு பெறும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பணிப்பாளர் மரியதாசன் தெரிவித்தார். யாழ். மாநகர சபையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற வீதி அகலிப்பின் போது பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள்... Read more »

பாசையூர் இறக்குதுறை நிர்மானப்பணிகள் துரித கதியில்

ஐ.ஓ.எம் நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடற்றொழில் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வருமம் பாசையூர் இறக்குதுறை நிர்மாண அபவிருத்திப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. நீண்ட காலமாக பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பாசையூர் கடற்தொழிலாளர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 50 மில்லியன் ரூபா செலவில் இந்த... Read more »

இலங்கையின் செயற்கைக்கோள் விண்ணுக்கு!

இலங்கையின் தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) நாளை மறுதினம் வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்தே எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள “சுப்றீம்சற்” விண்கலத்தின் முதல்பகுதி... Read more »

வடக்கிற்கு புகையிரதம் பணிகள் துரித கதியில்

வடக்கிற்கான புகையிரதப் பாதைகள் நிர்மாணப்பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வடபகுதி புகையிரத பாதையின் நிர்மாணப் பணிகள் 185 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. Read more »

ஜப்பானிய தூதுவர் நோபுஹிட்டோ ஹோபு தெல்லிப்பளை மீள்குடியேற்ற மக்களுக்கு உதவி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் நோபுஹிட்டோ ஹோபு தெல்லிப்பளை மீள்குடியேற்ற மக்களுக்கு குடிநீர் வசதி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்களை; நேற்றய தினம் சம்பிரதாய பூர்வமாக வழங்கி வைத்தார். தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீள்குடியேற்ற பகுதியில் சமூக செயற்பாட்டு மையத்தின் ஊடாகவும்... Read more »

கிளிநொச்சி யாழ். நீர்வழங்கல் மற்றும் சுகாதார திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபா பேர் நேரடியாக நன்மை பெறவுள்ளனர்.

கிளிநொச்சி யாழ். நீர்வழங்கல் மற்றும் சுகாதார திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபா பேர் நேரடியாக நன்மை பெறவுள்ளனர். குடிதண்ணீர் வழங்கல் மூலம் சுமார் 3 லட்சம் பயனாளிகளும் கழிவு நீர் அகற்றல் மூலம் 80 ஆயிரம் பயனாளிகளும் நீர்ப்பாசனம் மூலம்... Read more »

வடக்கில் 252 கி.மீ. நீளமான ரயில் பாதையை இந்தியா புனரமைக்க நடவடிக்கை

இலங்கையின் வட பகுதியில் மதவாச்சி – யாழ்ப்பாணம், காங்கேசன்துறை இடையே 252.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிக நீளமான ரயில் பாதை போரினால் அழிவடைந்து விட்டது.இப்போது தமிழர் பகுதிகளில் புனரமைப்பு பணிகள் இந்திய நிதியுதவியுடன் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 252 கி.மீ. நீள... Read more »

வடபகுதியில் உயர் கல்வியை மேம்படுத்த சிறந்த செயற்திட்டங்கள்!

வட பகுதியில் உயர் கல் வித்துறையை மென்மேலும் மேம்படுத்துவதற்கு தொடர்ந் தும் நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படுமென உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இணை சுகாதார விஞ்ஞான கற்கைகள் பிரிவுக்கான புதிய கட்டடத்தை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு... Read more »

கிளிநொச்சியில் விவசாய ,பொறியியல் பீடங்களுக்கான காணியைத் துப்பரவாக்கும் சிரமதானத்தில் 3000 பேர் வரையில் பங்கேற்பு!

