. webadmin – Page 2 – Jaffna Journal

தேரரின் தகனக்கிரியைக்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தோல்வி. நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்க மறுப்பு!

யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதின் உடலை தகனம் செய்வதற்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதிவழங்கி உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் – ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலினை யாழ்.முற்றவெளிப் பகுதியில் தகனம் செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு தடை விதிக்க... Read more »

விகடனில் 2012 இல் வெளியான பேட்டி பெண்போராளிகளை தவறாக பொதுமைப்படுத்தி சித்தரித்தமைக்கு மன்னிப்புக்கோருகின்றேன் -அருளினியன்

2012 ம் ஆண்டு ஆனந்த விகடனில் அநாமதேயமான  முன்னாள் போராளி ஒருவரின்   பேட்டி வெளியாகியிருந்தது அப்பேட்டியில் முன்னாள் போராளி ஒருவர் தான்பல்வேறு கொடுமைகளை சந்தித்து பாலியல் கொடுமைகளுக்கு உள்ளகிய நிலையில் வேறுவழியின்றி தற்போது  பாலியல் தொழில் செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் கூறியதாக வெளியாகயிருந்தது.... Read more »

சுமந்திரனின் கருத்துக்கு அரச மருத்துவர் சங்கம் பதிலடி

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றவாளிகளை விடவும் மிக மோசமாக செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் போது செய்த சத்தியத்தை மீறியே தொழிற்சங்க... Read more »

16வது தமிழ் இணைய மாநாடு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 25 26 27 திகதிகளில் கனடாவில் நடைபெறும்

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ‘தமிழ் இணைய மாநாடு’ இவ்வாண்டு கனடாவின் தொரண்டோ நகரில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் 27ம் திகதி வரை  நடைபெற உள்ளதாக ஏற்கனவே உத்தமம் அறிவித்திருந்தது. மாநாட்டு தலைவராக... Read more »

யாழ் இந்துவில் நாளை ஆசிரியர் மதிப்பளிப்பு

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில்  நாளை ஆசிரியர் மதிப்பளிப்பு  நிகழ்வு இடம்பெறஉள்ளது. 1996 ஆம் ஆண்டு உயர்தரப்பிரிவு பழைய மாணவர்களிால் இவ்விழா  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் 1988 தொடக்கம் 1996 வரையில்  கல்விகற்று 1996 உயர்தரப்பிரிவின் ஊடாக வெளியேறிய மாணவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் மாணவர்கள் பழையமாணவர்களால்... Read more »

சர்வேஸ்வரன் கல்வியமைச்சர்! அனந்தி புனர்வாழ்வு மீள்குடியேற்றம் கூட்டுறவு அமைச்சர்!

அமைச்சரவை இழுபறி முடிவுக்குவந்துள்ளது. சர்வேஸ்வரன் கல்வி விளையாட்டு பண்பாட்டு அலுவல்கள்  அமைச்சர்ராகவும்  அனந்தி சசிதரன்  புனர்வாழ்வு மீள்குடியேற்றம் சமூகசேவைகள் மகளீர் விவகாரம்  மற்றும் கூட்டுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு ஆளுனருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பில் முதலமைச்சர் ஆளுனருக்கு இன்று சிபாரிசுகளை வழங்கியுள்ளார். நாளை காலை 10 மணிக்கு... Read more »

கல்வி அமைச்சருக்காக தமிழரசுக்கட்சி ஆர்னோல்டை முன்மொழிந்துள்ளது.

வடக்கு மாகாணசபை விவாகரத்தில் பதவி விலகிய இரண்டு அமைச்சர்களின் இடத்திற்கான புதிய தெரிவு இழுபறியில் உள்ளது. ஏற்கனவே அவ்விரு அமைச்சுக்களையும் முதலமைச்சர் தனது பொறுப்பில் எடுத்துள்ள நிலையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராாவை கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்துரையாடியிருந்தார் இன்றைய... Read more »

மக்கள் சந்திப்பில் பொ.ஐங்கரநேசன் அவர்களின் விளக்கம்

வடமாகண சபை குழப்பத்தின் பின்னணி என்ன? 25.06.2016 அன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பொ.ஐங்கரநேசன் அவர்களின் விளக்கம் Read more »

அமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனீஸ்வரனை விசாரிக்க புதிய குழு நியமனம்

வடக்கு மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை நடத்துவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், நால்வர் அடங்கிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை நடத்துவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர்... Read more »

அவைத்தலைவருக்கும் முதல்வருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்கிறது .

வடக்கு மாகாணசபையின் 97 வது அமர்வு இன்று நடைபெற்றது. முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஆளுனரிடம் வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட நிலையிலும் இரண்டு அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளநிலையிலும் இரண்டு அமைச்சர்கள் விடுப்பில் செல்ல மறுத்தும் உள்ள நிலையில் இன்றைய அமர்வு சர்ச்சைகள் நிறைந்தாக இருக்கும் என... Read more »

நாளை முதலமைச்சர் கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களை தம்வசம் எடுத்துக்கொள்கிறார்.

முதலமைச்சர் அமைச்சுப்பதவிகளை தியாகம் செய்யுமாறு  கேட்டுக்கொண்டதற்கிணங்க  தமது இராஜினாமா கடிதங்களை விவசாய, மற்றும் கல்வி அமைச்சர்கள் ஒப்படைத்துள்ள நிலையில் நாளை (21) முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அந்த இருஅமைச்சுக்களையும் தம்வசம் எடுத்து ஆளுனர் முன் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார். குறித்த அமைச்சுக்கள் யாருக்கு வழங்கப்படும் என்பதில்... Read more »

முடிவின்றி தொடரும் விக்கி- சம்பந்தன் கடிதப்போர் !

வடமாகாணசபையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை தீர்க்கும் முகமாக முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இரண்டு அமைச்சர்களின் விடுப்பு தொடர்பாக அவர்கள் விசாரணைகளில் தடைகளை ஏற்படுத்த மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை தந்தால் அதனை சாதகமாக பரிசீலிப்பதாக நேற்றைய தினம் இரா சம்பந்தனுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதற்கு பதிலளித்த... Read more »

சிவிகே ஏன் கூட்டுறவு நியதிச்சட்டங்களை கிடப்பில் போட்டார் ? வெளியாகும் உண்மைகள்

கூட்டுறவு அமைப்புக்கள் பலவற்றின் மில்லியன் கணக்கான நிதி கூட்டுறவு கிராமிய வங்கிகளின் சமாசத்தில் வைப்பிலிட்ட போது அதன் தலைவராக இருந்த சீ.வி.கே பொதுச்சபையின் தீர்மானமின்றி தன்னிச்சையாக மில்லியன் கணக்கில் பிரமுக வங்கியில் வைப்பிலிட்டார். அவ் வங்கி திவாலாக மத்திய வங்கி சுவிகரித்து கொண்டது. தற்போதைய... Read more »

அம்பலமாகியுள்ள US கோட்டல் சதி! விசாரணைக்குழுவுக்கு விந்தன் வழங்கிய கடிதம் வெளியாகியது!

முதலமைச்சருக்கு எதிராக பின்னப்பட்ட  சதிவலை குறித்து மாகாணசபை உறுப்பினர் விசாரணைக்குழுவுக்கு வழங்கிய கடிதம் எமது செய்தித்தளத்திற்கு கிடைத்துள்ளது. இதன் பிரதி முதலமைச்சருக்கும் அவர் வழங்கியிருந்தமை காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் மாகாணசபை உறுப்பினர்களால் அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்  பிரேரணை தொடர்பில் முதலமைச்சருக்கு மாகாணசபை... Read more »

தெற்கு நிகழ்ச்சி நிரலுக்கமையவே எனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை -மக்கள் முன் முதலமைச்சர்

தெற்கு அரசின் சதித்திட்டம் ஒன்றுக்கு அமைவாகவே வடக்கு மாகாண சபையில் குழப்பங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாகவே என் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மகாண சபை முதலமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப்... Read more »

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும்.

வடக்கு மாகாண சபையின் சமகால நிகழ்வு தொடர்பாக   வினாவியபோது பா.உ சி.சிறீதரன்   மேற்கண்டவாறு தெரிவித்தார் அத்துடன் இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை 3.00 மணித்தியாலம் வரை முதலமைச்சருடன் நானும் மன்னார் பா.உ சாள்ஸ்சும் பேசியுள்ளோம் சம்மந்தன் ஐயாவுடனும் பேசியிருக்கிறேன் சம்மந்தன்... Read more »

அமைச்சர் சத்தியலிங்கத்தை அகற்றுவதில் முதல்வர் தீவிரம் – இன்றைய உரையில் தொனித்தது.

வடக்கு மாகாணத்தின் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு எதிரான கட்டாய விடுமுறைய இரத்துச் செய்து அவர்கள் அமைச்சர்களாக நீடிக்க வழிசெய்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் நேற்று நண்பகல் முதலமைச்சரைத் தொடர்புகொண்டு வலிறுயுத்தியுள்ளார். எனினும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் விடுமுறையை விட்டுக் கொடுக்க... Read more »

முதலமைச்சருக்கு அமைச்சர் ஐங்கரநேசன் உட்பட 16 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது

அவைத்தலைவர் தலைமயிலான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினரால் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி 18 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுனரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தை தொடர்ந்து ஆளுனர் முதல்வரின் பலத்தை நிரூபிக்குமாறு கேட்டிருந்தார் இதுவரைக்கும் முதலமைச்சருக்கு அமைச்சர் ஐங்கரநேசன் உட்பட 16 உறுப்பினர்களின்... Read more »

நிலமை எல்லை மீறிவிட்டது -முதல்வர் வருத்தம்!

இன்று காலை அமைச்சர் ஐங்கரநேசன் முதல்வர் ஏற்கனவே கேட்டுக்கொண்டதற்கிணங்க இராஜினாமா செய்வது தொடர்பில் முதல்வரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது அவர் அமைச்சருடன் மனந்திறந்து பேசியுள்ளார். அதன்போது அமைச்சர் ஐங்கரநேசன் தான் அவருக்கு தனது ஆதரவினை தொடர்ந்து வழங்குவதாக தெரிவித்திருந்திருக்கிறார். இதேவேளை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு... Read more »

இன்றைய வடக்குமாகாணசபை சிறப்பு அமர்வில்

வடக்கு அமைச்சர்களின் விசாரணை அறிக்கை மீதான சிறப்பு  96 வது அமர்வு இன்று காலை  ஆரம்பமாகியது. இந்த அமர்வில் எந்த விவாதமும் இல்லை என அவைத் தலைவர் அறிவித்தார் அதன்பின் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அமைச்சர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க ஆரம்பித்தனர். அமைச்சரவையே குற்றச்சாட்டுக்கான பதில் வழங்க வேண்டும். கல்வி... Read more »