Ad Widget

கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவித புதிய விகாரை கட்டுமானப்பணிகளும் நடைபெற இடை நிறுத்தம்.

இன்று காலை 11.30 மணி முதல் 1 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான தமிழ் எம்பிக்கள் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்  நடைபெற்ற கூட்ட முடிவுகளின் அடிப்படையில் கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவித புதிய விகாரை கட்டுமானப்பணிகளும் நடைபெற இடை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 32 பேர் கொண்ட தொல்பொருளாராட்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை...

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் யாழ் மாநகரசபை அமர்வு! (Live Video)

https://www.facebook.com/VishnuTNPF/videos/773120919752637/ https://www.facebook.com/VishnuTNPF/videos/445845889302341
Ad Widget

முறையற்ற 5G திறன் கம்பங்களுக்கு எதிராக மாநகரசபையில் போராட்டம்

வெளிப்படைத்தன்மையற்ற ஆபத்தை விளைவிக்கும் திறன் கம்பங்கள் வேண்டாம் எனக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று  18.07.2019 வியாழன் காலை 09 மணிக்கு யாழ். மாநகரசபை முன்றலில்  யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் இணையம் ஏற்பாடு செய்திருந்தது யாழ் மாநகரசபை முன்பாக இடம்பெறும் எதிர்ப்பு போராட்டத்தில்  மக்கள் கலந்து தம் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.   மாநகரசபை...

பலாலி விமான நிலைய வேலைவாய்ப்புக்கள் – விண்ணப்ப முடிவுத்திகதி 26.7.2019

புதிதாக கட்டப்படும் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான  பணிநிலை வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கான முடிவுத்திகதி 26.07.2019  ஆகும் விண்ணப்ப மாதிரிகள் மற்றும் விபரங்களை இங்கே காணலாம் விண்ணப்ப மாதிரிகள்  https://airport.lk/aasl/reach_us/careers.php

வடக்கு வட்ட மேசை கலந்துரையாடலின் இரண்டாவது கலந்துரையாடல் இன்று (18) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில்

வடக்கு வட்ட மேசை கலந்துரையாடலின் (Northern Province Round Table) இரண்டாவது கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இன்று (18) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக கௌரவ...

கி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் மன்னாரில் கண்டுபிடிப்பு!

மன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை (இணைப்பாளர் தொல்லியல்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் உதவி விரிவுரையாளர், மாணவர்கள் மேற்கொண்ட களஆய்வில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாலயம் அமைந்துள்ள பிரதேச பற்றியும் அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றியும் பாளி,சிங்கள இலக்கியத்தில் வரும் “குருந்தி” என்ற இடமே இதுவாக இருக்கலாம்...

செம்மலையில் ராஜமகா விகாரையின் விகாராதிபதி மீண்டும் அட்டகாசம்!

செம்மலை பழையநீராவியடி பிள்ளையார் கோயிலில் நந்தி கொடிகளை அறுத்தெறிந்து குருகந்த ராஜமகா விகாரையின் விகாராதிபதி மீண்டும் அட்டகாசம்! முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. கடந்த (06.07. 2019) அன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில்...

எமது பாதுகாப்பிற்கு நாம் ஆயுதம் தூக்கவும் தயார் என இளைஞர்கள் நிரூபித்துள்ளனர்- சித்தார்த்தன் எம்பி

எமது பாதுகாப்பிற்கு எப்ப வேண்டுமானாலும் நாம் ஆயுதம் தூக்கவும் தயாராகவே இருக்கின்றோம் என்பதனை எமது மாவட்ட இளைஞர்கள் பிரதமரின் கண் முன்னாலேயே நிரூபித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு கடந்ந 15 ஆம் திகதி வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் 125...

பெண்பிள்ளைகளைப் பெற்றவர்கள் தமது பிள்ளைகளை வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களுக்கு திருமணம் முடித்து வைக்கவே விரும்புகின்றனர்.

“இது போர்க்காலம் இல்லை. வழமை நிலை திரும்பியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் மீண்டும் எம்மவர் வெளிநாடு செல்ல வேண்டுமா என்று கேள்வி எழுகின்றது. எல்லோரும் வெளியேறத் தலைப்பட்டால் வேற்று இனத்தவர்கள் வந்து இங்கு குடியேறுவதை நாம் எப்படி தடுக்க முடியும்? எமது மக்கள் இங்கு நிலைத்து நின்று சாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று...

நாயை கட்டிப்போட ரணிலுக்கு ஞானசாரர் எச்சரிக்கை

தயவுசெய்து எம்மிடம் கன்னத்தில் அறைவாங்குவதற்கு முன்னர் அந்த நாயை(இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க) கட்டிப் போடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொள்கின்றேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இந்த நாட்டில் 2500 வருடங்கள் மதப் போதனை செய்து வருகின்ற பௌத்த பிக்குகளுக்கு செய்ய முடியுமான...

அமைச்சுப் பதவியை ஏற்க எடுத்த தீர்மானம் ஏகமனதானது பௌஸி தெரிவிப்பு

அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் அந்தப் பதவிகளைப் பொறுப்பேற்பதற்கு ஏகமனதாகத் தீர்மானம் எடுத்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறுவதில் எவ்வித உண்மைகளுமில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும் அமைச்சுப்...

