. Editor – Page 9 – Jaffna Journal

சுமந்திரன் எம்.பியை கொலை செய்ய மீண்டும் முயற்சி?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்யும் நோக்குடன் முன்னாள் போராளிகள் சிலர், புலம்பெயர் தமிழர்கள் சிலரால் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர் என இராணுவ புலனாய்வுப் பிரிவு தகவல் வழங்கி 4 நாள்களுக்குள் கிளைமோர் குண்டு மற்றும் அதனை மறைந்திருந்து இயக்கும் கருவிகள் என்பன... Read more »

பட்டதாரிகளுக்கான அரச நியமனத்தை இடைநிறுத்த அமைச்சரவையில் வலியுறுத்து

பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வெட்டுப்புள்ளி முறைமையினால் சில மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர்கள் சிலர், வெட்டுப்புள்ளி விவகாரத்துக்கு தீர்வை வழங்கிய பின் நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தினர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை... Read more »

யாழ்.பல்கலை வவுனியா வளாக மாணவர்கள் 25 பேர் மொட்டையடிப்பு!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் 25 பேர் முதுநிலை மாணவர்களின் பகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்துக் கொண்டுள்ளனர். வவுனியா குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள சிகை ஒப்பனை நிலையம் ஒன்றிலேயே அவர்கள் 25 மாணவர்களும் மொட்டையடித்தனர். சிகை ஒப்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒரு மொட்டைக்கு... Read more »

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் கொடி, 20 கிலோ கிளைமோர், கிரினைட்டுகளுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் கொடியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை விடுதலைப்புலிகளின் கொடியுடன் மூவர் முச்சக்கர வண்டியொன்றில் பயணம் மேற்கொண்டவேளை அதனை மறித்து பொலிஸார் சோதனையிட்டனர். இதன்போது ஒருவர் கைது... Read more »

யாழில் தபால் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை விரிவுபடுத்தி, தபால் சேவை ஊழியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்துக்கு முன்பாக பந்தல் அமைத்து ஊழியர்கள் அனைவரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 6/2006... Read more »

கிளி. மக்களை அச்சுறுத்திய சிறுத்தையை அடித்துக்கொன்ற இளைஞர்கள்!

கிளிநொச்சி, அம்பாள் குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையொன்றை மடக்கிப்பிடித்த இளைஞர்கள் அதனை அடித்துக் கொன்றுள்ளனர். அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நுளைந்த சுமார் 4 அடி நீளமான குறித்த சிறுத்தை மக்களை அச்சுறுத்தியதுடன் இருவரை தாக்கியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக... Read more »

நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட், வடக்கு முதலமைச்சரை சந்திப்பு

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட், வடக்கு முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பானது இன்று (வியாழக்கிழமை) கைதடியில் இருக்கும் முதலமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது வடக்கு... Read more »

புலம்பெயர் தமிழர்கள் மேலும் 14 பேருக்கு இலங்கைக்குள் நுழைய தடை!!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 ஈழத் தமிழர்களின் பெயர் பட்டியலை சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தடைப் பட்டியலில் இடம்பெறும் 86 தனிநபர்கள் பட்டியலுடன் இந்த... Read more »

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்!

அனைத்துப் பட்டதாரிகளையும் பாதிக்காத வகையில் அரச நியமனம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக தொழில் உரிமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். நாடுமுழுவதுமுள்ள வேலையற்ற பட்டாரிகளில் 5000 பேருக்கு அடுத்த மாதமும் மேலும் 15 ஆயிரம்... Read more »

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கொழும்பில் கழுத்தறுத்துக் கொலை

யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், கொழும்பு கொட்டாஞ்சேனையில் வீடொன்றில் வைத்து கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவர்களே இந்தக் கொலையை செய்துள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகப் பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம்... Read more »

யாழ்ப்பாணத்தில் உலக யோகா தினம் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக யோகா தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது. இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்... Read more »

சுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி? விசாரணைகள் முடிவு!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாத வித்யா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக இனம் காணப்பட்ட சுவிஸ் குமார் தொடர்பிலான வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அந்தவகையில், விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் அறிவிக்கப்ட்டது. இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில்... Read more »

அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் ஊடகங்கள் தண்டிக்கப்படும்: ராஜித சேனாரத்ன எச்சரிக்கை

அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்... Read more »

மல்லாகம் துப்பாக்கிச்சூடு: 40 பேரை இலக்குவைத்து தேடுதல் வேட்டை!

மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அப்பகுதியில் பரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்றபோது கலகத்தில் ஈடுபட்ட 40 பேரை இலக்குவைத்தே இத்தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மல்லாகம் சகாயமாதா ஆலயத்தின்... Read more »

யாழில் இருவர் மீது பொலிஸார் சித்திரவதை!! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தடுப்புக்காவல் சித்திரவதை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றப் பிணையில் வெளிவந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சித்திரவதைக்குள்ளாகிய இருவரும் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன், அவர்கள்... Read more »

தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியும்!

போக்குவரத்து விதிமீறலுக்கான தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியுமென போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர். போக்குவரத்து விதி மீறலுக்கான தண்டப் பணத்தை 14 நாட்களுக்குள் தபாலகங்களில் செலுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. எனினும் தபால் ஊழியர்கள் கடந்த எட்டு நாட்களாக முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக... Read more »

சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படவில்லை!

மல்லாகம் இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்வதற்கான உத்தரவை நீதிவான் வழங்கவில்லை. அவர் பணியில் ஈடுபடுகின்றார்” இவ்வாறு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் தெல்லிப்பளைப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதியில்... Read more »

15 நிமிடங்களுக்குள் இளைஞனை வைத்தியசாலையில் சேர்த்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும்!

“பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் முதுகுப் பகுதியால் பாய்ந்த குண்டு இடது பக்க நெஞ்சுப் பகுதியால் வெளியே வந்துள்ளது. மற்றொரு குண்டு தோள்மூட்டுப் பகுதியால் சென்றுள்ளது. 15 நிமிடங்களுக்குள் அவரை வைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும்” இவ்வாறு சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில்... Read more »

சிறுவர்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜனாதிபதி

வீட்டிலும் பாடசாலைகளிலும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சித் திட்டமானது நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி, மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்... Read more »

மல்லாகம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒப்படைப்பு!

மல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் நேற்று இரவு (திங்கட்கிழமை) 7.15 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மல்லாகம், குளமங்கால் பகுதியைச் சேர்ந்த 28 வயதான பாக்கியராசா சுதர்சன் என்ற இளைஞனின் சடலமே உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா... Read more »