காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி!

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 45.27 மில்லியன் (ரூபா 6.9 பில்லியன்) அமெரிக்க டொலர் நிதியினை இந்தியா அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை புதுடில்லியில் இந்திய ஏற்றுமதி வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளர் டேவிட் றஸ்குன்கா (David Rasquinha) மற்றும் நிதியமைச்சின் திறைசேரியின் செயலாளர்... Read more »

இலங்கையின் மிக நீளமான மேம்பாலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் திறந்து வைப்பு!

இலங்கையின் மிக நீளமான மேம்பாலம் என கருதப்படும் இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் இன்று (திங்கட்கிழமை) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் இந்த பாலம் திறந்து வைவக்கப்பட்டுள்ளது. இராஜகிரிய பாலத்தின் நிர்மாணப்பணிகள் இவ்வருட... Read more »

காங்கேசன்துறை-சிதம்பரம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்!

காங்கேசன்துறைக்கும், இந்தியாவின் சிதம்பரத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்.ஆளுநனர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தொவிக்கையில், ‘காங்கேசன்துறைக்கும், சிதம்பரத்திற்கும்... Read more »

திட்டங்களை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்தாவிடின் தவறவிட்டுவிடுவோம்: என்.வேதநாயகன்

மத்திய அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கின்ற திட்டங்களை விரைந்து செயற்படுத்தி அவை மக்களை சென்றடையும் வகையில் நடைமுறைப்படுத்தாவிடின் அவற்றை தவறவிட்டு விடுவோம் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்தார். 2018 ஆம் ஆண்டிற்கான அரச கரும சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று... Read more »

யாழ்-கிளிநொச்சி குடிநீர் விநியோகத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 27கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி

ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம், யாழ் கிளிநொச்சி நீர் விநியோகத்திட்டம் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான மூன்று ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கமும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் கைச்சாத்திட்டுள்ளன. இதன் பெறுமதி 27 கோடி அமெரிக்க டொலர்களாகும். ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம். தெற்கு, மத்திய. சப்ரகமுவ வடமேல்... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் 1359 மில்லியன் ரூபா செலவில் 2ஆம் கட்ட நிர்மாணப்பணிகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு... Read more »

கடற்படைத் தளபதியால் ஓய்வு விடுதி திறந்து வைப்பு!

வளலாய் வடக்கில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்.மறைமாவட்ட குருக்களுக்கான ஓய்வு விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் கடற்படைத் தளபதி ரவீஸ் சின்னையா ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்படி விடுதியினைத் திறந்து வைத்துள்ளனர். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வடக்கு கடற்படைத் தளபதியிடம்... Read more »

நோர்வே நாட்டின் உதவிகள் தொடரும்: யாழ். அரசாங்க அதிபர்

யாழ்.மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் திட்டங்களைத் தொடர்ந்தும் நோர்வே அரசாங்கம் முன்னெடுக்குமென நோர்வே உறுதியளித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) காலை விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசாட்சதர் (thorbjorn gausadaether) மற்றும்... Read more »

50 ஆயிரம் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பம்!

வடக்கு மற்றும் கிழக்கில் அரசினால் 50 ஆயிரம் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்திற்கு எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி கேள்வி மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளதாக தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். குறித்த வீடமைப்பு திட்டம் தொடர்பிலான மதிப்பீடுகளை மேற்கொண்டு, திட்டத்தை... Read more »

யாழில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை!

யாழ். மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக நீரை சேகரிக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வடமராட்சி களப்புக்கு அருகில் 78 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் மழை நீரை சேகரித்து பாதுகாப்பாக பயன்படுத்துவதே அந்த திட்டம் எனவும் பிரதமரின் அலுவலகம்... Read more »

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு 100 கோடி ரூபா!!

பலாலி விமான நிலையத்தை 100 கோடி ரூபா செலவில், அபிவிருத்தி செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலாலி பிரதேச உள்ளுராட்சி அமைப்புக்கள், இருக்கும் நிதியினை கொண்டு வானூர்தி நிலையத்தை முழு அளவிலான சிவில் வானூர்தி நிலையமாக மாற்ற வேண்டும்... Read more »

வடமாகாண வைத்தியசாலைகள் அபிவிருத்தி

வடக்கு மாகாணத்தில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. வடமாகாணத்தில் உள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குதல் மற்றும் பொதுமக்கள் மீள குடியமர்த்தப்படும் பிரதேசங்களில் சுகாதார அடிப்படை வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கமைவாக இந்த பிரதேசத்தில்... Read more »

இலங்கை, இந்திய கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு தமிழக அரசு நடவடிகை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொழும்பு – தூத்துக்குடிக்கு இடையில் இருந்து வந்த கப்பல் சேவையானது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் குறித்த கப்பல் சேவையை... Read more »

குப்பையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் இலவசமாக விநியோகம்: ஜனாதிபதி

குப்பையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் நாட்டினது விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக குப்பைகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், கூட்டு உரம் தயாரிக்கவும் நடவடிக்கைகளை ஆரம்பித்து இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை... Read more »

குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் இலங்கையின் முதலாவது இரண்டு கருத்திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) கெரவலபிடியவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கழிவுகளை முறையாக அகற்றாத காரணத்தினால் கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது. இதற்கு நிலையான தீர்வை... Read more »

வடமாகாணத்திலும் ஜேர்மன் பயிற்சி நிலையம்

இலங்கை உற்பத்திகளுக்கு ஜேர்மனியிலும், ஜேர்மன் உற்பத்திகளுக்கு இலங்கையிலும் சிறந்த கிராக்கி நிலவுவதாக ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொவாட தெரிவித்தார். எதிர்காலத்தில் வடமாகாணத்திலும் பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஜேர்மன் எதிர்பார்த்துள்ளதாகவும் தூதுவர் தெரிவித்தார். ஜேர்மன் இலங்கையில் பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகிள்றமை குறிப்பிடத்தக்கது.... Read more »

சீன- இலங்கை துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்து

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இலங்கை அரசாங்கமும், சீன மேர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனமும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பங்காளர்களாக மாறியுள்ளன. தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டு எதிர்க் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல்வேறு அமைப்புக்களின்... Read more »

வட. மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜப்பான் நடவடிக்கை

வட. மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கான நிதிவழங்கலை 91 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலக் கண்ணிவெடிகளை அகற்றுதல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நிதியளிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனூடாக நிலக்கண்ணிவெடி அச்சுறுத்தலை நீக்கி, இடம்பெயர்ந்த மக்களை... Read more »

பெரும் கடல்பரப்பில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம்

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மருதங்கேணியில் இருந்த தாழையடி பெரும் கடல்பரப்பில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.... Read more »

வடக்கு விவ­சாய அபி­வி­ருத்­திக்கு 135 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கீடு

வடக்கு மாகாண விவ­சாய அபி­வி­ருத்­திக்கு “மாகா­ணத்­துக்­கான குறித்து ஒதுக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி நன்­கொடை நிதி­மூ­லம் 135 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கீடு செய்யப்பட் டுள்ளது. இந்த நிதி யாழ்ப்­பா­ணம் மன்­னார் வவு­னியா, முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளுக்­கும் பகிரப்படும். அந்த நிதியில் 18 வகை­யான விவ­சாய... Read more »