சொந்த மண்ணில் உலகக் கிண்ணத்தை முதன்முறையாக கைப்பற்றியது இங்கிலாந்து

உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முதல்முறையாக உலக கிண்ணத்தை கைப்பற்றியது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்பத்தை தேர்வு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக...

கல்முனை தமிழ் (வடக்கு) பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுதல் சம்பந்தமான ஆவணைங்களை சுமந்திரன் வெளியிட்டார்

கல்முனை தமிழ் (வடக்கு) பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுதல் சம்பந்தமாக பல பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதால்  இது தொடர்பிலான ஆவணங்களை வெளிப்படுத்துகிறேன் என்று கூறி  சுமந்திரன் தனது முகப்புத்தகத்தில் சில ஆவணங்களை  வெளியிட்டிருக்கிறார். ஜூலை 10, 11 ஆம் திகதியிடப்பட்ட கடிதங்கள் முறையே நிதி அதிகாரம் வழங்குவதும், கணக்காளருக்கான ஆளனி அனுமதியுமாகும் என அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிஉயர் வேகத் தொலைத்தொடர்புக் கம்பங்களை மின்விளக்குக் கம்பங்களாகக் காட்டி யாழ் மாநகரசபை மக்களை முட்டாள்களாக்கியுள்ளது-பொ.ஐங்கரநேசன் காட்டம்!

செல்போன்களில் படம் பிடிக்கும் கமெராக்கள் மேலதிக வசதியாக இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கமெராக்களில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லமுடியாது. செல்போன்களில் வானொலி கேட்கமுடியும் என்பதற்காக அதனை வானொலியில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகக் கூற முடியாது. அதே போன்றுதான் தொலைத்தொடர்புக் கம்பங்களில் மின்விளக்குகளைப் பொருத்திவிட்டு மின்விளக்குக் கம்பங்களில் மேலதிகமாகத் தொலைத்தொடர்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லமுடியாது. ஆனால், அதி உயர்வேகத்...

போர்க்குற்ற விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல வேண்டும்! அமெரிக்க உயர் அதிகாரிகளிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

"போர்க் குற்றங்கள் குறித்த பாராபட்சமற்ற விசாரணை ஒன்று நடத்தப்படுவது தமது படையினரது குற்றங்களையும், அதற்கான கட்டளைகளைப் பிறப்பித்த அதிகாரிகளினதும் தவறுகளையும் அம்பலப்படுத்திவிடும் என்பதாலேயே அரசாங்கம் கால அவகாசத்தைத் தொடர்ந்தும் பெறுகின்றது" எனக் குற்றஞ்சாட்டிய, வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரன், "அதனால், போர்க் குற்ற விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு...

எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தேசிய மாநாடு

தமிழ்த் தேசிய அரசியலில் சூழலியம் என்ற கோட்பாட்டை உள்வாங்கிப் புதியதோர் அரசியல் கட்சியாகப் பரிணாமித்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு  சனிக்கிழமை (06.07.2019) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியத் பசுமை இயக்கத்தின் தலைவர் திரு பொ.ஐங்கரநேசனின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் வடக்கு...

பிரபாகரன் தான் முடிசூட விரும்பவில்லை; தமிழ் முடிசூடவே விரும்பினார்

தமிழ்த் தேசியம் என்பது வெற்று அரசியற் கோசம் அல்ல. இந்த ஒற்றைச் சொல்லின் உள்ளே தமிழ் மக்களின் வாழ்க்கையே அடைந்து கிடக்கின்றது. இதில் நாங்கள் பேசுகின்ற எங்கள் தமிழ் மொழி, எங்கள் பண்பாடு, எங்கள் சுற்றுச் சூழல் யாவும் அடங்கியிருக்கின்றது. இவை தனித்தனியானபிண்டங்களல்ல. ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. இரத்த நாளங்கள் போல ஒன்றினுள் ஒன்று...

பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் உருவாகியது

பாடசாலையிலுள்ள பழைய மாணவர் சங்கங்கள் தொடர்பாக யாழ் வலயக் கல்விப்பணிப்பாளரினால் 23.05.2019ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தினால் பழைய மாணவர் சங்கங்களிற்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் வழிவகைகளை ஆராயவும், எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடவும் வடமாகாணத்தில் உள்ள பழைய மாணவர் சங்கங்களின் பிரதானிகள் 07.07.2019 ஞாயிறு யாழ்பாணத்தில்  ஒன்றுகூடினர். பழைய மாணவர் சங்கங்களின்...

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு

தமிழ்த் தேசிய அரசியலில் சூழலியம் என்ற கோட்பாட்டையும் உள்வாங்கிப் புதியதோர் அரசியல் கட்சியாகப் பரிணாமித்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தனது முதலாவது தேசிய மாநாட்டை நாளை 06.07.2019(சனிக்கிழமை) அன்று நடாத்துகிறது. இம்மாநாடு அன்றைய தினம் மாலை 3.00 மணியிலிருந்து 6.00 மணிவரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்...

பலாலியில் இருந்து முதல் விமானம் அடுத்தமாதம் இந்தியாவுக்கு புறப்படும்!

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கென 19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை நடத்தக் கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை பலாலி விமான நிலையத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இரண்டு கட்டங்களாக...
Loading posts...

All posts loaded

No more posts