. Editor – Page 8 – Jaffna Journal

யாழ் செயலகம் முன் நஞ்சருத்தி தற்கொலை செய்துகொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்!

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி சொந்த மாவட்டத்துக்கு இடமாற்றம் கிடைக்காத விரக்தியில் யாழ்ப்பாணச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நஞ்சருந்தி உயிரை மாய்த்த சம்பவம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்குச் சென்று மேலதிக மாவட்டச் செயலரைச்... Read more »

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் குடியிருப்பை வைத்திருந்தார் என யாழ். மாநகர சபை உறுப்பினர் மீது குற்றச்சாட்டு

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுசூழலை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாண மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த வியாழக்கிழமை (20) சுகாதார துறையினர், பொலிஸ் உத்தியோகத்தர் சகிதம் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட... Read more »

யுத்தக் குற்றங்களை மறைப்பதற்கு ஜனாதிபதி நாடகம்: முதலமைச்சர் சி.வி. குற்றச்சாட்டு!

இலங்கை இராணுவத்தின் யுத்தக் குற்றங்களை மறைப்பதற்கே தமிழ் அரசியல் கைதிகளைப் பகடைக்காய்களாக பயன்படுத்துவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்... Read more »

தமிழரசுக்கட்சியின் அரசியல் பழிவாங்கலே என்மீதான வழக்கு: மணிவண்ணன்!

எனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மற்றொரு அரசியல் பழிவாங்கல் என யாழ். மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக... Read more »

பரீட்சார்த்திகளை அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை : ஆட்பதிவுத் திணைக்களம்

இவ்வருடம் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களில் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத பரீட்சார்த்திகளை உடனடியாக விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேசிய... Read more »

சமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை: சுமந்திரன்

சமஷ்டி முறைமையைச் சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இதுவரையான காலப்பகுதியில் நான் சிங்களப் பிரதேசங்களில்... Read more »

இனப்பிரச்சினைத் தீர்விற்கு தமிழ்க் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை: பிரதமர் ரணில்

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான யோசனைகளுக்கு தமிழ்க் கட்சிகளின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்க தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

அரசியல் கைதிகளுக்காக போராடுவது ஒவ்வொரு தமிழ் குடிமகனதும் கடமை: சிவாஜிலிங்கம்

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் குடிமகனதும் கடமை என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், அவர்களின் விடுதலையை... Read more »

முதியவரின் மோதிரங்களை அபகரித்துத் தப்பிக்க முயன்ற கர்ப்பவதிப் பெண் கைது!

தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த முதியவரின் மோதிரங்கள் இரண்டை கொள்ளையடித்துத் தப்பிக்க முயன்ற கர்ப்பவதிப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தெல்லிப்பளை வைத்தியசாலையில் இடம்பெறும் மாதாந்த சிகிச்சைக்காக நேற்றைய தினம் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அந்தவேளை வைத்தியசாலையில் வெள்ளை உடுப்புடன் சுமார்... Read more »

மதுபோதையில் மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்தவர் மோதியதில் இளம் குடும்பத்தலைவர் பலி!

புத்தூர் மீசாலை பிரதான வீதியில் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பத்தலைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புத்தூர் மீசாலை வீதியில் நடந்து சென்ற இளம் குடும்பத்தலைவர் மீது, மதுபோதையில் மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்தவர் பின்பக்கமாக மோதியதில் இந்த... Read more »

யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!!

‘வாய்ப்பேச்சில் நல்லிணக்கம் வதைப்பது அரசியல் கைதிகளையா?’ எனக் கோஷமெழுப்பி தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். மத்திய... Read more »

ஆர்னோல்டை நினைத்தாலே யூ.எஸ் ஹோட்டல் சதிதான் நினைவுக்கு வருகிறது -காக்கா அண்ணன்

உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் எனப்படும் மு.மனோகர் இன்று திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை நடத்தினால் நாளை ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்களை அந்தந்தப்... Read more »

கோட்டையைத் தந்தால் மக்களின் காணிகளை கையளிக்க தயார் – இராணுவம்

யாழ்ப்பாண கோட்டையை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் பல காணிகளை இராணுவம் மீள கையளிக்க தயாராக உள்ளது என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதனை தெரிவித்தார். அவர் அங்கு... Read more »

பிரான்ஸின் உயர் விருதான செவாலிய விருதை பெற்றார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!

பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மிகப் உயரிய விருதான செவாலியே விருது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையையும் அவர் பெறுகின்றார். பிரான்சின் தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அந்நாட்டு... Read more »

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் ஜனாதிபதி மைத்திரி!

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்திற்கு விஜயம் செய்து சமய நிகழ்வுகள் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். திருகோணமலை மாவட்டத்தில் பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் ‘சிரிசர பிவிசும’ மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.... Read more »

30 வருட யுத்தத்திற்கு செலவிட்ட பணத்தை மக்களிற்காக பயன்படுத்தியிருக்கலாம் – சம்பந்தன்

30 வருட யுத்தத்திற்கு செலவிட்ட பணத்தை மக்களிற்காக பயன்படுத்தியிருந்தால் நாம் முன்னேற்றம் அடைந்திருப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், “இந்த... Read more »

தமிழர்கள் மீதான படையினரின் பாலியல் சித்திரவதைகள் இலங்கையில் தொடர்கின்றன-ஜெனிவாவில் அறிக்கை

தமிழர்கள் அரச படையினரால் பாலியல் ரீதியிலான சித்திரவதைகளுக்கு உள்ளாவது இலங்கையில் தொடர்கின்றது என மனித உரிமை ஆர்வலர் யஸ்மின் சூக்காவின் அமைப்பான சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் தனது புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜெனீவாவில் இடம்பெற்றும்வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில்... Read more »

சாதாரண தர, உயர்த்தரப் பரீட்சைகளை டிசம்பரில் நடத்த தீர்மானம்!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சை ஆகிய இரண்டையும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே... Read more »

ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி

ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம். நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு... Read more »

திடீரென வாகனங்களை மறித்து யாழில் புகைப் பரிசோதனை!!

யாழ்ப்பாணத்தில் இன்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும், பொலிஸாரும் இணைந்து வாகனங்களுக்குப் புகைப் பரிசோதனையும், தரப் பரிசோதனையும் மேற்கொண்டனர். யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயில் முன்பாக வீதிகளில் பயணித்த வாகனங்கள் மறிக்கப்பட்டுச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புகைப் பரிசோதனையில் தோல்வியடைந்த வாகனங்களும், தரம் குறைந்த வாகனங்களும் அவற்றைச் சீர்... Read more »