கிளிநொச்சியில் அமையவுள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடங்களுக்கான காணியைத் துப்பரவாக்கும் மாபெரும் சிரமதானப் பணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் வரையில் உணர்வுபூர்வமாகப் பங்கேற்று தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.  Read more »

பா.உறுப்பினர் சி.சிறீதரனால் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டம்!- 2012ல் யாழ் மற்றும் கிளிநொச்சிக்கு பல்வேறு திட்டங்கள்

பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டம் 2012ன் கீழ் பா.உ சிறீதரனால் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பா.உறுப்பினரின் செயலாளர் பொன்.காந்தன் அறிவகம் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.கல்வி, முன்பள்ளி, விளையாட்டு, குடிநீர், சனசமூக நிலைய அபிவிருத்தி, நூலகம்,... Read more »

கைதடி மத்திய மருந்தகத்தை அகற்றி வடமாகாண சபைத் தலைமையகம் அமைக்கும் திட்டம்:

கைதடி மத்திய மருந்தகம் அமைந்துள்ள இடத்தில் வடமாகாண சபையின் தலைமையகம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் அந்த பராமரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு தற்காலிகமாக இடம் மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.ஏ9 வீதியில் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி ஆகிய நகரங்களில் இருந்து அண்ணளவாக 10... Read more »

நல்லூரில் நல்ல வருமானம்!; மாநகர முதல்வர் மகிழ்ச்சி

கடந்த ஆண்டிலும் பார்க்க இந்த ஆண்டு நல்லூர் உற்சவ காலத்தில் யாழ். மாநகர சபைக்கு 20 லட்சம் ரூபா மேலதிக வருமானம் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா. நல்லூர் உற்சவகால செயற்பாடுகள் இம்முறை முன்னைய காலங்களைவிட சீராகவும் சிறப்பாகவும் இடம்பெற்றி ருந்ததாகவும்... Read more »

பனை ஆராய்ச்சி நிலையத்தை புனரமைப்பின் பின்னர் திறப்பு

வடக்கில் பனை வளம் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் இந்தப் பனை ஆராய்ச்சி நிலையத்தைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளைப் பனை அபிவிருத்திச் சபை மேற்கொண்டது.கைதடியில் மீளப் புனரமைக்கப்பட்டு வரும் பனை ஆராய்ச்சி நிலையத்தை இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்த் திறந்து வைக்கவுள்ளார்.இந்திய அரசின் நிதியுதவியுடன்... Read more »

காங்கேசன்துறை சீமெந்து ஆலை வருட இறுதியில் உற்பத்திகளை ஆரம்பிக்கவுள்ளது

1950 ஆம் ஆண்டில், முன்னாள் கைத்தொழில் அமைச்சர் ஜி.ஜி. பொன்னம்பலத்தினால் அமைக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து ஆலை, இந்த வருட இறுதியில் தமது உற்பத்திகளை ஆரம்பிக்கவுள்ளது.அரச சொத்து மற்றும் கைத்தொழில் அபிவிருத்தித்துறை அமைச்சின் செயலாளர் விலி கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். போர் காரணமாக பாதிக்கப்பட்ட... Read more »

பளை வரை வந்தது லக்ஸபான மின்சாரம்

20 வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் லக்ஸபான மின்சாரம் நேற்று முதல் பளைப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக 91ம் ஆண்டுக்குப் பின்னர் லக்ஸபான மின்விநியோகம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது. Read more »

யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு அடிக்கப் போகிறது அதிர்ஷ்டம்; அதி நவீன நகரத் திட்டத்துக்கு தெரிவு

இலங்கையில் பிரதேச அமைப்பியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள 15 நகரங்களை அதி நவீன வசதிகள் கொண்ட முன்மாதிரி நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நகரங்களும் அதி நவீன... Read more »

சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ADSL புரோட்பாண்ட் இணைய சேவைகளில் தடங்கல்!

சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ADSL புரோட்பாண்ட் இணைய சேவைகளில் நாடுமுழுவதிலும் கடந்த வாரத்தில் இருந்து தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இணைப்பு வகைகளில் ஒரு சில தவிர்ந்த ஏனையவற்றில் இந்தத்தடங்கல் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது. கணக்குகளுக்கான கடவுச்சொல் பயனாளர் சொல் ஆகியவற்றினை பரிசோதிக்கும் சேவரில்... Read more »